அரசினர் மகளிர் கல்லூரி, கும்பகோணம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி
(அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, கும்பகோணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, கும்பகோணம் (Government Arts College for Women, Kumbakonam) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் தன்னாட்சி அனுமதியுடன் செயற்பட்டுவரும் மகளிருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1963ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2] தற்போது திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் தன்னாட்சி கல்லூரியாக இயங்கி வருகிறது.[3] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் (NAAC) பி+ தகுதியுடன் (2007ஆம் ஆண்டில்) செயற்பட்டு வருகிறது.[4] 2013ஆவது ஆண்டினை இக்கல்லூரி தனது பொன்விழா ஆண்டாகக் கொண்டாடியது.
குறிக்கோளுரை | முன்னேற்றத்திற்கான கல்வி |
---|---|
வகை | மகளிருக்கான அரசினர் தன்னாட்சி கலைக்கல்லூரி |
உருவாக்கம் | 1963 |
தலைவர் | தமிழ்நாடு அரசு |
முதல்வர் | முனைவர் து ரோசி |
அமைவிடம் | , , |
இணையதளம் | http://gcwk.ac.in |
வழங்கும் படிப்புகள்
தொகுஇக்கல்லூரியில் இருசுழற்சி முறையில் பின்வரும் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
முதுநிலைப் படிப்புகள்
தொகு- ஆங்கிலம்
- இயற்பியல்
- கணிதம்
- கணினி அறிவியல்
- புவியியல்
- பொருளியல்
- வணிகவியல்
- வரலாறு
- விலங்கியல்
- வேதியியல்
இளநிலைப் படிப்புகள்
தொகு- தமிழ்
- ஆங்கிலம்
- பொருளியல்
- வேதியியல்
- இளங்கலை வரலாறு
- வணிகவியல்
- புவியியல்
- கணிதம்
- கணினி அறிவியல்
- இயற்பியல்
- விலங்கியல்