அரசு நிசாமியா பொது மருத்துவமனை

அரசு நிசாமியா பொது மருத்துவமனை (Government Nizamia General Hospital) அரசு யுனானி மருத்துவமனை எனவும் பிரபலமாக அறியப்படும் இது இந்திய மாநிலமான தெலங்காணாவின் , ஐதராபாத்தில் அமைந்துள்ளது. இது பொது, மற்றும் யுனானி மருத்துவத்திற்கான மருத்துவமனையாகும். இது நிசாம்களின் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டது. இது வரலாற்று சிறப்புமிக்க சார்மினார் அருகே அமைந்துள்ளது. [1]

அரசு நிசாமியா பொது மருத்துவமனை (حکومت نظامیہ جنرل ہسپتال ( طبی داواکہان
தெலங்காணா அரசு
அமைவிடம் சார்மினார், ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா, 500002
அவசரப் பிரிவு இல்லை
படுக்கைகள் 180
நிறுவல் 1938
பட்டியல்கள்

வரலாறு தொகு

 
யுனானி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுதல். நிற்பவர்: ஏழாம் நிசாம் (இடது), நிதியமைச்சர் அக்பர் ஐதாரி (வலது)

நிசாமியா பொது மருத்துவமனை 1926இல் (1345 ஹிஜ்ரி வருடம்) ஐதராபாத்தின் கடைசி நிசாம் மிர் உஸ்மான் அலிகானால் கட்டப்பட்டது . [2]

மருத்துவமனை தொகு

மருத்துவமனையில் மகளிர் மருத்துவம், அறுவைச் சிகிச்சை, பல் மருத்துவம், கண் மருத்துவம் , நோயியல் ஆகியவை அடங்கும். இது முகவாதம், செயல்பாட்டு நரம்பியல் கோளாறுகள், சிறுநீரகக் கல், நீரகவழல், பைலோனெப்ரிடிஸ், நீரிழிவு நோய், நீரிழிவு புண்கள், புரையழற்சி, ஈழை நோய், உடற் பருமன், மூலம், நாள்பட்ட வயிற்றுப்புண்கள், சரும நிலை ,மாந்த பாலுணர்வியல் பிரச்சினைகள், மரபணுப் பிறழ்ச்சியால் ஏற்படக்கூடிய நோய்கள் ஆகியவற்றுக்கு யுனானி மருந்து சேவைகளை வழங்குகிறது. [3]

ஒரு மருத்துவக் கல்லூரி, அரசு நிசாமியா திப்பி கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ளது.

 
அரசு நிசாமியா பொது மருத்துவமனை

மேற்கோள்கள் தொகு

  1. "CM on inauguration spree in Old City". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2011-06-06. Archived from the original on 2012-09-05. பார்க்கப்பட்ட நாள் 2011-09-05. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "UNANI". Health.ap.nic.in இம் மூலத்தில் இருந்து 2011-09-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110930233953/http://health.ap.nic.in/health/unani.html. 
  3. "Nizamia General Hospital needs repairs". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2 October 2003 இம் மூலத்தில் இருந்து 26 செப்டம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120926000136/http://articles.timesofindia.indiatimes.com/2003-10-02/hyderabad/27214775_1_hospital-staff-private-hospital-disorders. 

வெளி இணைப்புகள் தொகு