அரசு மருத்துவக் கல்லூரி, சித்திப்பேட்டை
அரசு மருத்துவக் கல்லூரி, சித்திபேடை (Government Medical College, Siddipet) அல்லது சித்திபேட்டை மருத்துவக் கல்லூரி என்பது தெலங்காணா மாநிலம் சித்திபேட்டையில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி ஆகும். இக்கல்லூரி சனவரி 2018-ல் இந்திய மருத்துவக் கழகத்தின் அனுமதியைப் பெற்றது. இக்கல்லூரி கலோஜி நாராயண ராவ் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1][2]
வகை | அரசு |
---|---|
உருவாக்கம் | 1 சூன் 2018 |
சார்பு | கலோஜி நாராயண ராவ் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் |
மாணவர்கள் | 150 |
அமைவிடம் | சித்திபேட்டை, எசனாபள்ளி , , இந்தியா 502114 18°05′32″N 78°49′17″E / 18.0921599°N 78.8213375°E |
வளாகம் | புறநகர் |
இணையதளம் | http://gmcsiddipet.org |
வரலாறு
தொகுசித்திபேட்டை மருத்துவக் கல்லூரி 3 சூன் 2018 அன்று திறக்கப்பட்டது. சாதனை நேரத்தில் கட்டுமானப் பணிகள் ஐந்தரை ஆண்டுகளில் நிறைவடைந்தன. சுமார் 700 கோடி செலவில் 50 ஏக்கர் பரப்பளவில் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.[3] இந்திய மருத்துவக் கழகம் இக்கல்லூரியில் 150 இளநிலை மருத்துவ மாணவ சேர்க்கை இடங்களுக்கு அனுமதி அளித்தது. இம்மருத்துவக் கல்லூரியின் முதல் கல்வியாண்டு 2018-19ல் தொடங்கியது.[4][5][6]
மருத்துவமனை
தொகுசித்திபேட்டையில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, மருத்துவக் கல்லூரியின் ஒரு பகுதியாக 300 படுக்கை வசதியாக மேம்படுத்தப்பட்டது. இங்கு வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் நூலகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Siddipet gets a medical college; 150 seats on offer". The Times of India. 5 June 2018. https://timesofindia.indiatimes.com/city/hyderabad/siddipet-gets-a-medical-college-150-seats-on-offer/articleshow/64458061.cms. பார்த்த நாள்: 21 February 2020.
- ↑ Telangana to get two new govt medical colleges in Suryapet, Nalgonda - Times of India
- ↑ "Siddipet: 150 new MBBS seats for T, Siddipet college loses out | Hyderabad News - Times of India".
- ↑ Laxma Reddy inaugurates Siddipet Medical College
- ↑ Centre nods to establish medical college in Siddipet
- ↑ Telangana to get 300 more MBBS seats this year