அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுக்கோட்டை

அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, புதுக்கோட்டை (Government Medical College and Hospital Pudukkottai) தமிழக மாநில அரசால் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடத்தப்படும் அரசு மருத்துவக் கல்லூரி ஆகும். இது இந்திய மருத்துவக் கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[1] இது தமிழ்நாட்டின் புதுக்கோட்டை நகரில் அமைந்துள்ளது.[2][3]

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுக்கோட்டை
அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை புதுக்கோட்டை
குறிக்கோளுரைCare, Serve, Cure
வகைஅரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை
உருவாக்கம்2017
துறைத்தலைவர்மருத்துவர் மு.பூவதி MD.,
Managementதமிழ்நாடு சுகாதார & குடும்ப நலம்- இயக்குநர், மருத்துவ கல்வி
பட்ட மாணவர்கள்150/வருடம் (எம்பிபிஎஸ்)
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்2(DNB)
அமைவிடம்
முள்ளூர் புதுக்கோட்டை
, ,
10°24′30″N 78°50′48″E / 10.4082637°N 78.8466179°E / 10.4082637; 78.8466179
வளாகம்நகரம்
சேர்ப்புதமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம்
இணையதளம்http://gpmchpudukkottai.in/

வரலாறு தொகு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்களால் ஆகத்து 2015இல் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கப்பட்டது.[4] கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைவதற்கான அடிக்கல் நாட்டு விழா 2016ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் நாள் நடைபெற்றது.[5] இதைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் நாள் தமிழக முதல்வர் கே.பழனிசாமி இக்கல்லூரியினைத் திறந்து வைத்தார்.[6] கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டிடங்கள் சுமார் 127 ஏக்கர்கள் (51 ha) 229.46 பரப்பில் ரூ 229.46 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது. இந்த மருத்துவக் கல்லூரி இம்மாநிலத்தில் 22வதாக அமைக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி ஆகும். செப்டம்பர் 4 ஆம் தேதி மருத்துவ படிப்பிற்கான வகுப்புகள், விழாவுடன் தொடங்கியது. துவங்கிய முதல் ஆண்டில் 150 மாணவர்கள் பயில இந்திய மருத்துவக் கழக அனுமதி பெற்ற தமிழ்நாட்டின் கல்லூரியில் இதுவும் ஒன்றாகும்.

கலாச்சார நிகழ்வுகள் தொகு

25-01-2018 அன்று நடைபெற்ற கலாச்சார விழாவில் தமிழக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மருத்துவர் சி. விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டர். சங்கம்'19 கலாச்சார விழாவின் போது ஆடவர் விடுதிக்கு பங்கியார்ட் என்றும் பெண்கள் விடுதிக்கு நட்சத்திரங்கள் என்றும் பெயரிடப்பட்டது. ரெகலியா 2019, தமிழ் மன்றம் "இளஞ்தமிழ் ஓசை 19" நவம்பர் 13 மற்றும் 14 தேதிகளில் மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மருத்துவர் சி. விஜயபாஸ்கர் முன்னிலையில் நடத்தப்பட்டது.

  • ஸ்ரேஸ்தா'18
  • சங்கமம்'19
  • ரெகாலியா'19 மற்றும் சம்மன்

மேற்கோள்கள் தொகு