அரபனஹள்ளி
அரபனஹள்ளி (Harapanahalli) என்பது தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் விஜயநகரம் மாவட்டத்தில் இரண்டாவது பெரிய & வேகமாக வளர்ந்து வரும் நகரமாகும். புகழ்பெற்ற கன்னட நகைச்சுவையாளர் பீச்சி (ராயசம் பீமசேன ராவ்) இங்கு பிறந்தார். இந்த இடம் கல்யாண கர்நாடகாவை மத்திய கர்நாடகாவுடன் இணைக்கிறது. இது சென்னை மாகாணத்தின் முக்கிய வர்த்தக மற்றும் கல்வி மையமாக இருந்தது
அரபனஹள்ளி | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): ಬೀಚಿ ನಾಡು | |
ஆள்கூறுகள்: 14°48′N 75°59′E / 14.8°N 75.98°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகம் |
மாவட்டம் | விஜயநகரம் |
துணைக் கோட்டம் | அரபனஹள்ளி |
பெயர்ச்சூட்டு | அரபனஹள்ளி |
அரசு | |
• நிர்வாகம் | அரபனஹள்ளி நகராட்சி நிர்வாகம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 6.98 km2 (2.69 sq mi) |
ஏற்றம் | 633 m (2,077 ft) |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 78,807 |
• அடர்த்தி | 11,000/km2 (29,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 583 131 |
தொலைபேசிக் குறியீட்டு எண் | 08398 |
வாகனப் பதிவு | கேஏ 35 |
Distance from ஹோஸ்பேட் | 80 கிலோமீட்டர்கள் (50 mi) |
பெங்களூரிலிருந்து | 320 கிலோமீட்டர்கள் (200 mi) |
இணையதளம் | harapanahallitown |
நிலவியல்
தொகுஅரபனஹள்ளி 14°48′N 75°59′E / 14.8°N 75.98°Eஇல் அமைந்துள்ளது.[1] இது சராசரியாக 633 மீட்டர்கள் (2076 அடி) உயரத்தில் உள்ளது. அரபனஹள்ளி பழமையான வர்த்தகப் புறக்காவல் நிலையங்களில் ஒன்றாகும்.
மக்கள்தொகை
தொகு2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி,[2] அரபனஹள்ளியின் மக்கள் தொகை 41,889 பேர் உள்ள்னர். மக்கள் தொகையில் ஆண்கள் 52%, பெண்கள் 48%. அர்பனஹள்ளியின் சராசரி கல்வியறிவு விகிதம் 55%. இது, தேசிய சராசரியான 59.5% ஐ விடக் குறைவு: ஆண்களின் கல்வியறிவு 60%, பெண்களின் கல்வியறிவு 48%. மக்கள் தொகையில் 14% பேர் 6 வயதுக்குட்பட்டவர்கள்.
போக்குவரத்து
தொகுஅரப்பனஹள்ளியில் தொடர் வண்டி நிலையம் 2014ல் திறக்கப்பட்டுள்ளது.
கல்வி
தொகுஅரபனஹள்ளி நகரில் மாநில மற்றும் மத்திய கல்வி வாரியப் பள்ளிகளும் ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. கல்லூரி அளவிலான கல்வி நிறுவனங்களில் மருந்தியல் கல்லூரி, அரசு இளநிலை பட்டயக் கல்லூரி, பல்துறை தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆகியவையும்அடங்கும்.
இவற்றையும் பார்க்கவும்
தொகுசான்றுகள்
தொகு- ↑ Falling Rain Genomics, Inc - Harpanahalli
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.