அரால்டு அர்க்கிரீவ்ஸ்

தொல்லியல் ஆய்வாளர்

அரால்டு அர்க்கிரீவ்ஸ் (Harold Hargreaves) (பிறப்பு: 29 மே 1876) பிரித்தானிய இந்தியாவின் தொல்லியல் ஆய்வாளர் ஆவார். இவர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக 1928 முதல் 1931-ஆம் ஆண்டு வரை பணியாற்றியவர்.

பௌத்த சிறபக் கலைகளைல் வல்லுநராக இருந்த அரால்டு அர்க்கிரீவ்ஸ், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தில் சேர்வதற்கு முன்னர் அமிர்தசரஸ் நகர அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தார்.

இந்தியத் தொல்லியல் ஆய்வகப் பணியில் தொகு

இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தில் 1910 -12-ஆம் ஆண்டுகளில் பிரித்தானிய இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புற வட்டடதின் கண்காணிப்பு தொல்லியலாளர் பணியில் இருந்த போது ஜான் மாரசலுடன் இணைந்து அரப்பா இராஜன்பூர் மற்றும் சாரநாத் தொல்லியல் அகழ்வாராய்ச்சிப் பணிகளில் கலந்து கொண்டார். 1924-இல் இவர் தற்கால பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாநிலத்தின் நல் எனுமிடத்தில் அகழாய்வுப் பணிகள் மேற்கொண்டார். 1928-ஆம் ஆண்டில் இவர் தொல்லியல் ஆய்வகத்தின் கூடுதல் தலைமை இயக்குநராக பதவி உயர்வு பெற்றார். பின்னர் ஜான் மாரஷல் ஓய்வுக்குப் பின் இவர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக 1928-ஆம் ஆண்டில் பதவி ஏற்றார்.

மேற்கோள்கள் தொகு

  • Navanjot Lahiri (2005). Finding Forgotten Cities: How the Indus Civilization was discovered. Hachette India. 
முன்னர்
ஜான் மாரஷல்
தலைமை இயக்குநர்
இந்தியத் தொல்லியல் ஆய்வகம்

1928 - 1931
பின்னர்
தயாராம் சகானி
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரால்டு_அர்க்கிரீவ்ஸ்&oldid=3350021" இலிருந்து மீள்விக்கப்பட்டது