அரிபிரசாத் சாத்திரி
அரிபிரசாத் கங்காசங்கர் சாத்திரி (Hariprasad Gangashankar Shastri) (17 அக்டோபர் 1919 - 9 ஆகஸ்ட் 2014) ஓர் இந்திய அறிஞரும், வரலாற்றாசிரியரும், கல்வெட்டியல் நிபுணரும், இந்தியவியலாளரும் ஆசிரியரும் ஆவார். இவர் முதன்மையாக குசராத்து மாநிலத்தின் அரசியல் மற்றும் கலாச்சார வரலாறு குறித்த தனது பணிக்காக அறியப்பட்டவர். இவர், அகமதாபாத்தில் உள்ள பி.ஜே. கற்றல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் விரிவுரையாளராக, பேராசிரியராக, துணை இயக்குனராகவும் பின்னர் இயக்குனராகவும் பணிபுரிந்தார்.
அரிபிரசாத் சாத்திரி | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | மலதாஜ், பேட்லாட், பிரித்தானிய இந்தியா | 17 அக்டோபர் 1919||||||||||||
இறப்பு | 9 ஆகத்து 2014 அகமதாபாது, குசராத்து, இந்தியா | (அகவை 94)||||||||||||
தொழில் | வரலாற்றாளர், கல்வெட்டியல் நிபுணர், இந்தியவியலாளார் | ||||||||||||
மொழி | குஜராத்தி | ||||||||||||
குறிப்பிடத்தக்க விருதுகள் |
| ||||||||||||
துணைவர் | சிறீதேவி பட் (தி. 1947) | ||||||||||||
பிள்ளைகள் | நந்தன் (மகன்) | ||||||||||||
|
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஅரிபிரசாத் சாத்திரி 1919 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி குசராத்தின் பேட்லாட் அருகே உள்ள மலதாஜ் என்ற கிராமத்தில் பிறந்தார்.[1] இவர் ஒரு மருத்துவரும் சடங்கு நெறியாளருமான கங்காசங்கர் சாத்திரியின் இளைய மகன் ஆவார். இவரது மூத்த சகோதரர் சங்கர்லால் சாத்திரி, ஜூனாகத் பகாவுதீன் கல்லூரியில் சமசுகிருதப் பேராசிரியராகவும், குஜராத்தி இலக்கிய விமர்சகராகவும் இருந்தார்.[2] இவரது தாத்தா, விராச்லால் காளிதாசு சாத்திரி (1825-1892) சமசுகிருதம் மற்றும் பிராகிருத மொழிகளில் அறிஞர் மற்றும் குஜராத்தியின் முன்னோடி தத்துவவியலாளராகவும் இருந்தார். துறவியும்-கவிஞருமான சோத்தம் இவரது இளைய சகோதரர் (1812-1885).[3]
இரசிக்லால் பரிக்கின் வழிகாட்டுதலின் கீழ் தனது ஆராய்ச்சியைத் தொடங்கினார்மகாத்மா காந்தி, விவேகானந்தர் மற்றும் பால கங்காதர திலகர் ஆகியோரின் கருத்துக்களால் சாத்திரியும் ஈர்க்கப்பட்டார்.
இவர் 1947 இல் கல்வியாளர் கருணாசங்கர் குபேர்ஜி பட்டின் மகள் ஸ்ரீதேவி பட் என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் இருந்தார்.
பின்னர், அகமதாபாத்தின் குஜராத் இலக்கியச் சமூகத்தில் விரிவுரையாளராக சேர்ந்தார். மைத்திரக வம்சத்தின் கல்வெட்டுகளின் அடிப்படையில் வல்லபியின் மைத்திரக இராச்சியத்தின் அரசியல் மற்றும் கலாச்சார வரலாறு பற்றி இவர் தனது ஆய்வறிக்கையை எழுதினார், மேலும் 1947 இல் முனைவர் பட்டம் பெற்றார்.[4]
கல்வி வாழ்க்கை
தொகு1945 இல், சாத்திரி அகமதாபாத்தில் உள்ள பி.ஜே. கற்றல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் விரிவுரையாளராக சேர்ந்தார், அங்கு இவர் இந்தியக் கலாச்சாரம் மற்றும் சமசுகிருதம் கற்பித்தார். 1952 ஆம் ஆண்டில் இந்தியக் கலாச்சாரத்தில் முதுகலை ஆசிரியராகவும், 1956 ஆம் ஆண்டில் சமசுகிருதத்திலும் குஜராத் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டார். 1958 ஆம் ஆண்டில், இவர் பிஜே நிறுவனத்தின் உதவி இயக்குநராகப் பதவி உயர்வு பெற்று ஆறு ஆண்டுகள் இந்தப் பதவியில் பணியாற்றினார். இவர் 1968 முதல் 1979 இல் ஓய்வு பெறும் வரை இயக்குநராக அங்கு பணியாற்றினார் இவர் 1955-1956 இல் அகமதாபாத்தில் உள்ள சிறீ ராமானந்தா மகாவித்யாலயாவிலும், 1958-1962 இல் அகமதாபாத்தில் உள்ள எல்டி இந்தியவியல் நிறுவனத்திலும் பேராசிரியராகவும் பணியாற்றினார். இவர் 1960 முதல் 1962 வரை குஜராத் இதிகாச சங்கத்தின் தலைவராக பணியாற்றினார். [1]
இறப்பு
தொகுஇவர் 9 ஆகஸ்ட் 2014 அன்று அகமதாபாத்தில் உள்ள நவரங்புரத்தில் இறந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "હરિપ્રસાદ શાસ્ત્રી, ગુજરાતી સાહિત્ય પરિષદ". Gujarati Sahitya Parishad (in குஜராத்தி). பார்க்கப்பட்ட நாள் 2018-12-26.
- ↑ Gazetteers: Kheda District. Directorate of Government Print., Stationery and Publications. 1977. p. 700. இணையக் கணினி நூலக மைய எண் 312722922.
- ↑ Parikh, P. C.; Shelat, Bharati; Parmar, Thomas, eds. (June 1994). Dr. H.G. Shastri Felicitation Volume. Ahmedabad: Dr. H.G. Shastri Felicitation Volume Committee, C/o Dr. Bharati Shelat. pp. 3–7. இணையக் கணினி நூலக மைய எண் 32466092.
- ↑ Mohan Lal, ed. (1992). Encyclopaedia of Indian Literature: Sasay to Zorgot. New Delhi: Sahitya Akademi. pp. 3994–3995. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-1221-3.