காமரசவல்லி கார்க்கோடேசுவரர் கோயில்
காமரசவல்லி கார்க்கோடேசுவரர் கோயில் என்பது அரியலூர் மாவட்டத்தில் காமரசவல்லி என்னுமிடத்திலுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.
காமரசவல்லி கார்க்கோடேசுவரர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 10°58′59″N 79°11′50″E / 10.9830°N 79.1973°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | அரியலூர் மாவட்டம் |
அமைவிடம்: | காமரசவல்லி |
சட்டமன்றத் தொகுதி: | அரியலூர் |
மக்களவைத் தொகுதி: | சிதம்பரம் |
ஏற்றம்: | 82 m (269 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | கார்க்கோடேசுவரர் |
தாயார்: | பாலாம்பிகை |
குளம்: | உண்டு |
சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஆடிப் பூரம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, ஐப்பசி அன்னாபிசேகம், சித்திரை வருடப் பிறப்பு |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
கல்வெட்டுகள்: | உள்ளன |
வரலாறு | |
அமைத்தவர்: | சுந்தர சோழன் |
அமைவிடம்
தொகுஇக்கோயில் அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் அருகே காமரசவல்லி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. காமரசவல்லிக்கு திருநல்லூர், கார்க்கொடீஸ்வரம், சதுர்வேதிமங்கலம், ரதிவரபுரம், காமரதிவல்லி என்ற பெயர்களும் உண்டு. [1]
இறைவன், இறைவி
தொகுஇக்கோயிலின் மூலவராக கார்க்கோடேசுவரர் உள்ளார். இறைவி பாலாம்பிகை ஆவார். கிழக்கு பார்த்த நிலையில் இறைவனும், தெற்கு பார்த்த நிலையில் இறைவியும் உள்ளனர். நாகங்களின் அரசரான கார்க்கோடன் இறைவனை வழிபட்ட தலமாகும். [1]
அமைப்பு
தொகுஇக்கோயில் சுந்தர சோழனால் கட்டப்பட்டதாகக் கல்வெட்டுகள் மூலமாக அறியமுடிகிறது. போசள மன்னன் இக்கோயிலின் கட்டுமானப் பணிகளை மேம்படுத்தி உள்ளார். விநாயகர், நந்தி, கார்க்கோடயன் இறைவனுக்கு பூசை செய்த சிற்பம் ஆகிய சிற்பங்கள் உள்ளன. மண்டபத்தூண்களில் அதிகமான சிற்பங்கள் காணப்படுகின்றன. திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், துர்க்கா, சண்டிகேசுவரர், நவக்கிரகங்கள் உள்ளனர். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீசுவரர், லிங்கோத்பவர், பிரம்மா ஆகியோர் உள்ளனர். நடராஜர் மண்டபம் உள்ளது. நாகர் சிற்பங்களும் காணப்படுகின்றன. [1]
வரலாறு
தொகுஅபிமன்யுவின் மகனான பரீட்சித்து பிறப்பதற்கு முன்னரே மாலவனின் அருளைப் பெற்றதாகக் கூறுவர். அவர், காட்டில் தவம் செய்து கொண்டிருந்த முனிவரின் கழுத்தில் ஒரு பாம்பை எடுத்துப் போட்டார். கோபமடைந்த முனிவர் ஏழாம் நாளில் பரீட்சித்து சாவார் என சாபமிட்டார். பிற ரிஷிகளின் மூலமாகவும், தன்னுடைய தவ வலிமை மூலமாகவும் சாபத்தைப் பற்றி அறிந்துகொண்டாலும் அதிலிருந்து தப்ப இயலாமல் ஏழாம் நாள் பாம்பு கடித்து இறந்து போனார்.இவரைக் கடித்த பாம்பு கத்திரனின் புதல்வனான கார்க்கோடகன் ஆவார். தன் தந்தை இறந்ததைக் கேள்விப்பட்ட பரீட்சித்துவின் மகன் ஒரு யாகத்தை உண்டாக்கி அனைத்துப் பாம்புகளையும் அதில் இட்டு தீயில் பொசுங்கும்படி செய்தான். இதிலிருந்து தப்பிக்க கார்க்கோடகன் மகாவிஷ்ணுவை அணுக அவர், இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கினால் அவரும் அவருடைய குடும்பமும் காப்பாற்றப்படுவார்கள் என்று கூறினார். அவர் சொற்படி கேட்டு நடந்து இறைவன் அருளைப் பெற்றார். ஆதலால் இத்தலத்தில் பாம்பு கடித்து எவரும் இறப்பதில்லை என்பர்.[1]
திருவிழாக்கள்
தொகுபிரதோஷம், சித்திரை வருடப்பிறப்பு, ஆடிப்பூரம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, ஐப்பசி அன்னாபிசேகம், திருவாதிரை உள்ளிட்ட விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன.[1]
கோயில் படத்தொகுப்பு
தொகு-
அறிவிப்புப்பலகை
-
முதல் கோபுரம்
-
வலது புறத் திருச்சுற்று
-
மூலவர் விமானம்
-
இடது புறத் திருச்சுற்று
-
இறைவி விமானம்
-
நடராசர் விமானம்