அரி சங்கர் பாப்ரா
அரி சங்கர் பாப்ரா (Hari Shankar Bhabhra)(6 ஆகத்து 1928-25 சனவரி 2024) இராசத்தான் சட்டமன்றத்தின் சபாநாயகராக இருந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மார்ச் 16,1990 முதல் அக்டோபர் 5,1994 வரை (இரண்டு முறை) இராசத்தான் சட்டமன்ற சபாநாயகராகப் பதவி வகித்துள்ளார். 1985, 1990 மற்றும் 1993ஆம் ஆண்டுகளில் சூரூ மாவட்டத்தில் உள்ள இரத்தன்கர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றார். நாகௌர் மாவட்டத்தில் உள்ள திட்வானாவில் வசிக்கும் இவர், சூரூ மாவட்டத்தின் ரத்தன்கர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவராக இருந்தார். 1994 அக்டோபர் 6 முதல் 1998 திசம்பர் 1 வரை இராசத்தானின் துணை முதல்வராகவும் பதவி வகித்துள்ளார். இராசத்தான் அரசில் பொருளாதாரக் கொள்கை மற்றும் சீர்திருத்தக் குழுவின் துணைத் தலைவராக பாப்ரா இருந்துள்ளார். 1978 முதல் 1984 வரை மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்துள்ளார். பாப்ரா 25 சனவரி 2024 அன்று தனது 95 வயதில் இறந்தார்.[1]
அரி சங்கர் பாப்ரா | |
---|---|
இராசத்தான் துணைமுதல்வர் | |
பதவியில் 6 அக்டோபர் 1994 – 1 திசம்பர் 1998 | |
இராசத்தான் சட்டமன்ற சபாநாயகர் | |
பதவியில் 16 மார்ச்சு 1990 – 5 அக்டோபர் 1994 | |
முன்னையவர் | கிரிராஜ் பிரசாத் திவாரி |
பின்னவர் | சாந்தி லால் சாப்லாட் |
உறுப்பினர்-இராசத்தான் சட்டப் பேரவை | |
பதவியில் 1985–2003 | |
முன்னையவர் | ஜெய்தேவ் பிரசாத் இந்தோரியா |
பின்னவர் | ஜெய்தேவ் பிரசாத் இந்தோரியா |
தொகுதி | இரத்னாகர் |
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 10 ஏப்ரல் 1978 – 9 ஏப்ரல் 1984 | |
தொகுதி | மாநிலங்களவை உறுப்பினர்இராசத்தான் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 6 ஆகத்து 1928 |
இறப்பு | 25 சனவரி 2024 செய்ப்பூர், இராசத்தான், இந்தியா | (அகவை 95)
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
கல்வி | இளங்கலை இளங்கலைச் சட்டம் |
இளமை
தொகுஅரி சங்கர் பாப்ரா ஆகத்து 6,1928 அன்று நாகௌர் மாவட்டத்தில் உள்ள திட்வானாவின் கிர்கி தார்வாஜாவில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் மண்ணலால் பாப்ரா மற்றும் தாயின் பெயர் மோகினி தேவி. 1941 சூலை 3 அன்று யசோதா தேவி என்பாரை மணந்தார் பாப்ரா. இந்த இணையருக்கு இரண்டு மகன்களும் மூன்று மகள்களும் பிறந்தனர். நாக்பூர் சட்டக் கல்லூரியில் இளங்கலை கலை மற்றும் சட்டப் பட்டமும், நாக்பூரில் உள்ள இந்தி பாஷா சங்க உயர்நிலைப் பள்ளியில் பிரபாகர் பட்டமும் பெற்றார்.