அருணாசல சீனிவாசன்

பாடியநல்லூர் அருள்மிகு முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோயில் வரலாறு கோயில் காவடி பிடிமண்வைத்த பரம

அருணாசல சீனிவாசன் (Arunachala Sreenivasan, 1909-1996) என்பவர் ஒரு இந்திய உணவு தொழில்நுட்பவியலாளர், ஊட்டச்சத்து அறிவியலாளர் ஆவார். இவர் மும்பையில் உள்ள டாடா நினைவு மையத்தின் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார்.[1] 1909 ஆம் ஆண்டு சூலை 13 ஆம் நாள் சென்னை மாகாணத்தில் (தமிழ்நாடு) பிறந்து 1936 ஆம் ஆண்டு மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் முனைவர் பட்டம் பெற்றார். பிறகு மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநர் (1959-64), உயிர் வேதியியல் தலைவர் போன்ற பல்வேறு பதவிகளை வகித்தார். மேலும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் உணவு தொழில்நுட்பப் பிரிவு, (1964-71), அணுசக்தித் துறையின் ஆலோசகர், மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் எமரிட்டஸ் அறிவியலாளராக (1971-73) இருந்தார். 1975 இல் டாடா நினைவு மையத்தில் இருந்து ஓய்வு பெறார். மேலும் இவர் இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது ஆராய்ச்சி முடிவுகள் [2] [3] பல கட்டுரைகள் மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. [4] அறிவியலுக்கான இவரது பங்களிப்புகளுக்காக, இந்திய அரசு, 1974 ஆம் ஆண்டு, இந்தியாவின் மூன்றாவது உயரிய குடிமகன் விருதான பத்ம பூசண் விருதை அவருக்கு வழங்கியது. [5] சீனிவாசன் 87. வயதில் 1996 சூலை 20 அன்று இறந்தார். [1]

அருணாசல சீனிவாசன்
பிறப்பு(1909-07-13)13 சூலை 1909
பிரித்தானிய இந்தியா சென்னை மாகாணம்
இறப்பு20 சூலை 1996(1996-07-20) (அகவை 87)
இந்தியா
பணிஉணவு தொழில்நுட்பவியலாளர்
அறியப்படுவதுஉணவு தொழில்நுட்பம்
ஊட்டச்சத்து அறிவியல்
விருதுகள்பத்ம பூசண்

மேலும் பார்க்கவும்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 "Deceased Fellow". Indian National Science Academy. 2016. பார்க்கப்பட்ட நாள் 21 April 2016.
  2. Arunachala. Sreenivasan; R. M. Vaidya (1948). "Determination of Carotene in Plant Materials". Anal. Chem. 20 (8): 720–722. doi:10.1021/ac60020a008. 
  3. S. M. Patel; Arunachala. Sreenivasan (1948). "Selenium as Catalyst in Kjeldahl Digestions". Anal. Chem. 20 (1): 63–65. doi:10.1021/ac60013a015. 
  4. Medha S. Rajwade; Surendra S. Katyare; Prema Fatterpaker; Arunachala Sreenivasan (November 1975). "Regulation of mitochondrial protein turnover by thyroid hormone(s)". Biochem. J. 152 (2): 379–387. doi:10.1042/bj1520379. பப்மெட்:177002. 
  5. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016. {{cite web}}: Unknown parameter |= ignored (help); Unknown parameter |https://www.webcitation.org/6U68ulwpb?url= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருணாசல_சீனிவாசன்&oldid=3332285" இலிருந்து மீள்விக்கப்பட்டது