அர்சான் நாக்வஸ்வல்லா

அர்சான் நாக்வஸ்வல்லா (Arzan Nagwaswalla பிறப்பு 17 அக்டோபர் 1997) ஓர் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார் . [1] [2] 11 பிப்ரவரி 2018 அன்று 2017–18 விஜய் அசாரே கோப்க்கான தொடரில் குஜராத்துக்காக பட்டியல் அ போட்டிகளில் அறிமுகமானார். [3] 1 நவம்பர் 2018 அன்று 2018–19 ரஞ்சி கிண்ணத்தில் குஜராத்துக்காக முதல் தர போட்டிகளில் அறிமுகமானார். [4] குஜராத்துக்காக 2018–19 சையத் முஷ்டாக் அலி கோப்பையில் 25 பிப்ரவரி 2019 அன்று இருபது20 போட்டியில் அறிமுகமானார். [5]

அர்சான் நாக்வஸ்வல்லா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அர்சான் ரிந்தோன் நாக்வஸ்வல்லா
பிறப்பு17 அக்டோபர் 1997 (1997-10-17) (அகவை 23)
சூரத்து, குசராத்து, இந்தியா
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவிரைவு வீச்சு
பங்குபந்து வீச்சாளர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2018–தற்போது வரைகுசராத்து மாநில துடுப்பாட்ட அணி
மூலம்: Cricinfo, மார்ச் 8, 2021

மே 2021 இல், 2019–2021 ஐ.சி.சி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை இறுதி மற்றும் இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் இடம் பெற்றார். [6] [7]

ஆரம்ப கால வாழ்க்கைதொகு

நாக்வஸ்வல்லா சூரத்தில் ஒரு பார்சி குடும்பத்தில் பிறந்தார். பின்னர் குஜராத்தின் உமர்கம் நகரில் மகாராஷ்டிராவின் எல்லையில் அமைந்துள்ள நர்கோல் என்ற கிராமத்தில் வளர்ந்தார். இவர் வல்சாடுவில் தற்போது வசிக்கிறார்.[8] [9] இவர் தனது சொந்த ஊரில் ஒரு சில ரஞ்சி கோப்பை வீரர்களுடன் விளையாடும் வாய்ப்பைப் பெறுவதற்கு முன்பு ஆரம்பத்தில் அவரது மூத்த சகோதரரால் பயிற்றுவிக்கப்பட்டார், மேலும் இது விளையாட்டில் அவரது திறமையையும் ஆர்வத்தையும் வளர்க்க உதவியது.

சான்றுகள்தொகு

 

  1. "Arzan Nagwaswalla".
  2. "There is no point in comparing yourself with anyone: Arzan Nagwaswalla" (en) (10 May 2021).
  3. "Group C, Vijay Hazare Trophy at Chennai, Feb 11 2018".
  4. "Elite, Group A, Ranji Trophy at Vadodara, Nov 1-4 2018".
  5. "Group B, Syed Mushtaq Ali Trophy at Surat, Feb 25 2019".
  6. "No Hardik, Kuldeep in India's squad of 20 for WTC final and England Tests".
  7. "India's squad for WTC Final and Test series against England announced".
  8. Staff, Scroll. "Meet Arzan Nagwaswalla, the left-arm pacer from Gujarat named as standby in India’s Test squad" (en-US).
  9. May 7, Gaurav Gupta / TNN /. "From Nargol to Team India's reserve, Arzan Nagwaswalla completes long journey | Cricket News - Times of India" (en).

வெளி இணைப்புகள்தொகு

கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: அர்சான் நாக்வஸ்வல்லா

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்சான்_நாக்வஸ்வல்லா&oldid=3146972" இருந்து மீள்விக்கப்பட்டது