அர்ச்சனா சர்மா

அர்ச்சனா சர்மா (Archana Sharma) என்பவர் புகழ்பெற்ற இந்தியத் தாவரவியலாளர், உயிரணு மரபியலாளர், உயிரணு உயிரியலாளர் மற்றும் உயிரணு நச்சியிலாளர் ஆவார்.[1] இவர் உடல்வழி இனப்பெருக்கம் செய்யும் தாவரங்களில் மேற்கொண்ட ஆய்வுகள், முதிர் உயிரணுக்களின் உட்கருத் தூண்டல் பிரிதல், தாவரங்களில் வேறுபட்ட திசுக்களில் டி. என். ஏ. பெருக்கத் தோற்றத்திற்கான காரணம், பூக்கும் தாவரங்களின் உயிரணு மூலம் வகைப்படுத்துதல், நீரில் ஆர்சனிக் விளைவு முதலிய பிரிவுகளில் மேற்கொண்ட ஆராய்ச்சிக்காக நன்கு அறியப்பட்டவர்.[2]

அர்ச்சனா சர்மா
Archana Sharma
பிறப்பு(1932-02-16)16 பெப்ரவரி 1932
புனே, மகாராஷ்டிரம், இந்தியா
இறப்பு14 சனவரி 2008(2008-01-14) (அகவை 75)
பணிதாவரவியலாளர் · உயிரணு மரபியலாளர் · உயிரணு உயிரியலாளர் · உயிரணு நச்சியியலாளர்
வாழ்க்கைத்
துணை
அருண்குமார் சர்மா

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்

தொகு

அர்ச்சனா சர்மா 1932ஆம் ஆண்டு பிப்ரவரி 16 நாளன்று புனேயில் கல்வியாளர் குடும்பம் ஒன்றில் பிறந்தார். இவரது குடும்பத்தினைச் சார்ந்த ஒருவர், பேராசிரியர் என்.பி. முகர்ஜி; பிகானேரில் வேதியியல் பேராசிரியர் பணியாற்றியவர்.[3] சர்மா ஆரம்பக் கல்வியினை ராஜஸ்தானில் உள்ள பள்ளிகளில் முடித்தார். பின்னர் கல்லூரிக் கல்விக்காக பிகானேர் சென்றார். அங்குத் தனது இளம் அறிவியல் பட்டத்தினைப் பெற்ற பின்னர், 1951ஆம் ஆண்டு முது அறிவியல் பட்டப் படிப்பினை கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் முடித்தார். இதனைத் தொடர்ந்து முனைவர் பட்டத்தினை 1955 ஆம் ஆண்டும் முது முனைவர் பட்டத்தினை 1960ஆம் ஆண்டும் தாவரவியல் துறையில் கொல்கத்தாப் பல்கலைக்கழகத்தில் முடித்தார். இவரது உயிரணு மரபியல், மனித மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் பிறழ்வு ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டதன் நிபுணத்துவம் பெற்றார். கொல்கத்தாப் பல்கலைக்கழகத்தில் அறிவியலில் முதுமுனைவர் பட்டம் பெற்ற இரண்டாவது பெண்மணி என்ற பெருமையினைப் பெற்றார்.

1967ஆம் ஆண்டில், சர்மா கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகச் சேர்ந்தார். பின்னர் 1972இல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் உயிரணு மற்றும் குரோமோசோம் ஆராய்ச்சியில் மேம்பட்ட ஆய்வு மையத்தில் மரபியல் பேராசிரியராகச் சேர்ந்தார். 1981ஆம் ஆண்டில், பேராசிரியர் ஏ.கே.சர்மாவின் பணி ஓய்விற்குப் பிறகு தாவரவியல் துறையின் தலைவராகப் பதவி உயர்வு பெற்றார். இந்த காலகட்டத்தில், சர்மா 70க்கும் மேற்பட்ட முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களின் வழிகாட்டியாக உயிரணு மரபியல், மனித மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் பிறழ்வு ஆகிய பிரிவுகள் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.[3] சர்மாவின் ஆராய்ச்சி எனபது தாவரவியல் அறிவியலில் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது. இவருடைய குறிப்பிடத்தக்க ஆய்வுகளாகத் தாவரங்களில் உடல்வழி இனப்பெருக்கம் செய்யும் தாவரங்களில் இனப்பெருக்கம், முதிர்வடைந்த உட்கருவினைத் தூண்டி உயிரணுப் பிரிவினைத் தூண்டல், தாவரங்களில் வேறுபட்ட திசுக்களில் டி. என். ஏ. பெருக்கத்திற்கான காரணம், பூக்கும் தாவரங்களின் உயிரணு வகைப்பாட்டியல், மற்றும் நீரில் ஆர்சனிக் விளைவு ஆகியனவாம். பூக்கும் தாவரங்களில் மேற்கொள்ளப்பட்ட நிறப்புரி ஆய்வும் கண்டுபிடிப்புகளும் அவற்றின் வகைப்பாட்டில் புதிய கருத்துக்கு வழிவகுத்தன. சர்மா மனித மரபியலிலும் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். சாதாரண மனித மக்கள்தொகையில் மரபணு பல்லுருத் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.[3] சர்மா பல்கலைக்கழக மானியக் குழு, தேசிய மகளிர் ஆணையம், அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி குழு, சுற்றுச்சூழல் துறை, வெளிநாட்டு அறிவியல் ஆலோசனைக் குழு போன்ற அமைப்புகளில் உறுப்பினராக பணியாற்றி உள்ளார். சர்மா உயிரிதொழில்நுட்பத் துறையின் ஒருங்கிணைந்த மனிதவள மேம்பாட்டுக்கான பணிக்குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.[3] சர்மா இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி குழுவில் உள்ளிட்ட முக்கிய கொள்கை வகுக்கும் அமைப்புகளில் பணியாற்றியுள்ளார். சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி குழுவில், இந்திய அரசு; ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பன்பாட்டு நிறுவன ஒத்துழைப்புக்கான குழு, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்திய அரசு; மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறை ஆகியவற்றின் பல்வேறு தொழில்நுட்பக் குழுக்களில் இணைந்து பங்களிப்புச் செய்துள்ளார்.[4]

ஆய்வு வெளியீடுகள்

தொகு

சர்மா மேற்கொண்ட ஆய்வின் விளைவாக, 10 புத்தகங்களையும் 300 முதல் 400 ஆராய்ச்சி கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். குரோமோசோம் டெக்னிக்சு-தியரி அண்ட் பிராக்டிஸ் என்ற புத்தகத்தைத் தனது கணவரும் சக பேராசிரியருமான அருண் குமார் சர்மாவுடன் இணைந்து 1965இல் வெளியிட்டார்.[3] உயிரணு உயிரியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய கட்டுரைகளை வெளியிடும் பன்னாட்டு ஆய்விதழான நியூக்ளியஸின் நிறுவனர் ஆவார். இந்த ஆய்விதழின் தொகுப்பாசிரியராக 2007 வரை பணியாற்றினார்.[5] இவர் இந்தியத் தேசிய அறிவியல் கழகத்தின் செயல்முறைகள், இந்தியப் பரிசோதனை உயிரியல் ஆய்விதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார்.[6]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

சர்மா சகப் பேராசிரியரான அருண்குமார் சர்மாவை[7] என்பவரை மணந்தார். அருண்குமார் இந்திய உயிரணுவின் தந்தை என்று பலரால் கருதப்படுகிறார்.[8][9] சர்மா ஜனவரி 14, 2008 அன்று இறந்தார்.[4]

விருதுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Archana Sharma(1932-2008)" (PDF).
  2. The Shaping of Indian Science: 1982-2003 (PDF). p. 1669.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "Archana Sharma" (PDF).
  4. 4.0 4.1 "Archana Sharma: An Indian Woman Botanist, a Cytogeneticist, Cell Biologist and a Cytotoxicologist" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2019-02-16. பார்க்கப்பட்ட நாள் 2019-02-16.
  5. Shah, Aditi (2018-07-29). "Dr. Archana Sharma: The Pioneering Indian Botanist | #IndianWomenInHistory". Feminism In India (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-16.
  6. "INSA :: Deceased Fellow Detail". insaindia.res.in. Archived from the original on 2019-02-16. பார்க்கப்பட்ட நாள் 2019-02-16.
  7. Nicholas Polunin (5 November 2013). World Who Is Who and Does What in Environment and Conservation. Routledge. pp. 294–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-05938-6.
  8. N. K. Soni (1 April 2010). Fundamentals Of Botany. Tata McGraw-Hill Education. pp. 375–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-259-08349-5.
  9. "List of 14 Eminent Geneticists (With their Contributions)". Biology Discussion. 2016. பார்க்கப்பட்ட நாள் 13 September 2016.
  10. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on November 15, 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015. {{cite web}}: Unknown parameter |= ignored (help); Unknown parameter |https://www.webcitation.org/6U68ulwpb?url= ignored (help)
  11. "Fellowship | Indian Academy of Sciences". www.ias.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2019-02-16.
  12. "View Bhatnagar Awardees". Shanti Swarup Bhatnagar Prize. 2016. பார்க்கப்பட்ட நாள் September 4, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ச்சனா_சர்மா&oldid=4007508" இலிருந்து மீள்விக்கப்பட்டது