அறவாழி அந்தணன்

அறவழிதான் உலகை வாழவைக்கிறது. அன்பு, இன்மொழி, அடக்கம், பொறுமை, நடுவுநிலைமை, ஈகை முதலானவை அறவழிகள். இந்த வழிகள் அறக்கடலில் கலக்கின்றன. மறமும் அறக்கடலில்தான் கலக்கிறது.[1]

யார் எந்த வழியைப் பின்பற்றினாலும் உலகம் இயங்குவது அறவழியில்தான். அந்த அறவழி கலக்குமிடம் அறக்கடல். அறக்கடல்தான் ‘அறவாழி’. இந்த அறவாழியாக இருப்பவன் இறைவன். அவன் அந்தணன். அந்தணன் என்பவன் அறவழியைப் பின்பற்றுபவன். (பிறப்பால் கூறிக்கொள்ளும் அந்தணன் அல்லன்) அவன் வைத்துக்கொண்டிருப்பதெல்லாம் ‘செந்தண்மை’ (செம்மையான, ஒழுங்கான ஈரம் என்னும் அன்பு)[2]

இறைவன் அறக்கடல். இறைவன் அந்தணன்.

உரையாசிரியர்கள் பார்வை

தொகு
  • மணக்குடவர் – அறமாகிய கடலை உடைய அந்தணன்
  • பரிதியார் – தன்மம் என்னும் சமுத்திரமாக உள்ள பரமேசுவரன்
  • காலிங்கர் – அறமாகிய பெருவெள்ளமாய் அனைத்து உயிர்கட்கும் அழகிய தண்ணளியை உடையனாகிய இறைவன்.
  • பரிமேலழகர்
    • அறக்கடலாகிய அந்தணன்
    • தரும சக்கரம் உடையவன் என்பாரும் உளர்.
  • புலவர் குழந்தை – அறக்கடலாகிய அந்தணன்

அடிக்குறிப்பு

தொகு
  1. அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை - திருக்குறள் 76
  2. அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் - திருக்குறள் 30

காண்க

தொகு
இறைவன், வள்ளுவர் பார்வை
இறைவன், அகப்பார்வை | ஆதிபகவன் | வாலறிவன் | மலர்மிசை ஏகினான் | வேண்டுதல் வேண்டாமை இலான் | பொறிவாயில் ஐந்து அவித்தான் | தனக்கு உவமை இல்லாதான் | அறவாழி அந்தணன் | எண்குணத்தான் | இறை வணக்கம் | நீத்தார் | தெய்வம் | ஊழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறவாழி_அந்தணன்&oldid=1193740" இலிருந்து மீள்விக்கப்பட்டது