எண்குணத்தான்
எண்குணம்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி எண்குணம் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
எண்குணத்தான் என்பது திருக்குறளில் கடவுள்வாழ்த்து என்ற அதிகாரத்தில் 9ஆம் குறளாகிய
"கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை" (திருக்குறள்: கடவுள்வாழ்த்து:9)
என்பதில் வழங்கும் ஒரு தொடர். அந்தச் சொற்கு எண்குணம் என்னும் எட்டுக்குணத்தொகுதியினை உடையவன் என்று பெரும்பாலான பண்டை உரையாசிரியர்கள் உரைகூறுகின்றனர். அந்த உரையாசிரியர்கள் அந்த எட்டுக்குணங்களை இந்தியத் துணைக்கண்டத்தில் வழங்கும் மரபான குணங்களை மேற்கோள் காட்டி விளக்குகின்றனர்.
உரையாசிரியர்கள் உரை
தொகு- மணக்குடவர் – எட்டுக் குணத்தினை உடையவன்
- பரிதியார் – அனந்த ஞானம், அனந்த வீரியம், அனந்த குணம், அனந்த தெரிசனம், நாமம் இன்மை, கோத்திரம் இன்மை, அவா இன்மை, அழியா இயல்பு – என்னும் எட்டுக் குணம்.
- காலிங்கர் – எண்ணப்பட்ட குணங்களை உடைய இறைவன்
- பரிமேலழகர் – (3 வகையான 8 பிரிவுகளைக் காட்டுகிறார்)
- (1)சைவ ஆகமத்தில் கூறப்பட்ட எண்வகைப்பட்ட குணங்கள் - தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேர்-அருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என்பன.
- (2) அணிமா முதலாக உடையன எட்டை எண்குணம் என்பர்
- (3) கடையில்லா அறிவை முதலாக உடையன என்பர்
- புலவர் குழந்தை – எளிமையாகிய குணம் உடையவன் எண்பொருளவாகச் செலச்சொல்லித் தான் பிறர் வாய் நுண்பொருள் காண்பது அறிவு – என்னும் திருக்குறளில் ‘எண்’ என்னும் அடைமொழி எளிமை என்னும் பொருளில் கையாளப்பட்டுள்ளதை இங்கு எண்ணவேண்டும்.
- பகுத்தறிவாளர் சிலர் திருக்குறள் வழியே கூறும் 8 குணம்
|
|
|
|