தனக்கு உவமை இல்லாதான்
‘பொன்னார் மேனியனே’ என்னும்போது சிவபெருமான் நிறமும், ‘பச்சைமா மலைபோல் மேனி’ என்னும்போது திருமாலின் நிறமும் நம் மனக்கண்ணுக்குத் தெரிகிறது. ‘விறகில் தீயினன் பாலில் படு நெய்யன்’ என்னும்போது இறைவன் இருப்பு எப்படி இதுக்கும் என உணரமுடிகிறது. இப்படிப்பட்ட உவமைகளால் இறைவனை உணரச்செய்ய முடியுமா? முடியாது. எனவே இறைவனைக் காட்ட முடியாது. காண முடியும்.
உரையாசிரியர்கள் பார்வை
தொகு- மணக்குடவர் – தனக்கு நிகர் இல்லாதான்
- பரிதியார் – தனக்கு ஒருவரும் நிகர் இல்லாதான
- காலிங்கர் – எவ்வுயிர்க்கும் உயிர்ப்பொருள் ஆகின்றவன் ஆகிய முதற்பொருளாம் தன்மைக்கு இணை இல்லாதவன்
- பரிமேலழகர் – ஒருவாற்றானும் தனக்கு நிகர் இல்லாதான்
- புலவர் குழந்தை – ஒப்பில்லாதவன்
உயர்வு அற உயர்நலம் உடையவன் எனத் திருவாய்மொழி கூறுவதும் இதுதான்.