அறிமுகம் (நூல்)

இக்கட்டுரை பின்வரும் தலைப்பிலான தொடர்களில் ஒன்று:

நூல் வடிவமைப்பு

நூல், கட்டுரை போன்ற ஆக்கங்களில் அறிமுகம் என்பது, தொடக்கப் பகுதியாக அமைகின்றது. இது அதற்குப் பின்னர் வருகின்ற பகுதிகளின் குறிக்கோள் என்ன, அவற்றை வாசிப்பதன் மூலம் கிடைக்கக்கூடிய பயன் என்ன என்பது போன்றவற்றுடன், நூலில் அல்லது கட்டுரையின் உட்பொருளின் ஒரு முன்னோட்டமாகவும் அமைகின்றது. இதனை வாசிப்பதன் மூலம் என்ன விடயத்தைச் சொல்ல விழைகிறது என்பதைச் சுருக்கமாக அறிந்துகொள்ள முடிவதுடன் அது நூலில் விளக்கப்படும் விடயங்களைத் தொடராகப் புரிந்து கொள்வதற்கான அடிப்படையாகவும் அமைகின்றது.

சிலர் அறிமுகப் பகுதியை, நூலை எழுதி முடித்த பின்னதாக எழுத விரும்புவர். இது நூலிற் சொன்னவிடயங்களை முறையாகச் சொல்வதற்கு வசதியாக அமையும். வேறு சிலரோ அறிமுகத்தை முதலில் எழுதுவர். இது நூலை எழுதுவதற்கான ஒரு சட்டகமாக அமைவதுடன், நூல் எழுதும்போது நோக்கம் சிதறிவிடாமல் இருக்கவும் உதவுகிறது. முன்னரே அறிமுகத்தை எழுதுபவர்கள் நூலின் உள்ளடக்கத்தையும் அதன் போக்கையும் முன்னரே தெளிவாகத் திட்டமிட்டுக் கொள்வர்.

வெளியிணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிமுகம்_(நூல்)&oldid=3083881" இருந்து மீள்விக்கப்பட்டது