நன்றியுரை (நூல்)

இக்கட்டுரை பின்வரும் தலைப்பிலான தொடர்களில் ஒன்று:

நூல் வடிவமைப்பு

நூலாக்கத்துறையில் நன்றியுரை என்பது, குறித்த நூலை அல்லது ஆக்கத்தை உருவாக்குவதில் உதவியோருக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு உரை ஆகும். இதற்காக நூல்களில் ஒரு பகுதி ஒதுக்கப்படுவது உண்டு. சில வேளைகளில் நன்றி தெரிவித்தல் ஆக்கியோனின் முன்னுரையின் ஒரு பகுதியாக அமைவதும் உண்டு.

நூல் உருவாக்கத்தில் நேரடியான ஈடுபாடு இல்லாமல், நிதியுதவி, திறனாய்வு உதவி, ஆலோசனைகள், ஊக்குவிப்பு போன்றவற்றினூடாகச் செய்யப்படும் உதவி செய்பவர்களுக்கே நன்றியுரைப் பகுதியில் நன்றி தெரிவிப்பது வழக்கு. நன்றி தெரிவித்தலை வகைப்படுத்துவதற்குப் பல முறைகள் உள்ளன. கைல்சும், கவுன்சிலும் (2004) பின்வரும் ஆறு வகைகளைக் குறிப்பிடுகின்றனர்.

  1. மனத்தளவு ஆதரவு
  2. நிதியுதவி
  3. தொகுப்புசார் உதவி
  4. முன்வைத்தலுக்கான உதவி
  5. தொழில்நுட்ப உதவி
  6. கருத்தளவிலான தொடர்பாடல் ஆதரவு

எடுத்தாளப்படும் அறிவுசார் ஆழத்தை எடுத்துக்காட்டும் மேற்கோள்களைப் போலவே கருத்தியல் தொடர்பாடல்களும் நூலின் ஆழத்திற்கு மிகவும் முக்கியமானவை. மேற்கோள் மூலங்களை நன்றியுரையில் குறிப்பிடுவது வழக்கமில்லை எனினும் கருத்தியல் ஆதரவு வழங்கியவர்களை நன்றியுரையில் குறிப்பிடுவது வழக்கம். சில வகையான நிதியுதவிகள் பற்றி நன்றியுரையில் குறிப்பிட வேண்டியது நிதிவழங்கும் அமைப்புக்கள் முன்வைக்கும் சட்ட அடிப்படையிலான தேவையாகவும் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நன்றியுரை_(நூல்)&oldid=2593311" இலிருந்து மீள்விக்கப்பட்டது