சுட்டி (நூல்)

இக்கட்டுரை பின்வரும் தலைப்பிலான தொடர்களில் ஒன்று:

நூல் வடிவமைப்பு

அகரநிரல் அல்லது சொற்சுட்டி அல்லது சுட்டி (ஆங்கில மொழி: Index) என்பது, ஒரு நூலில் அல்லது வேறு ஆவணங்களில், குறிப்பிட்ட சில சொற்கள் அல்லது சொற்றொடர்கள் தொடர்பான தகவல்கள் இருக்கும் இடங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு அச்சொற்களையும் அவற்றுக்கான இடக் குறிகளையும் கொண்ட ஒரு பட்டியல் ஆகும்.

இது பொதுவாக அகரவரிசையில் கொடுக்கப்பட்டிருக்கும். நூல்களின் இறுதியில் கொடுக்கப்படும் இத்தகைய சுட்டிகளில், நூலை வாசிப்பவர்களின் ஆர்வத்துக்கு உரியவை எனக்கருதப்படும் மக்கள், இடங்கள், நிகழ்வுகள், கருத்துருக்கள் போன்றவற்றின் பெயர்கள் இடம்பெற்றிருக்கும். இவற்றுக்கு அருகில் இவை பற்றிய தகவல்கள் இருக்கும் இடங்களை அறிந்துகொள்ள உதவக்கூடிய இடக்குறிகள் இருக்கும். நூல்களைப் பொறுத்தவரை இவை பொதுவாகப் பக்க எண்களாக இருக்கலாம். சில தொழில்சார் அறிக்கைகள், சட்டம் தொடர்பான ஆவணங்கள் போன்றவற்றில் இடக்குறிகள் பிரிவு எண்களாக இருக்கக்கூடும். இது ஆய்வேட்டின் முழுப்பகுதியை அறிந்து கொள்ள உதவும். இலக்கியம், வரலாறுபோன்ற ஆய்வேடுகளிலும் பலதுறைகள் கலந்த கலவையாக இருந்தாலும் பெரிய ஆய்வேடாக இருப்பினும் அகரநிரல் பெரிதும் பயன்படும்.

அகரநிரல் எழுதும் முறை:

தொகு
  • முதல் பக்கம் தொடங்கி ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள முக்கியமான கலைச்சொற்கள் போன்றவற்றைத் தனித்தனியே எழுதிக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு சொல்லுக்கும் எதிரே அதன் பக்க எண்ணையும் குறித்துக் கொள்ளவேண்டும்.
  • ஆட்பெயர், இடப்பெயர், நூற்பெயர் மட்டும் குறிக்கப்பட்டால் பெயர் நிரல் என்று தலைப்பிடல் வேண்டும்.
  • பொருட்கள்,கொள்கைகளும் சேகரிக்கப்பட்டால் ‘பெயர் - பொருள் - நிரல்’ என்று தலைப்பிடல் வேண்டும்.

இந்த அட்டவணைகளை அகரவரிசைப்படுத்தி ஒரே பெயர் திரும்பத் திரும்ப வந்தால் அவற்றின் பக்க எண்களை மட்டும் முதல் அட்டையில் குறித்துக் கொண்டு, பின்னர் அவற்றை அகரவரிசைப் படி எழுதவேண்டும்.


மேற்கோள்கள்

தொகு
  • முனைவர். அ. மீனாட்சிசுந்தரம். கல்வியியல் ஆராய்ச்சி.


இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுட்டி_(நூல்)&oldid=3611602" இலிருந்து மீள்விக்கப்பட்டது