அலகுமட்டுடைய அணி
கணிதத்தில் அலகுமட்டுடைய அணி (unimodular matrix) என்பது ஒரு சதுர முழுஎண் அணியாகும். மேலும் ஒரு அலகுமட்டுடைய அணியின் அணிக்கோவையின் மதிப்பு +1 அல்லது −1 ஆக இருக்கும். பொதுவாக ஒரு அலகுமட்டுடைய அணியானது M என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது.
அலகுமட்டுடைய அணியானது முழுஎண்களில் நேர்மாற்றத்தக்க முழுஎண் அணியாக இருக்கும். ஒரு அணியே அதன் நேர்மாறு அணியாகவும் அமையக்கூடிய முழுஎண் அணிகளும் (N) உண்டு.
எனவே M , b இரண்டும் முழுஎண் அணிகளாகவும் M அலகுமட்டுடைய அணியாகவும் இருந்தால் Mx = b என்ற சமன்பாட்டிற்கு ஒரு முழுஎண் தீர்வு இருக்கும். n வரிசையுள்ள அலகுமட்டுடைய அணிகள் ஒரு குலமாகும். இக்குலத்தின் குறியீடு .
எடுத்துக்காட்டுகள்
தொகுகீழுள்ள அணிகள் அலகுமட்டுடைய அணிகளாக இருக்கும்:
குலம்
தொகுகீழுள்ள முடிவுகளால் அலகுமட்டுடைய அணிகளின் கணமானது அணிப்பெருக்கலின் கீழ் ’பொது நேரியல் குலத்தின்’ உட்குலமாக அமையும்:
- இரு அலகுமட்டுடைய குலங்களின் பெருக்குத்தொகையும் ஒரு அலகுமட்டுடைய அணியாக இருக்கும்.
- முற்றொருமை அணி ஒரு அலகுமட்டுடைய அணியாக அமைவதால் உட்குலத்தின் முற்றொருமை உறுப்பாக இருக்கும்.
- ஒவ்வொரு அலகுமட்டுடைய அணியும் நேர்மாற்றத்தக்க அணியாகும்.
- (p , q இரண்டும் முறையே A , B இன் அளவுகள்) என்பதால் குரோனெக்கரின் பெருக்கத்தின்கீழ் இரு அலகுமட்டுடைய அணிகளின் பெருக்கற்பலனும் ஒரு அலகுமட்டுடைய அணியாக இருக்கும்.
முழுமையான அலகுமட்டுடைய அணி
தொகுமுழுமையான அலகுமட்டுடைய அணி (totally unimodular matrix) [1] என்பது, அதன் ஒவ்வொரு சதுர நேர்மாற்றத்தக்க அணியும் அலகுமட்டுடைய அணியாகக் கொண்ட அணியாகும். ஒரு முழுமையான அலகுமட்டுடைய அணியானது சதுர அணியாக இருக்க வேண்டுமென்பதில்லை. முழுமையான அலகுமட்டுடைய அணியின் வரையறையிலிருந்து அதன் உறுப்புகள் 0, +1 அல்லது −1 ஆக மட்டுமே இருக்க முடியும் என்று அறியலாம். ஆனால் இதன் மறுதலை உண்மையில்லை; 0, +1 அல்லது −1 ஐ மட்டுமே உறுப்புகளாகக் கொண்ட அணிகள் எல்லாம் அலகுமட்டுடைய அணிகளாக இருக்க வேண்டுமென்றில்லை.
எடுத்துக்காட்டுகள்
தொகு- ஒரு முழுமையான அலகுமட்டுடைய அணியாகும்.
- இது ஒரு முழுமையான அலகுமட்டுடைய அணி இல்லை. ஏனென்றால் இதன் ஒரு உள்ளணி, அணிக்கோவை மதிப்பு −2 ஆகக்கொண்டு அலகுமட்டுடைய அணியாக இல்லாமல் உள்ளது.
குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- Papadimitriou, Christos H.; Steiglitz, Kenneth (1998), "Section 13.2", Combinatorial Optimization: Algorithms and Complexity, Mineola, N.Y.: Dover Publications, p. 316, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-486-40258-1
- Alexander Schrijver (1998), Theory of Linear and Integer Programming. John Wiley & Sons, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-98232-6 (mathematical)
- Alexander Schrijver (2003), Combinatorial Optimization: Polyhedra and Efficiency, Springer