அலிஷா சினாய்

அலிஷா சினாய் (Alisha Chinai), அலிஷா சினாய் அல்லது அலிஷா என்று பிரபலமாக அறியப்பட்ட ஒரு இந்திய பாப் பாடகர், இவர் இந்திய பாப் ஆல்பங்களுடனும், பாலிவுட் பின்னணி பாடலையும் பாடி வருபவர் ஆவார்.[1]

அலிஷா சினாய்
2009இல் சினாய்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்சுஜாதா சினாய்
பிற பெயர்கள்அலிஷா, அலிஷா சினாய், பாபி டால், இந்திய மடோனா, அலிஷா சினோய்
பிறப்பு18 மார்ச்சு 1965 (1965-03-18) (அகவை 59)
அகமதாபாத், குசராத்து, இந்தியா
இசை வடிவங்கள்இந்திய பாப், பின்னணி பாட்டு
தொழில்(கள்)பாடகர்
இசைத்துறையில்1985 முதல் தற்போது வரை

1985 ஆம் ஆண்டில் அவர் "ஜாதூ" என்ற பாடல் தொகுப்புடன் தனது பாட்டுத் தொழிலைத் தொடங்கினார், மேலும் 1990 களில் "இந்திய பாப் ராணி" எனவும் அழைக்கப்பட்டார்.[2] 1990 களில் அவர் சிறந்த பாடல்கள் தயாரிப்பாளர்களான அனு மாலிக் மற்றும் பிட்டு போன்றவர்களுடன் இணைந்து. அவரது மிக வெற்றிகரமான மற்றும் பிரபலமான ஆல்பம் "மேட் இன் இந்தியா", 1995 இல் வெளியிடப்பட்டது.

தொழில்

தொகு

அமிஷாவின் ஆரம்ப ஆல்பங்கள் "ஜாதூ", "பாபி டால்", "ஆஹ ... அலிஷா" மற்றும் "மேட் இன் இந்தியா" என்பதாகும்.[1] லிஷா ஹிந்தி திரைப்பட இசைக்கு அறிமுகமான இசை இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் பப்பி லஹரியால் அறிமுகப்படுத்தப்பட்டார். இவர்கள் இணைந்து 1980 களில் "டார்சன்", "டான்ஸ் டான்ஸ்" , "கமாண்டோ", "குரு", "லவ் லவ் லவ்" போன்ற பல படங்களில் அவர்கள் பல டிஸ்கோ பாடல்களை பாடி வெற்றி பெற்றனர். அவருடன் இணைந்து கரிஷ்மா கபூர், சுமிதா பட்டீல், மந்தாகினி, ஸ்ரீதேவி, ஜூஹி சாவ்லா, மாதுரி தீட்சித், திவ்ய பாரதி போன்றவர்களுக்கு பின்னணிப் பாடகராக இருந்தார். 1985 ஆம் ஆண்டில், ஓல்ட் கான் கோல்ட்" ஆல்பத்தில் ரெமோ பெர்னாண்டஸ் உடன் இணைந்து கொங்கணி மொழி ஆல்பத்தில் ஆலிஷா 2 பாடல்கள் பாடினார். அவர் ஆனந்த்-மிலிந்த் என்ற இரட்டையர்களால் இயற்றப்பட்ட பங்கஜ் பராசரின் திரைப்படமான "ஜ"ல்வா" (1987) படத்திற்காக ஒரு பாடல் பதிவு செய்தார். 1987 இல் கிஷோர் குமார் ஒலிப்பதிவில் லக்ஷ்மிகாந்த்-பியரிலால் இசையில் வெளிவந்த "மிஸ்டர் இந்தியா" படத்தில் இடம் பெற்ற "கதே நஹின் கத்தா" என்ற பாடல் மிகப்பெரிய வெற்றிகளுள் ஒன்று, 1989 இல் கல்யான்ஜி-ஆனந்த்ஜி மற்றும் விஜு ஷா ஆகியோரின் இசையிலிருந்து வந்த "திரிதேவ் படத்தில் இடம் பெற்ற "ராட் பார் ஜாம் சீ", என்ற பாட்லும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.[3]

சொந்த வாழ்க்கை

தொகு

அலிஷா சினாய் ஒரு குஜராத்தி குடும்பத்தைச் சார்ந்தவர்.[4] அவள் மேலாளரான ராஜேஷ் ஜாவேரை திருமணம் செய்து கொண்டார், இப்பொழுது பிரிந்துவிட்டார்.[5]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 Kasbekar, Asha (2006). Pop culture India!: Media, Arts, and Lifestyle. ABC-CLIO. p. 34. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85109-636-1. பார்க்கப்பட்ட நாள் 27 January 2010.
  2. Asha Kasbekar Pop Culture India!: Media, Arts, and Lifestyle 2006 1851096361 page 34 "Alisha Chinai (1972– ) is the pioneer and undisputed Queen of Indipop—that's the verdict of the music industry. Her first major hit album was Jadoo (Magic). Further platinum albums included Aah Alisha, Baby Doll, Madonna, and Kamasutra, but it was Made in India that established Indipop as a discrete genre and Chinai its prime proponent."
  3. "Interview | I think my time has come: Alisha Chinai | Latest News & Updates at Daily News & Analysis" (in en-US). dna. 2017-09-08. http://www.dnaindia.com/bollywood/interview-interview-i-think-my-time-has-come-alisha-chinai-2543734. 
  4. "Priyanka Chopra is Alisha's fan". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2011-10-16. https://timesofindia.indiatimes.com/tv/news/hindi/Priyanka-Chopra-is-Alishas-fan/articleshow/10365688.cms. 
  5. "The Sunday Times on the Web – Plus". Sundaytimes.lk. 8 December 1996. பார்க்கப்பட்ட நாள் 22 September 2011.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலிஷா_சினாய்&oldid=4162164" இலிருந்து மீள்விக்கப்பட்டது