அலி யவர் ஜங்

நவாப் அலி யவர் ஜங் பகதூர் (1906 ஆம் ஆண்டு பிப்ரவரி  - 1976 ஆம் ஆண்டு டிசம்பர் 11) ஓர் திறமைமிக்க இந்திய இராஜதந்திரி ஆவார். இவர் அர்ஜென்டினா, எகிப்து, யூகோஸ்லாவியா, கிரீஸ், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதராக பணியாற்றியுள்ளார்.

நவாப்
அலி யவர் சங்
மகாராஷ்டிர ஆளுநர்
பதவியில்
26 பிப்ரவரி 1971 – 11 டிசம்பர் 1976
முன்னையவர்ஓம் பிரகாஷ் மெஹ்ரா
பின்னவர்கோண பிரபாகர ராவ்
அமெரிக்காவுக்கான இந்திய தூதர்
பதவியில்
1968–1970
முன்னையவர்ப்ராஜ் குமார் நேரு
பின்னவர்லக்ஷ்மி கந்த் ஜா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபிப்ரவரி 1906
ஹத்திராபாத், ஹத்திராபாத் மாகாணம், (தற்போது) ஹைத்திராபாத், தெலுங்கானா, இந்தியா
இறப்பு11 திசம்பர் 1976(1976-12-11) (அகவை 70)
ராஜ் பவன் (மும்பை), மும்பை, மகாராஸ்டிரா, இந்தியா
துணைவர்(கள்)அலிஸ் இஃப்ரிஜ்
ஜெஹ்ரா அலி யவர் ஜங்
பிள்ளைகள்பில்கிஸ் ஐ. லத்திப்
முன்னாள் கல்லூரிகுயின் கல்லூரி, ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம்
வேலைஇராஜதந்திரி, அரசியல்வாதி
விருதுகள்பத்ம விபூசன்
பத்ம பூசன்

1971 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரை மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக பணியாற்றினார். இவருக்கு இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம பூசன் 11959ஆம் ஆண்டும் மற்றும் பத்ம விபூசண் 1977 ஆம் ஆண்டும் இந்திய அரசு வழங்கியது.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இவர் ஹைதராபாத்தில் ஒரு புகழ்பெற்ற ஹைதராபாத் குடும்பத்தில் பிறந்தார். இவரது குடும்பத்தில் இந்திய நிர்வாகிகள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளனர். மேலும் இவர் ஆக்ஸ்போர்டில் உள்ள குயின்ஸ் கல்லூரியில் [1] வரலாற்றில் பட்டம் பெற்றார்.

பணி தொகு

துணை வேந்தர் தொகு

நவாப் அலி யவர் ஜங் 1945 ஆம் ஆண்டு முதல் 1946 ஆம் ஆண்டு வரை மற்றும் 1948 ஆம் ஆண்டு முதல் 1952 ஆம் ஆண்டு வரை உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றினார்.[1] 1965 ஆம் ஆண்டு முதல் 1968 ஆம் ஆண்டு வரை அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார்.[2] இவர் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்தார்.[3]

1946-47ல் நிஜாமின் மாகாண அரசில் அரசியலமைப்பு விவகாரங்கள், வீட்டு மற்றும் கல்வி, பொது சுகாதாரம் மற்றும் உள்ளாட்சி அமைச்சராக இருந்தார். இவர் இந்த பதவியை 1947 ஆம் ஆண்டில் இராஜினாமா செய்தார்.

இந்திய தூதர் தொகு

இவர் இந்திய தூதராக பணியாற்றிய நாடுகள்:

ஜுவான் பெரன், ஜமால் அப்துல் நாசிர், ஜோசிப் ப்ரோஸ் டிட்டோ, சார்லஸ் டி கோல் மற்றும் லிண்டன் பி. ஜான்சன் ஆகியோருடனான இவரது தனிப்பட்ட தொடர்பு இந்தியாவின் சுயாதீன வெளியுறவுக் கொள்கையைப் புரிந்துகொள்வதற்கு கணிசமாக உதவியது..[சான்று தேவை]

இவர் 1971 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1976 ஆம் ஆண்டு டிசம்பரில் மும்பையின் ராஜ் பவனில் ஆளுநராக இருந்த காலத்தில் இறந்தார்.[1][4]

விருது மற்றும் கவ்ரவம் தொகு

இவருக்கு 1959 மற்றும் 1977 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷன் வழங்கப்பட்டது.[5] மும்பையில் உள்ள வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை [6] மற்றும் கேட்டல் ஊனமுற்றோருக்கான தேசிய நிறுவனம் [7] ஆகியவைக்கு இவரின் பெயரிடப்பட்டுள்ளன.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

இவர் ஒரு பிரெஞ்சு பெண்மணி அலிஸ் இஃப்ரிக் என்பவரை முதலில் திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் இவருவர்களும் விவாகரத்து பெற்றன. இவர்களுக்கு பிறந்த பெண் பிள்ளை பில்கீஸ் ஐ. லத்தீப் ஆவார் . பில்கீஸின் கணவர் 10 வது விமானப்படைத் தலைவர் இத்ரிஸ் ஹசன் லத்தீப் ஆவார்.[8]

அலி பின்னர், ஜெஹ்ரா அலி யவர் ஜங் என்ற சமூக சேவையாளரை திருமணம் செய்துக்கொண்டார்.

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 Shri W.A. Sangma. "Obituary References" Meghalaya Legislative Assembly (14 December 1976). Retrieved on 17 July 2008.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-01-09. பார்க்கப்பட்ட நாள் 2020-09-26.
  3. http://indiatoday.intoday.in/story/aligarh-muslim-university-50percent-quota-for-muslims-creates-a-storm/1/193559.html
  4. "Previous Governors List". Raj Bhavan, Maharashtra State. Archived from the original on 6 February 2009. பார்க்கப்பட்ட நாள் 17 July 2008.
  5. "List of Padma Vibhushan Awardees" (PDF). பார்க்கப்பட்ட நாள் 17 July 2008.
  6. "Western Express Highway: Few know this arterial road honours a former diplomat". The Indian Express. https://indianexpress.com/article/cities/mumbai/western-express-highway-few-know-this-arterial-road-honours-a-former-diplomat-4848546/. 
  7. Encyclopaedia of Social Problems and Social Welfare.
  8. "A Life of service honoured with the Padma Shri award" (PDF). You and I — eMag. 16 February 2009. பார்க்கப்பட்ட நாள் 27 February 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலி_யவர்_ஜங்&oldid=3946894" இலிருந்து மீள்விக்கப்பட்டது