அலெக்சேய் லியோனவ்
அலெக்சேய் அர்கீபவிச் லியோனவ் (Alexey Arkhipovich Leonov, உருசியம்: Алексе́й Архи́пович Лео́нов, மே 30, 1934 – 11 அக்டோபர் 2019) சோவியத்/உருசியாவின் ஓய்வுபெற்ற விண்வெளி வீரரும், சோவியத் வான்படையின் ஜெனரலும் ஆவார். இவர் 1965 மார்ச் 18 இல் விண்வெளியில் பயணித்திருக்கையில் விண்வெளி ஓடத்திலிருந்து வெளிவந்து 12 நிமிடங்கள் இருந்ததன் மூலம் விண்வெளியில் நடந்த முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார்.
அலெக்சேய் லியோனவ் aleksi Alexei Leonov | |
---|---|
1974 இல் லியோனவ் | |
சோவியத் விண்வெளிவீரர் | |
தேசியம் | உருசியர் |
பிறப்பு | அலெக்சேய் அர்கீபொவொச் லியோனவ் 30 மே 1934 லிசுத்வியாங்கா, மேற்கு சைபீரியா, உருசியா, சோவியத் ஒன்றியம் |
இறப்பு | 11 அக்டோபர் 2019 மாஸ்கோ, உருசியா | (அகவை 85)
வேறு பணிகள் | போர் வானோடி, விண்ணோடி |
தரம் | தளபதி, சோவியத் வான்படை |
விண்வெளி நேரம் | 7நா 00ம 32 நி |
மொத்த விண்வெளி நடைகள் | 1 |
மொத்த நடை நேரம் | 12 நிமி, 9 செக் |
பயணங்கள் | வசுக்கோத் 2, சோயுசு 19 |
திட்டச் சின்னம் | |
விருதுகள் | சோவியத் வீரர் (இரு தடவைகள்) |
துணுக்குகள்
தொகு- ஆர்தர் சி. கிளார்க் தனது 2010: ஒடிசி இரண்டு நூலை லியோனவ், ஆந்திரே சாகரவ் ஆகியோருக்கு அர்ப்பணித்தார்.
- அலெக்சேய் லியோனவ் 1965 இலும் 1975 இலும் இரண்டு முறை சோவியத் ஒன்றியத்தின் நாயகர் (hero) என்ற விருதைப் பெற்றார். லெனின் விருது பெற்றவர்.
வெளி இணைப்புகள்
தொகு- விண்வெளியில் நடைப்பயணம் பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்
- வஸ்ஹோத் 2