அலெக்ஸ் ஹேல்ஸ்
அலெக்ஸ் ஹேல்ஸ் (Alex Hales , பிறப்பு: சனவரி 3, 1989) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 35 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 35 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 44 இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2008-2011 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
ஆரம்பகால வாழ்க்கை
தொகுஹேல்ஸ் ஹில்லிங்டனில் பிறந்தார் மற்றும் பக்கிங்ஹாம்ஷையரில் உள்ள வெஸ்ட்புரூக் ஹே பள்ளி மற்றும் சேஷாம் உயர்நிலைப் பள்ளி தற்போது இது இப்போது சேஷாம் இலக்கணப் பள்ளி என அழைக்கப்படுகிறது. ஆகிய பள்ளிகளில் பள்ளிக்கல்வியிணை பயின்றார். இவரது தந்தையும் ஒரு துடுப்பாட்ட வீரர் ஆவார். உள்ளூர் போட்டிகளில் பல சாதனைகளை அவர் படைத்தார். வரையறுக்கப்பட்ட போட்டிகளில் கிராஸ் அணிக்காக விளையாடிய போது செயின்ட் பீட்டர் அணிக்கு எதிரான போட்டியில் 321 ஓட்டங்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் முதல்தர போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் எனும் பெருமை பெற்றார். இவரின் தாத்தா டென்னிஸ் போட்டியில் திறமையானவராக இருந்தார்.
உள்ளூர் போட்டிகள்
தொகுஇங்கிலாந்து கவுண்டி
தொகு2008 ஆம் ஆண்டு கோடகாலத்தில் நியூசிலாந்து 19 வயதிற்குட்பட்டோருக்கான சுற்றுப்பயணத்திற்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்ட போட்டிகளிலும், ஒருநாள் போட்டிகளிலும் ஹேல்ஸ் 19 வயதிற்குட்பட்டோருக்கான இங்கிலாந்து அணியினை பிரதிநிதித்துவப்படுத்தினார், தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் சராசரியாக 50 மற்றும் ஒருநாள் போட்டிகளில் 30 க்கும் மேற்பட்ட சராசரியினை வைத்துள்ளார். மேலும் அதில் 3 மூன்று ஐம்பது ஓட்டங்களும் அடங்கும். 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கைக்கு துடுப்பாட்ட அணிக்கு எதிரான இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான அனைத்து போட்டிகளிலும் விளையாடுவதற்குத் தேர்வானார்.
சர்வதேசப் போட்டிகள்
தொகு2011–2012 இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் உலகபன்னாட்டு இருபது20
தொகுஉள்ளூர்்் துடுப்பாட்டப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுய அணியின் இவர் தேர்வானார். இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் இரண்டு பந்துகளில் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்ததாக மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 178 பந்துகளில் 62 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். பின்பு இந்திய துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் விளையாடினார் ஆனால் 11ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். 2012 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது-20 போட்டியில் இங்கிலாந்து அணி விளையாடியது அந்தப் போட்டியில் அதிகபட்ச ஓட்டத்தினை இரண்டாவதாக மட்டையாடி இவர்கள் அணி வென்றது. இந்த போட்டியில் 99 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ராம்பாலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.[1] இருந்தபோதிலும் அந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்றார். பின் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இருபது-20 போட்டியில் குறைவான ஓட்டங்களை எடுத்தார்.
2013–2014 நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும்பன்னாட்டு இருபது20 உலகக் கோப்பை
தொகுநியூசிலாந்திற்கு எதிரான மூன்று பன்னாட்டு இருபது20 ஆட்டங்களிலும் ஹேல்ஸ் விளையாடினார். அந்தப் போட்டியில் இவர் கவுண்டி துடுப்பாட்ட தொடர்களில் இணைந்து விளையாடிய சக வீரரான மைக்கேல் லம்ப் என்பவருடன் இணைந்து களம் இறங்குகினார். அந்த மூன்று போட்டிகளிலும் தலா 21, 5 மற்றும் என்பது ஓட்டங்களை இவர் எடுத்தார் மூன்றாவது போட்டியில் அவருடன் கூட்டாக இணைந்து 143 ஓட்டங்களை எடுத்தார் அதில் இவர் மட்டும் என்பது ஓட்டங்களை எடுத்தார் மேலும் அணியினை வெற்றி பெற உதவினார். ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது அந்தத் தொடரின் இரண்டாவது போட்டியில் 94 ஓட்டங்களை எடுத்தார் அந்த சமயத்தில் ஐசிஐசி மட்டையாளர் தரவரிசையில் முதலிடம் பிடித்தார். பின்பு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை திறனை வெளிப்படுத்த தவறினார் மூன்று போட்டிகளில் தலா 22, 16 மற்றும் ஆறு ஓட்டங்களை மட்டுமே எடுத்தார் பின்பு மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவதற்காக இவர் தேர்வானார் ஆனால் காயம் காரணமாக பன்னாட்டு இருபது-20 போட்டியில் தொடரில் மட்டுமே விளையாடினார் அந்த தொடரில் மூன்று போட்டிகளில் 3 மற்றும் 38 ஓட்டங்களை மட்டுமே எடுத்தார்.
சான்றுகள்
தொகுவெளி இணைப்பு
தொகுஅலெக்ஸ் ஹேல்ஸ் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 25, 2011.