அலோக்கு சரின்
இந்திய மனநல மருத்துவர்
அலோக்கு சரின் (Alok Sarin) இந்தியாவைச் சேர்ந்த ஒரு மருத்துவர் ஆவார். புது தில்லியில் சிறப்பு மனநல மருத்துவராகவும் மனநல ஆர்வலராகவும் இயங்கி வருகிறார். 1980 ஆம் ஆண்டு மருத்துவத்தில் பட்டமும் 1983 ஆம் ஆண்டில் முதுநிலை மருத்துவப் பட்டமும் பெற்றார். 1986 ஆம் ஆண்டில் இந்திய மனநல சங்கத்தின் உறுப்பினரானார். புது தில்லியில் உள்ள சீதாராம் பாரதியா அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மனநல மருத்துவராக பணிபுரிகிறார். புது தில்லி நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்திலும் தீன் மூர்த்தி இல்லத்திலும் மூத்த உறுப்பினராக உள்ளார். மேலும் இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் மனநலம் காப்பதற்காக இந்தியாவுக்கான சுகாதாரக் கொள்கை உருவாக்க அமைக்கப்பட்ட பணிக்குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Alprax Attack". 19 May 2002.
- ↑ Subramanian, Rachna (July 11, 2004). "Feel-good formula? Still fuzzy logic". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து November 4, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131104193346/http://articles.timesofindia.indiatimes.com/2004-07-11/special-report/27169242_1_serotonin-dopamine-brain. பார்த்த நாள்: January 15, 2014.
- ↑ Charanji, Kavita (January 4, 2008). "School Shooting near Delhi". Star Weekend Magazine (thedailystar.net) 7 (1). http://archive.thedailystar.net/magazine/2008/01/01/perspective.htm. பார்த்த நாள்: January 15, 2014.