தீன் மூர்த்தி பவன்
தீன் மூர்த்தி பவன் (Teen Murti Bhavan - Teen Murti House), இந்தியாவின் முதல் பிரதம அமைச்சரான ஜவகர்லால் நேருவின் தங்குமிடமாகும். ஜவகர்லால் நேரு பிரதமராக 27 மே 1964-இல் இறக்கும் வரை, 16 ஆண்டுகள் தீன் மூர்த்தி பவனில் தங்கி பிரதமர் கடமைகளை ஆற்றினார்.
தீன் மூர்த்தி பவன் | |
---|---|
இந்தியாவின் முதல் பிரதம அமைச்சர் ஜவகர்லால் நேருவின் தங்குமிடம் | |
பொதுவான தகவல்கள் | |
இடம் | தீன் மூர்த்தி ஹைபா சால |
முகவரி | கன்னாட்டு பிளேசு, புது தில்லி, இந்தியா |
ஆள்கூற்று | 28°36′09″N 77°11′56″E / 28.602608°N 77.198774°E |
நிறைவுற்றது | 1930 |
உரிமையாளர் | இந்திய அரசு |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | இராபர்ட் தோர் ரஸ்சல் |
வரலாறு
தொகுபிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் 1930-இல் பிரித்தானிய இந்தியாவின் தலைமைப்படைத்தலைவர் தங்குவதற்காக 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் இக்கட்டிடம் புது தில்லியின் கன்னாட்டு பிளேசு பகுதியில் கட்டப்பட்டது.[1]
1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் இக்கட்டிடம் ஜவகர்லால் நேருவின் தங்குமிடமாக விளங்கியது. 1964-இல் நேருவின் மறைவிற்குப்ப் பின், இக்கட்டிடம் நேரு அருங்காட்சியகம், கோளரங்கம் மற்றும் நூலகமாக மாற்றப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Architectural marvels for the new capital". Hindustan Times. 20 July 2011 இம் மூலத்தில் இருந்து 2 November 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141102085932/http://www.hindustantimes.com/News-Feed/newdelhi/Architectural-marvels-for-the-new-capital/Article1-723169.aspx.