அலோக் குமார் மேத்தா
அலோக் குமார் மேத்தா (Alok Kumar Mehta) (பிறப்பு 3 நவம்பர் 1966 [4] ) பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியாவார். இராச்டிரிய ஜனதா தளத்தின் நிறுவனர் உறுப்பினரான இவர், கட்சியின் முதன்மை பொதுச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். மேத்தா தேஜஸ்வி யாதவின் அரசியல் வழிகாட்டி என்று கூறப்படுகிறது. [5]
அலோக் குமார் மேத்தா | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் மே 2004 – ஏப்ரல் 2009 | |
முன்னையவர் | மஞ்சய் லால் |
பின்னவர் | அசுவமேத தேவி |
தொகுதி | சமஸ்தீபூர் |
நிலச் சீர்த்திருத்தம் மற்றும் வருவாய்த் துறை, பீகார் அரசு[1] | |
பதவியில் 16 ஆகஸ்ட் 2022 – 20 ஜனவரி 2024 | |
பீகார் சட்டப் பேரவையின் உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் நவம்பர் 2015 | |
முன்னையவர் | துர்கா பிரசாத் சிங் |
தொகுதி | உஜியார்பூர் |
இராச்டிரிய ஜனதா தளத்தின் தேசியப் பொதுச் செயலாளர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் [2] | |
கல்வி அமைச்சர் | |
பதவியில் 20 ஜனவரி 2024[3] – 28 January 2024 | |
முன்னையவர் | சந்திரசேகர் யாதவ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 3 நவம்பர் 1966 |
அரசியல் கட்சி | இராச்டிரிய ஜனதா தளம் |
துணைவர் | சீமா பிரசாத் |
பிள்ளைகள் | 3 |
அரசியல் வாழ்க்கை
தொகுதுளசிதாஸ் மேத்தாவின் மகனான [6] அலோக் குமார் மேத்தா 2015 பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் உஜியார்பூர் தொகுதியிலிருந்து சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பீகார் அரசாங்கத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். [6] 2017இல் நிதிஷ் குமார் பதவி விலகும்வரை இவர் அமைச்சராக இருந்தார். இவரது சகோதரி சுஹேலி மேத்தா 2017 இல் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தார்.[7]
மேத்தா 2004 இல் உஜியார்பூர் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். பின்னர் இவர் 2009 இல் மூத்த பிரதீப் மஹ்தோவின் விதவையான அசுவமேத தேவியிடம் அந்தத் தொகுதியை இழந்தார் [8] மேத்தா பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் வெவ்வேறு காலங்களில் இராச்ட்ரிய ஜனதா தளத்துடன் தொடர்புடையவர். ஏழு மாநிலங்களுக்கு கட்சியின் பொறுப்பாளராகவும், கட்சியின் இளைஞர் அமைப்பின் தேசிய பொதுச் செயலாளராகவும், மாநில பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார்.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Department of Revenue". Archived from the original on 13 August 2022. பார்க்கப்பட்ட நாள் 16 March 2023.
- ↑ "Rashtriya Janata Dal expels 3 MLAs for anti-party activities". Newsonair.com. Archived from the original on 14 September 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-09-14.
- ↑ "cabinet reshuffle". India Today. பார்க்கப்பட்ட நாள் 21 January 2024.
- ↑ "Member profile - 134" (PDF). பீகார் சட்டப் பேரவை. Archived from the original (PDF) on 26 April 2020.
- ↑ "Nitish Kumar's Bihar team: 7 Masters, 9 graduates and 12 who went to school". Indian Express. 23 November 2015. Archived from the original on 8 November 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-11-13.
- ↑ 6.0 6.1 "Nitish Kumar's Bihar team: 7 Masters, 9 graduates and 12 who went to school". 2015-11-22. Archived from the original on 5 December 2015.
- ↑ "RJD-minister-kin-joins-dal". The Telegraph. Archived from the original on 19 August 2022. பார்க்கப்பட்ட நாள் 2020-09-14.
- ↑ "ujiarpur-grapples-with-new-caste-equations-delimitation-changes-constituency-s-constitution-not-its-share-of-problems". The Telegraph. Archived from the original on 19 August 2022. பார்க்கப்பட்ட நாள் 2020-09-14.
- ↑ "Members profile". Archived from the original on 14 September 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-09-14.