அல்பெர்ட் லேன்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

அல்பெர்ட் பிரெடரிக் லேன் (Albert Frederick Lane) , பிறப்பு: ஆகத்து 29 1885, இறப்பு: யூலை 1948) இங்கிலாந்து நாட்டு அணியின் தொழில்முறைசாரா துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் செல்லமாக சிபைனி[1] என்ற பெயராலும் அழைக்கப்பட்டார். வார்விக்சையர் மற்றும் வோர்செசுடெர்சையர் ஆகியவிரு மாவட்டங்களுக்காகவும் 1914 மற்றும் 1932 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் விளையாடியுள்ளார். இதற்கு முன்னதாக சிறிய மாவட்டப் போட்டிகளில் சிடாபோர்டுசையர் அணிக்காக விளையாடியுள்ளார்[2].

அல்பர்ட் லேன்
Albert Lane
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அல்பர்டு பிரெடரிக் லேன்
பிறப்பு(1885-08-29)29 ஆகத்து 1885
Rowley Regis, Staffordshire, England
இறப்பு29 சனவரி 1948(1948-01-29) (அகவை 62)
அப்பர் புள்புரூக், வார்விக்சையர், இங்கிலாந்து
பட்டப்பெயர்சிபைனி
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை வலத்திருப்பு வீச்சு
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1914–1932வோர்செசுடெர்சையர்
1919–1925வார்விக்சையர்
முதல் தரம் அறிமுகம்9 மே 1914 வோர்செசுடெர்சையர் v டெர்பைசையர்
கடைசி முதல் தரம்17 மே 1932 வோர்செசுடெர்சையர் v எசெக்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல்தரப் போட்டி
ஆட்டங்கள் 57
ஓட்டங்கள் 1,422
மட்டையாட்ட சராசரி 16.53
100கள்/50கள் 0/8
அதியுயர் ஓட்டம் 76
வீசிய பந்துகள் 3,433
வீழ்த்தல்கள் 46
பந்துவீச்சு சராசரி 41.13
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 4–56
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
27/-
மூலம்: cricketarchive.com, 15 செப்டம்பர் 2007

லேன் தனது முதலாவது முதல்தரப் போட்டியில் 1914 ஆம் ஆண்டு மே மாதம் வோர்செசுடெர்சையர் மாவட்டத்திற்காக டெர்பி நகரில் நடந்த துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். அப்போட்டியில் டெர்பிசையர் அணி ஒரு இன்னிங்சு மற்றும் 158 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லேனின் ஆட்டம் அவ்வளவாக எடுபடவில்லை. அப்போட்டியில் அவர் ஆடுநர் எவரையும் வீழ்த்தவில்லை. 3 மற்றும் 0 ஓட்டங்களையே அவர் எடுத்தார்.[3] அம்மாதத்தைத் தொடர்ந்து நடைபெற்ற அடுத்த ஆட்டத்தில் இவரது ஆட்டம் சற்று மேம்பட்டது. கோல்செசுடரில் நடந்த எசெக்சு மாவட்டத்திற்கு எதிரான ஆட்டத்தில் இவரது அணி தோற்றாலும் இரண்டாவது முறையில் இவர் 26 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனால் 22–1–94–0. என்ற போக்கிலான பந்துவீச்சு அவரது அணிக்கு உதவவில்லை.[4] இறுதியாக அவர் தன்னுடைய மூன்றாவது முயற்சியில், அவரது கன்னி ஆட்டக்காரரை வீழ்த்தினார். யூன் மாத இறுதியில் டட்லியில் நடைபெற்ற அப்போட்டியில் இவர் தன்னந்தனியாகப் போராடினார். ஆம்ப்சையர் அணிக்காக விளையாடிய முக்கியமான இடதுகை ஆட்டக்காரர் பில் மீடை ஆட்டமிழக்கச் செய்தார். அத்தொடரில் அவர் எட்டு ஆடுநர்களின் விக்கெட்டுகளை 55.50 என்ற சராசரியில் வீழ்த்தியிருந்தார் என்பதும் இரண்டு அரைசத ஒட்டங்களையும் எடுத்திருந்தார்.

முதல் உலகப் போர், லேனின் முதல் தர துடுப்பாட்டப் போட்டிகளை ஐந்து ஆண்டுகளுக்குத் தடுத்து நிறுத்தியது. மீண்டும் இவர் 1919 ஆம் ஆண்டில் வார்விக்சையர் அணிக்காக ஆடத் தொடங்கினார். இத்தொடரில் பல ஆட்டங்கள் விளையாடிய இவர் 28.26 பந்துச் சராசரியில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார்[5]. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் யோர்க்சையர் அணிக்கு எதிராக 4-58 மற்றும் நார்த்தாம்டன்சையருக்கு எதிராக சிறந்த பந்து வீச்சை 4-56 எனவும் கொடுத்தார்[6][7] 1920 ஆம் ஆண்டில் ஆடாமலிருந்த இவர் 1921 இல் சில ஆட்டங்களில் விளையாடினார். அதன்பிறகு நீண்டநாட்கள் விளையாடாமல் இருந்த இவரது வார்விக்சையர் துடுப்பாட்ட வாழ்வு முடிவுக்கு வந்தது.

1927ஆம் ஆண்டு லேன் மீண்டும் வோர்செசுடெர்சையருக்கு திரும்பி அவர்களுக்காக மூன்று ஆண்டுகளில் 34 ஆட்டங்கள் விளையாடினார். 1928 மற்றும் 1929 ஆம் ஆண்டு காலத்தில் மூன்று முறை தலைமைப் பொறுப்பும் ஏற்று விளையாடினார்.[8] இவருடைய புதிய மாவட்ட அணி மிகவும் பலவீணமான அணியாக அந்நேரத்தில் இருந்தது. 1927 மற்றும் 1928 ஆம் ஆண்டு போட்டிகளில் கடைசி இடத்தையும் 1929 ஆம் ஆண்டு போட்டியில் கடைசிக்கு முந்தைய இடத்தையுமே அவ்வணியால் பெறமுடிந்தது[9]. எசெக்சு மாவட்ட அணிக்கு எதிராக 1929 இல் நடைபெற்ற ஒரு போட்டியில்[10] இவர் கடைசி ஆட்டக்காரராக களமிறங்கி 70 ஒட்டங்கள் மற்றும் ஆட்டமிழக்காமல் 60 ஒட்டங்கள் எடுத்து அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். இவருடைய இந்தச் சிறப்பான ஆட்டம் அந்த அணிக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு வெற்றியைப் பெற காரணமாகியது.[1]

குறிப்புரை

தொகு
  1. 1.0 1.1 Obituary. Wisden Cricketers' Almanack 1949
  2. "Teams played for by Albert Lane". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 15 September 2007.
  3. "Derbyshire v Worcestershire in 1914". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 15 September 2007.
  4. "Essex v Worcestershire in 1914". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 15 September 2007.
  5. "First-class Bowling in Each Season by Albert Lane". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 15 September 2007.
  6. "Warwickshire v Yorkshire in 1919". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 15 September 2007.
  7. "Northamptonshire v Warwickshire in 1919". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 15 September 2007.
  8. "Player Oracle on CricketArchive". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 15 September 2007.
  9. "The County Championship Tables". கிரிக்இன்ஃபோ. Archived from the original on 18 செப்டம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 15 September 2007. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  10. "Essex v Worcestershire in 1929". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 15 September 2007.

வெளி இணைப்பு

தொகு

அல்பெர்ட் லேன் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 25, 2012.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்பெர்ட்_லேன்&oldid=3541815" இலிருந்து மீள்விக்கப்பட்டது