அல் - காதிசிய மாகாணம்

ஈராக்கின் மாகாணம்

அல்-காதிசிய கவர்னரேட் அல்லது அல்-காதிசிய மாகாணம் (Al-Qādisiyyah Governorate, அரபு மொழி: القادسية‎ ) என்பது ஈராக்கின் மாகாணங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மைய-தெற்கில் உள்ளது. 2014 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மாகாணத்தின் மக்கள் தொகை சுமார் பதினைந்து இலட்சம் மக்கள் ஆவர். இதன் தலைநகரம் அல் திவானியா . 1976 க்கு முன்னர், இது அல்-முத்தன்னா மற்றும் நஜாஃப் ஆகியவற்றுடன் அட்-திவானியா மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. கி.பி 636 இல் இஸ்லாமிய ராசிதீன் படைகள் சாசானியப் பேரரசின் படைகளை தோற்கடித்த அல்-காதிசியா போரின் தளமான வரலாற்று நகரமான அல்-கதிசியாவின் பெயரைக் கொண்டு இந்த மாகாணத்திற்கு பெயரிடப்பட்டது. மாகாணத்தில் பெரும்பான்மை மக்களாக சியா அரபு மக்கள் உள்ளனர். இந்த மாகாணத்தில் ஹோர் ஆல்டெல்ம்ஜின் மெசொப்பொத்தேமியன் சதுப்பு நிலமும் அடங்கியுள்ளது.

அல் - காதிசிய மாகாணம்
القادسية
மாகாணம்
Location of அல் - காதிசிய மாகாணம்
ஆள்கூறுகள்: 31°51′N 45°3′E / 31.850°N 45.050°E / 31.850; 45.050
நாடு ஈராக்
தலைநகரம்அல் திவானியா
பரப்பளவு
 • மொத்தம்8,153 km2 (3,148 sq mi)
மக்கள்தொகை (2014)
 • மொத்தம்13,20,000 (10% of total)
ம.மே.சு. (2017)0.661[1]
medium

கல்வி தொகு

மாகாணத்தில் 1980 களின் பிற்பகுதியில் நிறுவப்பட்ட காதிசியா பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும் ஒரு பொது பல்கலைக்கழகம் உள்ளது. இதில் செவிலியம், மருந்தகம், சட்டம், இலக்கியம், கல்வி, விவசாயம், மருத்துவம் போன்ற பிற கல்லூரிகளை உள்ளடக்கியதாக உள்ளது. இந்தக் கல்லூரிகளில் பெரும்பாலும் மாகாணத்திற்குட்பட்ட மாவட்டங்கள் மற்றும் அண்டை மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயில்கின்றனர். ஹில்லா நகரத்திற்கு செல்லும் பழைய சாலையில் இந்த பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. அல்-காதிசியாவின் தொழில்நுட்ப நிறுவனமும் நகர மையத்திலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

மாகாண அரசு தொகு

  • ஆளுநர்: சாமி அல் ஹஸ்னாவி
  • துணை ஆளுநர்: உசேன் அல் மொசாவி
  • மாகாண சபைத் தலைவர் (பி.சி.சி): ஜுபைர் அல் ஜூபூரி

மாவட்டங்கள் தொகு

  • ஹம்ஸா
  • ஷாமியா
  • அஃபக்
  • திவானியா

குறிப்புகள் தொகு

  1. "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்_-_காதிசிய_மாகாணம்&oldid=3069009" இலிருந்து மீள்விக்கப்பட்டது