முத்தன்னா மாகாணம்

ஈராக்கின் மாகாணம்

முத்தன்னா கவர்னரேட் (Muthanna Governorate, அரபு மொழி: المثنىஅல் முத்தன்னா ) அல்லது அல் முத்தன்னா மாகாணம் என்பது ஈராக்கில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இது 7 ஆம் நூற்றாண்டின் அரபு தளபதியான அல்-முத்தன்னா இப்னு ஹரிதாவின் பெயரால் அழைக்கபடுகிறது. இது நாட்டின் தெற்கு பகுதியில், சவூதி அரேபியா, குவைத்து ஆகிய நாடுகளின் எல்லையில் உள்ளது. இதன் தலைநகரம் சமவா நகரம் ஆகும்.

முத்தன்னா மாகாணம்
محافظة المثنى
அல் முத்தன்னா மாகாணம்
Location of முத்தன்னா மாகாணம்
ஆள்கூறுகள்: 30°12′N 45°21′E / 30.200°N 45.350°E / 30.200; 45.350
நாடுஈராக்
தலைநகரம்சமவா
பெயர்ச்சூட்டுஅல்-முத்தன்னா இப்னு ஹரிதா
அரசு
 • ஆளுநர்முகமது அலி அல்-ஹசானி
பரப்பளவு
 • மொத்தம்51,740 km2 (19,980 sq mi)
மக்கள்தொகை
 (2015)
 • மொத்தம்7,70,500[1]
ம.மே.சு. (2017)0.628[2]
medium

வரலாறு

தொகு

1976 க்கு முன்னர் இது திவானியா மாகாணத்திற்கு உட்பட்ட ஒரு பகுதியாக இருந்தது. அந்த மாகாணத்தில் இன்றைய நஜாஃப் மாகாணம் மற்றும் அல்-கதிசியா மாகாணம் ஆகியவையும் உள்ளடங்கியதாக இருந்தது .

மாகாணதின் தலைநகரான சமாவா நகரானது பண்டைய சுமேரிய - பாபிலோனியா நகரமான உரூக்குக்கு ( அரமேயம் : எரெக் ) மிக அருகில் உள்ளது. இது ஈராக்கு என்ற பெயரின் மூலமாக இருக்கலாம். செலூக்கியப் பேரரசு நிறுவப்பட்டதைத் தொடர்ந்து பாபிலோன் வீழ்ச்சிக்குப் பிறகு, உருக் தெற்கு பாபிலோனியாவின் மிகப்பெரிய நகரமாக ஆனது. அதன் பெயரான (எரெக்) பாபிலிக்கு (பாபிலோனியா) மாற்றாக வந்தது. ஏனெனில் இந்த நகரம் முந்தைய தலைநகரைக் காட்டிலும் நீண்ட காலம் கி.பி 7 ஆம் நூற்றாண்டுவரை தப்பிப்பிழைத்திருந்தது.

1991 பெப்ரவரியில், பாரசீக வளைகுடா போரின்போது வரலாற்றில் மிகப்பெரிய கவச பீரங்கி வண்டி போர்களில் ஒன்றான நோர்போக் போர் நடந்தது. [3]

மாகாண அரசு

தொகு
  • ஆளுநர்: முகமது அலி அல் ஹசானி
  • துணை ஆளுநர்: சாமி அல் ஹசானி
  • அல்-முத்தன்னா மாகாண சபையின் தலைவர்: அப்துல் லத்தீப் அல் ஹசானி

குறிப்புகள்

தொகு
  1. Citypopulation.de
  2. "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-13.
  3. https://www.wearethemighty.com/articles/6-massive-tank-battles-from-us-history
"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்தன்னா_மாகாணம்&oldid=3069007" இலிருந்து மீள்விக்கப்பட்டது