அவந்திகா பாவா
அவந்திகா பாவா (Avantika Bawa) ஓர் இந்திய அமெரிக்க கலைஞராக வாழ்ந்து வருகிறார். காப்பாளராகவும் கலைப் பேராசிரியராகவும் நன்கு அறியப்படுகிறார். பல்துறை கலைஞரான பாவா முதன்மையாக தளம் சார்ந்த நிறுவல், காணொளி, அச்சு தயாரித்தல் மற்றும் வரைதல் ஆகிய பிரிவுகளில் பணிபுரிகிறார்.[1] 2018 ஆம் ஆண்டு கிரவ் சேடோ கலை நிறுவனத்தின் கோல்டன் இசுபாட் ரெசிடென்சி விருது, காட்சிக் கலையில் ஆலி ஃபோர்டு உறுப்பினர் தகுதி மற்றும் அமெரிக்காவின் ஒரேகான் கலை ஆணையத்தின் இயோன் சிப்லி விருது ஆகிய விருதுகளை அவந்திகா பெற்றுள்ளார். [1] [2]
அவந்திகா பாவா | |
---|---|
போர்ட்லேண்டு கலை அருங்காட்சியகத்தில் அவந்திகா பாவா, 2018 | |
பிறப்பு | உதகமண்டலம், தமிழ்நாடு, இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் |
கல்வி
தொகுசிகாகோ கவின்கலை நிறுவனப் பள்ளியில் ஓவியத்தில் முதுநிலை நுண்கலைகள் பட்டமும், மகாராசா சாயாசிராவ் பல்கலைக்கழகத்தில் இளநிலை நுண்கலைகள் பட்டமும் பெற்றுள்ளார். [3]
தொழில்
தொகுஅமெரிக்காவின் வான்கூவரில் உள்ள வாசிங்டன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் பாவா கலைப் பேராசிரியராக உள்ளார். [4] ஓரிகான் கலை ஆணையத்தின் குழுவிலும் இவர் பணியாற்றுகிறார். ஓரிகானில் உள்ள போர்ட்லேண்ட் கலை அருங்காட்சியகம், சியாட்டிலில் உள்ள சுயமா இசுபேசு , அட்லாண்டாவில் உள்ள சால்ட்வொர்க்சு கேலரி; போர்ட்லேண்ட், ஓரிகானில் உள்ள டிசுசெக்டா தற்கால கலை மையம்; மற்றும் இந்தியாவின் மும்பையில் உள்ள மசுகரா அரங்கம் ஆகிய இடங்களில் தனிக் கண்காட்சிகளை பாவா நடத்தினார்.. [5] [2]
சமகால கலாச்சாரம் பற்றிய ஆக்கப்பூர்வமான கண்ணோட்டங்களை ஆராயும் இணையதள இதழான டிரைன் - எ செய்தி இதழின் தற்கால கலை மற்றும் கலாச்சாரத்தின் நிறுவனர்களில் பாவாவும் ஒருவராக உள்ளார். [6] 2019 ஆம் ஆண்டு சிகாகோ புல்சு கூடைப்பந்து அணிக்கு எதிராக சனவரி 9 ஆம் தேதி போர்ட்லேண்ட் டிரெயில் பிளேசர்சு அணி விளையாடிய போட்டிக்கு போட்டிநாள் சுவரொட்டியை உருவாக்க இவர் நியமிக்கப்பட்டார். [7]
பணி
தொகுஆய்வுப்பொருள்
தொகுபாவாவின் பணியானது கட்டிடக்கலை இடங்கள் மற்றும் கலைநய பாணிகளுக்கு பதிலளிப்பதாகவும் ஒருங்கிணைப்பதாகவும் உள்ளது. [8] சிறுமக் கருதுகோள் கோட்பாட்டிலிருந்தும் மற்றும் நுண் கலை உத்வேகத்திற்காகவும் இவர் வரைகிறார். டிசுசெக்டா கலை மையத்திற்கான இவரது ஓவியம் ஓரிகானில் உள்ள ஆசுடர் விடுதியில் நிறுவப்பட்டது. இங்கு பாவா ஒரு பெரிய தங்க தூக்கு மரத்தை உருவாக்கினார், அது கட்டுமானத்தின் ஒலிப் பதிவுகளுடன் இருந்தது. [9]
கண்காட்சிகள்
தொகு2018 ஆம் ஆண்டு போர்ட்லேண்ட் கலை அருங்காட்சியகத்தில் , கிரேசு குக்-ஆன்டர்சனால் நிர்வகிக்கப்பட்ட அபெக்சு என்ற தொடரின் ஒரு பகுதியாக, போர்ட்லேண்ட் படைவீரர் நினைவு விளையாட்டு அரங்கில் வரைபடங்கள் மற்றும் அச்சுகளை வைத்து தனிக் கண்காட்சியை பாவா நடத்தினார். [8] ஆம்பர்சண்ட் அரங்கத்திலும் பாவா ஒரு கண்காட்சியை நடத்தினார். ஒரு கலைஞரின் புத்தகத்தை வெளியிடுவதில் உச்சக்கட்டத்தை இக்கண்காட்சி அடைந்தது. [1] 2017 ஆம் ஆண்டு கலிபோர்னியாவின் பள்ளத்தாக்கு கிளெனில் உள்ள லாசு ஏஞ்சல்சு பள்ளத்தாக்கு கல்லூரியில் இணையான தவறுகள் [10]என்ற தலைப்பிலான ஒரு கண்காட்சியை நடத்தினார். இவரது பணிகள் மைக்கேல் கிராப்னரால் நிர்வகிக்கப்பட்ட 2016 போர்ட்லேண்ட் கண்காட்சியில் சேர்க்கப்பட்டன. 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், பாவா தனது திட்டமான அக்வா மேப்பிங்கை போர்ட்லேண்ட், ஓரிகானில் உள்ள வைட்பாக்சு அரங்கம் மற்றும் சியார்ச்சியாவின் அட்லாண்டாவில் உள்ள சால்ட்வொர்க்சு அரங்கில் நடத்தினார். [11] 2012 ஆம் ஆண்டு வாசிங்டனில் உள்ள சியாட்டிலில் உள்ள சுயமா இசுபேசில் உரிமையாளரின் ஆபத்து என்ற பெயரால் அழைக்கப்பட்ட ஒரு பெரிய அளவிலான, தளம் சார்ந்த நிறுவலை பாவா காட்சிப்படுத்தினார், இது விண்வெளியின் தற்போதைய மற்றும் வரலாற்று பயன்பாடுகளுக்கு பதிலளித்தது. 2009 ஆம் ஆண்டு பாவாவின் கண்காட்சி இந்தியாவின் மும்பையில் உள்ள மசுக்காரா அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டது [12]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுபாவா இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள உதகமண்டலத்தில் பிறந்தார்.[13] அமெரிக்கா ஓரிகானின் போர்ட்லேண்டில் வசித்து வருகிறார், அங்கு வேலையும் செய்கிறார். அடிக்கடி இந்தியத் தலைநகரம் புது தில்லியிலும் நேரத்தை செலவிடுகிறார். [14]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Coliseum - Avantika Bawa". Ampersand Gallery & Fine Books (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-22."Coliseum - Avantika Bawa". Ampersand Gallery & Fine Books. Retrieved 22 February 2019.
- ↑ 2.0 2.1 "Avantika Bawa | Oregon Arts Commission". www.oregonartscommission.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-18.
- ↑ "Artist Talk: Avantika Bawa". portlandartmuseum.org. 14 January 2016. பார்க்கப்பட்ட நாள் 18 March 2017.
- ↑ "Avantika Bawa - Directory - WSU Vancouver". directory.vancouver.wsu.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-18.
- ↑ "Avantika Bawa | Oregon Arts Commission". www.oregonartscommission.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-18.
- ↑ "About | Drain Magazine". drainmag.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-03-10.
- ↑ "Gameday Posters". Portland Trail Blazers (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-22.
- ↑ 8.0 8.1 "APEX: Avantika Bawa". Portland Art Museum (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-22.
- ↑ "The cellular memory of place, Part Two | Oregon ArtsWatch". www.orartswatch.org (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-05-30. பார்க்கப்பட்ட நாள் 2018-05-29.
- ↑ "LAVC Art Gallery: Los Angeles Valley College". www.lavc.edu. Archived from the original on 2017-03-19. பார்க்கப்பட்ட நாள் 2017-03-18.
- ↑ "White BoxAvantika Bawa | White Box". whitebox.uoregon.edu (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-18.
- ↑ "Gallery Maskara: Exhibition: Mathesis: dub, dub, dub". www.gallerymaskara.com (in ஆங்கிலம்). Archived from the original on 2015-05-10. பார்க்கப்பட்ட நாள் 2017-03-18.
- ↑ "Gallery Maskara: Artist: Avantika Bawa". www.gallerymaskara.com (in ஆங்கிலம்). Archived from the original on 2018-03-11. பார்க்கப்பட்ட நாள் 2018-03-10.
- ↑ "Avantika Bawa | pdx contemporary art". pdxcontemporaryart.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-03-10.