அவல் பால் அல்லது அவில் பால் (Avil Milk)[1] என்பது கேரளாவின் மலபார் பகுதியின் தெருக்களில் விற்கப்படும் ஒரு கேரள சமையல் பானமாகும். அவல் பால், பழுத்த வாழைப்பழங்கள், பால் மற்றும் பருப்புகளுடன் சேர்த்து, அவல் கொண்டு தயாரிக்கப்படுகிறது.[2]

அவல் பால்
மாற்றுப் பெயர்கள்അവൽ മിൽക്ക്
தொடங்கிய இடம்கோட்டக்கல், கேரளா, இந்தியா
உணவு ஆற்றல்
(per 100 கி பரிமாறல்)
162 கலோரி (678 kJ)
ஊட்டச்சத்துப் பெறுமானம்
(per 100 கி serving)
புரதம்4.86 கி
கொழுப்பு4.2 கி
கார்போவைதரேட்டுகி

வரலாறு

தொகு

கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டத்திற்கே தனித்துவம் வாய்ந்த அவல் பால், முதன் முதலில் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள விஎச் அவல் பால் கோட்டக்கல்லில் உருவானது. இந்த பால் கலவையில் முக்கிய பொருட்களாக வறுத்த அரிசி அவல்/போஹா (அரிசி), சிக்யுடா வாழைப்பழம்/ மைசூர் வாழைப்பழம் (பாளையம் கோடன் வாழைப்பழம்), வறுத்த வேர்க்கடலை மற்றும் பருப்புகள் உள்ளன. இதைக் காலை உணவுடன் அல்லது இனிப்பாகப் பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்

தொகு
  • அவல்: தடிமனான அவலினைப் பயன்படுத்துவது நல்லது. மெல்லிய அவல் மிக விரைவில் கரைந்துவிடும்.
  • நெய் அல்லது வெண்ணெய்: இது விருப்பமானது ஆனால் சுவையாகவும், நிறைவாகவும் இருக்கும். அவல் மற்றும் பருப்புகளை வறுக்கவும் இதைப் பயன்படுத்தவும்.
  • வாழைப்பழம்: எந்த பழுத்த வாழைப்பழத்தினையும் பயன்படுத்தலாம். ஒரு முட்கரண்டியினைப் பயன்படுத்தி வாழைப்பழத்தினை மசித்துப் பயன்படுத்தலாம்.
  • பால்: குளிர்ந்த பால் நல்லது. தேங்காய்ப் பால், பாதாம் பால், முந்திரி பால் போன்றவற்றையும் ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூள் அல்லது இலவங்கப்பட்டை தூள் (இது பாலிற்குச் சுவை கூட்டும்)
  • வறுத்த பருப்புகள்: வேர்க்கடலை, முந்திரி, பாதாம் போன்றவை.
  • இனிப்பு: சுவைக்கு ஏற்ப தேன், சர்க்கரை போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

செய்முறை

தொகு
 
அவில் பால் தேவையான பொருட்கள்

அவல் பால் செய்முறை மிகவும் எளிதானது. முதலில், நெய்/வெண்ணெய் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ அவலினை வறுத்துக் கொள்ளவேண்டும். பின்னர் நெய்யில் சிறிதளவு அவலினை வறுக்கவேண்டும். இதனால் உணவு இன்னும் முழு நிறைவாக இருக்கும். பருப்பு/கொட்டைகள் ஏற்கனவே வறுக்கப்படவில்லை என்றால் வறுக்கவும். வாழைப்பழத்தை ஒரு முட்கரண்டி கொண்டு மசிக்கவும். பருவகால பழங்களைப் பயன்படுத்தினால் துண்டுகளாக நறுக்கவும். பால் குளிர்ச்சியாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் உயரமான கண்ணாடி கோப்பையில் சேகரித்து, கிளறி சாப்பிடலாம் அல்லது குடிக்கலாம்! [3]

படத்தொகுப்பு

தொகு

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. അലി, ഷേഹി. "അവല്‍ മില്‍ക്ക് തയ്യാറാക്കാം". Mathrubhumi (in ஆங்கிலம்). Archived from the original on 2021-10-04. பார்க்கப்பட்ட நாள் 2021-10-04.
  2. "വിരുന്നുകാർക്ക് നൽകാം അവല്‍-പഴം ഷെയ്ക്ക്". malayalam.samayam.com (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-04.
  3. "ചൂടിനെ ചെറുക്കാൻ തയാറാക്കാം അവിൽ മിൽക്ക്, ഈസി റെസിപ്പി! | avil milk | aval milk | easy smoothies | variety milk shakes | breakfast recipes". vanitha.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-04.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவல்_பால்&oldid=3541953" இலிருந்து மீள்விக்கப்பட்டது