அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகம்

அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்விக் கழகம் எனப் பெயரிடப்பட்டுள்ள அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகம் கோயம்புத்தூரில் அமைந்துள்ள தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் மகளிர்களுக்கான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.[1] கல்வியாளர் தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியாரால் 1957 ஆம் ஆண்டு அவிநாசிலிங்கம் கல்வி அறக்கட்டளையின் மேற்பார்வையில் பெண்களுக்கான கல்லூரியாகத் துவங்கப்பட்டது. இது 1978 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழான தன்னாட்சி பெற்றக் கல்லூரியாகத் தகுதி பெற்றது. இவ்வாறு தன்னாட்சி வழங்கப்பட்ட எட்டு கல்லூரிகளில் இதுவொன்றே மகளிர் கல்லூரியாகும். இந்த நிறுவனம் 1988 ஆம் ஆண்டு நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக உயர்வு பெற்றது.[2] இதன் தொடக்ககாலத்தில் கல்லூரி முதல்வராகப் பணியாற்றிய கல்வியாளர் இராஜம்மாள் பி. தேவதாஸ் இதன் வளர்ச்சிக்கு பெரிதும் பங்களித்துள்ளார்.

பல்கலைக்கழகத் துறைகள்

தொகு

அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகம் பின்வரும் ஏழு துறைகளில் கல்வித்திட்டங்களை வழங்குகிறது.

சான்றுகள்

தொகு
  1. Ameeta Gupta; Ashish Kumar (1 January 2006). Handbook of Universities. Atlantic Publishers & Dist. pp. 64–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-269-0607-9. பார்க்கப்பட்ட நாள் 6 November 2015.
  2. "Avinashilingam University". 4icu.org. பார்க்கப்பட்ட நாள் 6 November 2015.

வெளி இணைப்புகள்

தொகு