அவிலா, எசுப்பானியா
அவிலா (Ávila) (எசுப்பானிய ஒலிப்பு: [ˈaβila]; இலத்தீனிய மொழி: Abila and Obila) என்பது எசுப்பானியாவின் தன்னாட்சிக்கு உட்பட்ட ஒரு நகரம் ஆகும். இதுவே அவிலா மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.
அவிலா (Ávila) | |
---|---|
அடைபெயர்(கள்): Ávila de los Caballeros, Ávila del Rey, Ávila de los Leales | |
குறிக்கோளுரை: Una ciudad para todos... (A town for everyone...) | |
நாடு | வார்ப்புரு:நாட்டுத் தகவல் எசுப்பானியம் |
தன்னாட்சிக்குட்பட்ட பிரதேசம் | காஸ்டிலொன் லியோன் |
மாகாணம் | அவிலா |
அரசு | |
• மேயர் | Miguel Ángel García Nieto (PP) |
பரப்பளவு | |
• நிலம் | 231.9 km2 (89.5 sq mi) |
ஏற்றம் | 1,132 m (3,714 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 58,245 |
நேர வலயம் | ஒசநே+1 (CET) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
Postal code | 05001 – 05006 |
இடக் குறியீடு | 34 (எசுப்பானியம்) + 920 (அவிலா) |
இணையதளம் | http://www.avila.es (எசுப்பானியம்) |
ஒரு காலத்தில் இந்நகரம் கற்கள் மற்றும் புனிதர்களின் நகரம் (Town of Stones and Saints) எனப்போற்றப்பட்டது. அத்துடன் முற்காலத்திலே கோதிக் ரோமனெஸ்க் கட்டிடக்கலைகளுடன் கூடிய தேவாலயங்கள், விடுதிகள் அதிகம் காணப்படும் நகரமாகப் போற்றப்பட்டது. முக்கியமானதுமான முழுமையானதுமான இடைக்காலத் தூண்களின் தொகுதியைக்கொண்ட நகரமாக இது காணப்படுகிறது. இத்தூண்கள் ரோமனெஸ்க் கட்டிடக்கலையின் வடிவில் கட்டப்பட்டுள்ளன. இது 1985 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவினால், உலகப் பாரம்பரியக் களமாக அறிமுகப்படுத்தப்பட்டதுடன் பட்டியலிலும் சேர்க்கப்பட்டது.
புவியியல்
தொகுஅமைவிடம்
தொகுஇந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 1132 மீற்றர்கள் (3714 அடிகள்) உயரத்தில் காணப்படுகிறது. டுஎரோ (Duero) ஆற்றின் கிளை நதியான அடஜா ஆற்றின் (Adaja river) வலது கரைக்கு அருகிலே ஒரு சிறு பாறைத் தொகுதியின் மேல் இந்நகரம் அமையப்பெற்றுள்ளது. இதுவே எசுப்பானியாவில் அமைந்துள்ள உயரமான மாகாணத் தலைநகரம் ஆகும்.
காலநிலை
தொகுஜூலை மாதமே இங்கு மிகவும் சூடான மாதமாகும். ஜூலை மாதத்தில் இதன் வெப்பநிலை சராசரியாக 19.7 °C (67 °F) ஆகும். இங்கு மிகவும் குளிரான மாதம் சனவரி ஆகும். இம்மாத வெப்பநிலை சராசரியாக 2.8 °C (37 °F) ஆகும். இதன் வருடாந்த சராசரி வீழ்படிவு நிலை 400 மி.மீ (15.75 அங்குலம்) ஆகும்.[1] அடஜா ஆறானது வருடத்தின் சிலமாதங்களில் வற்றிப்போகிறது, ஆகையால் அவிலாவில் வரலாற்றுக்காலம் தொட்டே நீர்ப் பிரச்சனைகள் உள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Valores climatológicos normales – Ávila". Agencia Estatal de Meteorologica. பார்க்கப்பட்ட நாள் 1 October 2012.
மேலும் வாசிக்க
தொகு- Parkinson Keyes, Frances (1957). The Land of Stones and Saints. Doubleday. (Lives of five famous people of the province of Avila, Spain, in the 15th, 16th, and 17th centuries: Isabel the Catholic, St Teresa of Ávila, St John of the Cross, María Vela and San Pedro Bautista)
வெளி இணைப்புக்கள்
தொகு- Avila's Town Hall
- Avila's Tourist Guide
- Convent of St. Teresa, Ávila பரணிடப்பட்டது 2005-10-18 at the வந்தவழி இயந்திரம்
- Ávila in the official website for Tourism in Spain பரணிடப்பட்டது 2013-05-26 at the வந்தவழி இயந்திரம் (in English)
- Photos of Ávila
- Satellite picture by Google Maps
- Hazlitt, Classical Gazetteer "Abila" பரணிடப்பட்டது 2006-05-11 at the வந்தவழி இயந்திரம்
- Citizens' association for the defence of heritage of Ávila – Photos of Ávila பரணிடப்பட்டது 2014-10-13 at the வந்தவழி இயந்திரம்