அவுண்டா நாகநாத்
அவுண்டா நாகநாத் (Aundha Naganath), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் ஹிங்கோலி மாவட்டத்தில் அமைந்த நகரம் ஆகும். அவுண்டா நாகநாத் நகரத்தின் வெளிப்புறத்தில் உள்ள காட்டில் 12 சோதிர் லிங்கத் தலங்களில் எட்டாவதான அவுண்டா நாகநாதர் கோயில் உள்ளது.
அவுண்டா நாகநாத்
அவுண்டா | |
---|---|
பெரிய கிராமம் | |
ஆள்கூறுகள்: 19°32′04″N 77°02′22″E / 19.534554°N 77.039566°E | |
நாடு | இந்தியா இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | ஹிங்கோலி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 14,801 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 431705 |
வாகனப் பதிவு | MH 38 |
அருகமைந்த நகரங்கள் | ஹிங்கோலி (26 கிமீ), பர்பானி(45 கிமீ) |
மக்களவைத் தொகுதி | ஹிங்கோலி |
சட்டமன்றத் தொகுதி | பஸ்மத் |
புவியியல்
தொகு- அவுண்டா நாகநாத், தக்காணப் பீடபூமியில் மரத்வாடா பகுதியில் அமைந்துள்ளது.
- அவுண்டா ஏரி இந்நகரத்தின் நீர் ஆதரமாக உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
தொகு- 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 2744 குடியிருப்புகள் கொண்ட அவுண்டா நாகநாத் நகரத்தின் மக்கள் தொகை 14,801 ஆகும். அதில் ஆண்கள் 7,515 மற்றும் பெண்கள் 7286 ஆகவுள்ளனர்.
- பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 970 பெண்கள் வீதம் உள்ளனர்.
- சராசரி எழுத்தறிவு 82.33% ஆக உள்ளது.
- பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 15.57% மற்றும் 2.70% ஆகவுள்ளனர்.[1]