அவுந்த் மாநிலம்

பிரித்தானியப் பேரரசு ஆட்சியின் போது பம்பாய் மாகாணத்திலிருந்த மராட்டிய சமஸ்தானம்

அவுந்த் மாநிலம் (Aundh State) என்பது பிரித்தானியப் பேரரசு ஆட்சியின் போது பம்பாய் மாகாணத்தின் தக்காண முகமை பிரிவில், மராட்டிய சமஸ்தானமாக இருந்தது. [1] [2] அவுந்த் அதன் தலைநகரமாக இருந்தது. [3]1941 இல் 88,762 மக்கள்தொகையுடன் 1298 சதுர கிலோமீட்டர் பரப்பளவை அவுந்த் மாகாணம் உள்ளடக்கி இருந்தது [3]

Aundh State
1699–1948
கொடி of Aundh
கொடி
e தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவின் படி அவுந்த் மாநிலம்
வரலாறு 
• தொடக்கம்
1699
1948
பரப்பு
19411,298 km2 (501 sq mi)
மக்கள் தொகை
• 1941
88,762
முந்தையது
பின்னையது
Maratha Empire
India
தற்போதைய பகுதிகள்மகாராட்டிரம், இந்தியா
 இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  "Aundh". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 

வரலாறு

தொகு

அவுந்த் என்பது சத்திரபதி சம்பாஜி, சத்திரபதி இராஜாராம் ஆகியோரின் ஆட்சியின் போது மராட்டியப் பேரரசின் தளபதியாகவும், நிர்வாகியாகவும், பின்னர் பிரதிநிதியாகவும் இருந்த பரசுராம் பந்த் பிரதிநிதி என்பவருக்கு சத்ரபதி சாம்பாஜி வழங்கிய சாகிர் ஆகும். [4] 1700-1705 காலகட்டத்தில் முகலாயர்களிடமிருந்து பன்காலா கோட்டை, அஜிங்க்யதாரா (சதாரா), பூபால்காட் கோட்டைகளை மீண்டும் கைப்பற்றுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

பேஷ்வா ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு, பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் 1820 இல் சதாரா மன்னரின் பெயரளவில் கீழ்படிந்த அனைத்து சாகிர்தார்களுடனும் தனித்தனி ஒப்பந்தங்களை மேற்கொண்டது. சதாரா மாநிலம் ஆங்கிலேயர்களால் அவகாசியிலிக் கொள்கைப்படி கீழ் ஒழிக்கப்பட்டபோது அவுந்த் ஒரு சமஸ்தானமாக மாறியது. ராஜா சிறீமந்த் பவன்ராவ் சிறீனிவாசராவ் பந்த் பிரதிநிதி ("பாலா சாஹிப்") அவுந்தின் கடைசி ஆட்சியாளாவார். இந்த மாநிலம் 8 மார்ச் 1948 இல் இந்திய ஒன்றியத்தில் இணைந்தது [5]

சான்றுகள்

தொகு
  1. I. Copland. State, Community and Neighbourhood in Princely North India, c. 1900-1950. Springer. p. 95. பார்க்கப்பட்ட நாள் 26 April 2005.
  2. Ian Copland. The Princes of India in the Endgame of Empire, 1917-1947. Cambridge University Press. p. 214. பார்க்கப்பட்ட நாள் 16 May 2002.
  3. 3.0 3.1 Rothermund 1983, ப. 9.
  4. Bond 2006, ப. 773.
  5. Rothermund 1983, ப. xvii.

உசாத்துணை

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=அவுந்த்_மாநிலம்&oldid=3807435" இலிருந்து மீள்விக்கப்பட்டது