அஸ்மா அல்-அசாத்
அஸ்மா ஃபவாஸ் அல்-அசாத் (Asma Fawaz al-Assad, அரபு மொழிஃ أصماء فواز الأصدة née Akrash) (பிறப்பு 11 ஆகத்து 1975) என்பவர் சிரியாவின் முன்னாள் முதல் பெண்மணி ஆவார். சிரிய பெற்றோருக்கு இலண்டனில் பிறந்து வளர்ந்த இவர், டிசம்பர் 13,2000 அன்று சிரியாவின் அப்போதைய அரசத் தலைவராக இருந்த அல்-அசாத்தை மணந்தபோது முதல் பெண்மணி ஆனார்.[1][2]
அஸ்மா அல்-அசாத் | |
---|---|
أسماء الأسد | |
அஸ்மா அல்-அசாத் | |
சிரியாவின் முதல் குடிமகள் | |
மதிப்புறு இடத்தில் 13 திசம்பர் 2000 – 8 திசம்பர் 2024 | |
குடியரசுத் தலைவர் | பசார் அல்-அசத் |
முன்னையவர் | அனிசா மக்லோஃப் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அஸ்மா ஃபவாஸ் அக்ராஸ் 11 ஆகத்து 1975 இலண்டன், இங்கிலாந்து |
தேசியம் |
|
துணைவர் | பசார் அல்-அசத் (தி. 2000) |
பிள்ளைகள் | அஃபீஸ் பசார் அல் அசாத் உட்பட 3 குழந்தைகள் |
பெற்றோர் |
|
முன்னாள் கல்லூரி | கிங்ஸ் கல்லூரி, இலண்டன் (இளம் அறிவியல்) |
அசாத் 1996 இல் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பிரெஞ்சு இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். முதலீட்டு வங்கியில் ஒரு பணியைக் கொண்டிருந்த அவர், டிசம்பர் 2000 இல் பஷார் அல்-அசாத்தை மணந்தபோது ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பயிலத் திட்டமிட்டிருந்தார். திருமணத்தைத் தொடர்ந்து முதலீட்டு வங்கியில் தனது வேலையைத் துறந்து சிரியாவில் தங்கினார், அங்கு இத்தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். முதல் பெண்மணியாக, சிரிய உள்நாட்டுப் போர் வெடித்ததால் நிறுத்தப்பட்ட சீர்திருத்த முயற்சியின் ஒரு பகுதியாக சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள அரசாங்க அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதில் இவர் முக்கிய பங்கு வகித்தார்.[3]
தனது கணவருடன் சேர்ந்து, சிரியாவின் வணிகத் துறைகள், வங்கி, தொலைத்தொடர்பு, வீடு மனை விற்பனைத் தொழில் மற்றும் கடல்சார் தொழில்களின் பெரும்பகுதிகளைக் கட்டுப்படுத்தும் சிரியாவின் "முக்கியப் பொருளாதார வீரர்களில்" ஒருவராக அஸ்மா கருதப்பட்டார். மார்ச் 2011 இல் தொடங்கிய சிரிய உள்நாட்டுப் போரின் விளைவாக, உயர் மட்ட சிரிய அரசாங்க அலுவலர்கள் தொடர்பான பொருளாதாரத் தடைகளுக்கு அசாத் உட்படுத்தப்பட்டார், இத்தடையானது ஐரோப்பிய ஒன்றியத்தில் இவருக்கு பொருள் மற்றும் நிதி உதவியை வழங்குவதைச் சட்டவிரோதமாக்கியதுடன், சில தயாரிப்புகளைப் பெறுவதற்கு, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பயணிக்கும் திறனையும் குறைத்தது.[4] இங்கிலாந்தில், "வேதி ஆயுதங்களைப் பயன்படுத்தியது உட்பட பொதுமக்களை சித்திரவதை செய்தது மற்றும் கொலை செய்ததற்குமான முறையான அணுகுமுறை" மற்றும் பயங்கரவாத செயல்களைத் தூண்டுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுடன் பெருநகர காவல்துறை போர்க்குற்றப் பிரிவுக்குள் ஒரு தொடக்க நிலை விசாரணையில் இவர் ஒரு பகுதியாக இருந்தார்.
தொடக்க கால வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுஅசாத் 1975 ஆம் ஆண்டு ஆகத்து 11 ஆம் தேதி இலண்டனில் குரோம்வெல் மருத்துவமனை இருதய நிபுணரான ஃபவாஸ் அக்ராஸ் மற்றும் அவரது மனைவி சஹார் அக்ராஸ் (லண்டனில் உள்ள சிரிய தூதரகத்தில் முதல் செயலாளராக பணியாற்றிய ஓய்வுபெற்ற தூதர்) ஆகியோருக்கு அஸ்மா பிறந்தார். இவரது பெற்றோர் சுன்னி இசுலாம் மற்றும் சிரிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், ஹோம்ஸ் நகரத்தைச் சேர்ந்தவர்கள்.[5]
இவர் இலண்டனின் ஆக்டனில் வளர்ந்தார், அங்கு இவர் இங்கிலாந்தின் டுவைஃபோர்டு சர்ச் உயர்நிலைப் பள்ளியிலும் பின்னர் இலண்டனில் உள்ள குயின்ஸ் கல்லூரியிலும் பயின்றார். இவர் 1996-ஆம் ஆண்டில் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் கணினி அறிவியலில் முதல் தர மதிப்புறு இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார்.
நிதிசார் தொழில்
தொகுஇலண்டன் கிங்ஸ் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, இவர் ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆசியாவில் உள்ள வாடிக்கையாளர்களுடன் ஹெட்ஜ் நிதி மேலாண்மைப் பிரிவில் டாய்ச் வங்கி குழுமத்தில் பொருளாதார ஆய்வாளராகப் பணியாற்றத் தொடங்கினார். 1998 ஆம் ஆண்டில், இவர் ஜே. பி. மோர்கனின் முதலீட்டு வங்கிப் பிரிவில் சேர்ந்தார், அங்கு இவர் உயிரித் தொழில்நுட்பம் மற்றும் மருந்து நிறுவனங்களில் நிபுணத்துவம் பெற்ற ஒரு குழுவில் பணியாற்றினார்.[6] தனது "பகுப்பாய்வுச் சிந்தனை" மற்றும் "ஒரு நிறுவனத்தை நடத்துவதன் வணிகப் பக்கத்தை புரிந்துகொள்ளும் திறன்” ஆகியவற்றை இந்த வங்கியில் பணியாற்றிய அனுபவம் வழங்கியது என்று பாராட்டுகிறார்.
இவர் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக நிர்வாகம் படிக்கவிருந்தபோது, 2000 ஆம் ஆண்டில் டமாஸ்கஸில் உள்ள தனது அத்தை வீட்டில் விடுமுறைக்கு வந்தபோது, குடும்ப நண்பரான பஷார் அல்-அசாத்தை மீண்டும் சந்தித்தார்.
முதல் பெண்மணி
தொகுசூன் 2000 இல் அபீஸ் அல்-அசாத் இறந்த பிறகு, பஷார் ஜனாதிபதி பதவியை ஏற்றார். அஸ்மா நவம்பர் 2000 இல் சிரியாவுக்குக் குடிபெயர்ந்தார், அதே ஆண்டு டிசம்பரில் பஷாரை மணந்தார். திருமணத்திற்கு முன்னர் இவர்களின் காதல் காலம் பற்றிய ஊடக அறிக்கைகள் எதுவும் இல்லாததால் இந்தத் திருமணம் பலரை ஆச்சரியப்படுத்தியது. அஸ்மா ஐக்கிய இராச்சியத்தில் வளர்ந்திருந்ததாலும் அலவைட் பஷாரைப் போலல்லாமல் சுன்னி இசுலாமியப் பெரும்பான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்துவதாலும்.பலர் இவர்களின் இணைப்பை ஒரு நல்லிணக்கம் மற்றும் சீர்திருத்த அரசாங்கத்தை நோக்கிய முன்னேற்றத்தின் அறிகுறியாக விளக்கினர்.[7]
அஸ்மா திருமணத்திற்குப் பிறகு, 14 சிரிய ஆளுநரகங்களில் 13 இல் உள்ள 100 கிராமங்களுக்குச் சென்று சிரியர்களுடன் பேசி, தனது எதிர்காலக் கொள்கைகளை எங்கு வழிநடத்த வேண்டும் என்பதை அறிய சிரியா முழுவதும் பயணம் செய்தார்.[8] இவர் அரசாங்கத்தின் சேவைத்துறையின் கீழ் செயல்படும் அமைப்புகளின் ஒருங்கிணைப்பை உருவாக்கினார். இது சிரியாவின் வளர்ச்சிக்கான அறக்கட்டளை என்று குறிப்பிடப்படுகிறது. இந்த உருவாக்கத்தின் காரணமாக, மிடில் ஈஸ்ட் 411 இதழின் "உலகின் மிகவும் செல்வாக்குமிக்க அரேபியர்கள்" என்ற பட்டியலில் ஒரு இடத்தைப் பெற்றார்.
பொது வாழ்க்கை
தொகுஊடக ஆய்வாளர்களின் கூற்றுப்படி, அசாத் பெண்கள் உரிமைகள் மற்றும் கல்வியில் கவனம் செலுத்தினார், ஆனால், இறுதியில் அரசியல் விவகாரங்களில் தனது கணவருடன் துணை நின்றார்.[9] சிரிய அரசாங்கம் மிகவும் நவீன மற்றும் முற்போக்கான அரசாங்கத்தை நோக்கி செயல்படுவதைக் காட்டும் ஒரு சிக்கலான சீர்திருத்த முயற்சிகளை ஒழுங்கமைக்க ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் 18 மில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவிட்டது, இதன் முக்கிய பகுதி அசாத்துக்கு "ஒரு சீர்திருத்தவாதியின் ஒளிவட்டத்தை" உருவாக்க உதவியது, நாடு உள்நாட்டுப் போரில் இறங்கியதால் திட்டம் இடைநிறுத்தப்படும் வரை சிரியா மேம்பாட்டு அறக்கட்டளையில் இவர் பங்கேற்றதை எடுத்துக்காட்டுகிறது.[10][11] பிறப்பால் ஒரு சுன்னி இசுலாமியர் என்ற வகையில், சிரியாவின் சுன்னி பெரும்பான்மை சிரிய அரசாங்கம் மற்றும் அரசத் தலைவரின் பார்வைக்கு அசாத்தின் முன்னணிப் பங்கு முக்கியமானதாக இருந்தது.[12]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Assad's British wife targeted by EU as Annan pursues talks on ceasefire". The Scotsman. 24 March 2012. https://www.scotsman.com/news/world/assads-british-wife-targeted-by-eu-as-annan-pursues-talks-on-ceasefire-1637382.
- ↑ "Is Asma Assad in London?". The Telegraph. 10 May 2011. https://www.telegraph.co.uk/news/worldnews/middleeast/syria/8503481/Is-Asma-Assad-in-London.html.
- ↑ Ruiz de Elvira, L.; Zintl, T. (2014). "The end of the Ba'athist social contract in Bashar al-Assad's Syria: reading sociopolitical transformations through charities and broader benevolent activism". International Journal of Middle East Studies 46 (2): 329–349. doi:10.1017/S0020743814000130.
- ↑ Marquardt, Alexander (23 March 2012). "Syria's Stylish First Lady's Shopping Sprees Now Hit By Sanctions". ABC News. Archived from the original on 11 January 2020. பார்க்கப்பட்ட நாள் 27 June 2020.
- ↑ Bar, Shmuel (2006). "Bashar's Syria: The Regime and its Strategic Worldview". Comparative Strategy 25 (5): 353–445. doi:10.1080/01495930601105412. பன்னாட்டுத் தர தொடர் எண்:0149-5933. http://herzliyaconference.org/_Uploads/2590Bashars.pdf#page=2.
- ↑ "The First Lady". Embassy of Syria, Washington, D.C. Archived from the original on 21 May 2012.
- ↑ Jones, L. (2001). "The European press views the Middle East". The Washington Report on Middle East Affairs 20 (2): 33.
- ↑ Bevan, B. (2005). "Inheriting Syria: Bashar's trial by fire". Washington Report on Middle East Affairs 24 (5): 85–86.
- ↑ "Will Asma al-Assad take a stand or stand by her man?". CNN. 25 December 2011. Archived from the original on 14 February 2012. பார்க்கப்பட்ட நாள் 14 February 2012.
- ↑ Russell, George (20 September 2012). "Before Assad unleashed violence, UN showcased wife Asma as a 'champion' of reform". Fox News. Archived from the original on 22 September 2012. பார்க்கப்பட்ட நாள் 21 September 2012.
- ↑ Russell, George (8 October 2012). "UN-sponsored group in Syria included Assad kin cited as corrupt by US, documents show". Fox News. Archived from the original on 10 November 2012. பார்க்கப்பட்ட நாள் 8 October 2012.
- ↑ Golovnina, Maria (19 March 2012). "Asma al Assad, a "desert rose" crushed by Syria's strife". Reuters. Archived from the original on 23 September 2013. பார்க்கப்பட்ட நாள் 10 January 2013.