அஸ்வினி நாச்சப்பா

முன்னாள் தடகள விளையாட்டு வீரரும் இந்திய திரைப்பட நடிகையுமாவார்

அஸ்வினி நாச்சப்பா (Ashwini Nachappa; பிறப்பு அக்டோபர் 21, 1967 ) கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முன்னாள் தடகள விளையாட்டு வீரரும் இந்திய திரைப்பட நடிகையுமாவார். 1980 களின் துவக்கத்தில் தடகளப் போட்டிகளில் புகழ் பெற்றவர்; இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பி. டி. உஷாவை வென்றுள்ளார். அமெரிக்கத் தடகள வீராங்கனையான பிளோஜோவுடன் (FloJo) ஒப்பிட்டு, ”இந்தியாவின் பிளோஜோ என அழைக்கப்படுகிறார்.[1] 1988 ஆம் ஆண்டில் அருச்சுனா விருது பெற்றார்.[2] ஒரு குறிப்பிடத்தக்க சமூக செயற்பாட்டாளரும் கல்வியியலாளருமாவார்.[2] அவர் ஒரு பள்ளியினை நிறுவியுள்ளார். தற்போது அவர் பெங்களூரு நகர மாவட்ட தடகள சங்கத்தின் தலைவர் ஆவார்.[3]

அஸ்வினி நாச்சப்பா
பிறப்புஅக்டோபர் 21, 1967 (1967-10-21) (அகவை 57)
கர்நாடகா, இந்தியா
பணிதடகள வீரர்
பிள்ளைகள்2

சாதனைகள்

தொகு

மூன்று தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுகளில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்டு அவர் பெற்ற வெற்றிகள்: 1984 இல் நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 2 வெள்ளிப் பதக்கங்கள்; 1986 இல் வங்காள தேசத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 2 வெள்ளிப் பதக்கங்கள்; 1988 பாக்கிஸ்தானில் நடத்தப்பட்ட தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 3 தங்க பதக்கங்கள். இரண்டு ஆசிய விளையாட்டுக்களில் அவர் கலந்து கொண்டார். 1986 ஆம் ஆண்டில் தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நீளம் தாண்டுதலில் 6 வது இடத்தினைப் பிடித்தார். 1990 இல் சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4 × 100 மீ தொடர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்). அவர் இரண்டு உலக வாகையர் போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடினார் (ரோம் நகரில் 1987 மற்றும் 1991 ஆம் ஆண்டில் டோக்கியோவில்; அவர் இரண்டு சந்தர்ப்பங்களிலும் 4 × 400 மீ தொடர் ஓட்டம் உறுப்பினராக இருந்தார்).[4]

சினிமா

தொகு

”அஸ்வினி” என்ற பெயரில் அவரது சொந்த வாழ்க்கைத் திரைப்படம் உட்பட்ட,சில தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். ”அஸ்வினி” திரைப்படத்தில் அவருக்கு சிறந்த நடிகைக்கான மாநில நந்தி விருது கிடைத்துள்ளது.[5]

நடித்த திரைப்படங்கள்

தொகு
  • அஸ்வினி (1991)
  • இன்ஸ்பெக்டர் அஸ்வினி (1993)
  • ஆதர்சம் (1993)
  • மிஸ் 420 (1995)[6]
  • ஆண்டர்ரூ ஆன்டரே (1996)

மேற்கோள்கள்

தொகு
  1. Nayudu, Vinay (2 June 2004). "Changing tracks". Mumbai Newsline. பார்க்கப்பட்ட நாள் 2009-04-22.
  2. 2.0 2.1 K. Bhagya, Prakash (25 March 2006). "One Ashwini, many roles". Vol. 29 No. 12. Sportstar Weekly. Archived from the original on 2008-09-19. பார்க்கப்பட்ட நாள் 2009-04-22. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. "Former athlete Ashwini Nachappa sends directive on AFI elections". NDTV. 2013-04-06 இம் மூலத்தில் இருந்து 2014-01-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140117080842/http://sports.ndtv.com/othersports/athletics/205892-former-athlete-ashwini-nachappa-sends-directive-on-afi-elections. பார்த்த நாள்: 2013-05-12. 
  4. Mrs. Ashwini Nachappa - CleansportsIndia பரணிடப்பட்டது 2018-09-24 at the வந்தவழி இயந்திரம் Hobbies of aswini is watching T.V, Acting, Singing. Her daughter Anisha Karaumbiah studies International Relations at the University of California, Davis.
  5. Ashwini Nachappa| Athlete | Personalities
  6. Ashwini Nachappa - IMDb
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்வினி_நாச்சப்பா&oldid=4173515" இலிருந்து மீள்விக்கப்பட்டது