அ. கி. இராமானுசன்

சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆங்கில எழுத்தாளர்
(அ. கி. ராமானுஜன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அத்திப்பட்டி கிருட்டிணசுவாமி இராமானுசன் (Attipate Krishnaswami Ramanujan) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கவிஞரும் மொழியியல் வல்லுநரும் ஆவார்.[1] 1929 ஆம் ஆன்டு மார்ச்சு மாதம் 16 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[2][3] எழுத்தாளர், ஆய்வாளர், நாட்டுப்புறவியலாளர், கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் என பன்முக ஆளுமையாக அறியப்படுகிறார்.[4] சிகாகோ பல்கலைக்கழகத்தில் இவர் மொழியியல் பேராசிரியராக இருந்தார்.

ஏ. கே. இராமானுஜன்
A. K. Ramanujan
பிறப்பு(1929-03-16)மார்ச்சு 16, 1929
மைசூர், இந்தியா
இறப்புசூலை 13, 1993(1993-07-13) (அகவை 64)
சிகாகோ, அமெரிக்கா
மொழிஆங்கிலம், கன்னடம், தமிழ்
தேசியம்இந்தியர்
கல்விமுனைவர், ஆங்கில இலக்கியம்
கல்வி நிலையம்மைசூர் பல்கலைக்கழகம், தெக்கான் கல்லூரி, இந்தியானா பல்கலைக்கழகம்
குறிப்பிடத்தக்க விருதுகள்மெக்கார்தர் ஆய்வுப்பணி, சாகித்திய அகாதமி விருது, பத்மசிறீ

தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய ஐந்து மொழிகளையும் ஆராய்ந்து நூல்களை எழுதியுள்ளார். [5]மொழிபெயர்ப்பும் செய்துள்ளார். இவர் தமிழ் சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் தமிழை நிலைப்படுத்துவதற்கு முயற்சி செய்தவர். சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் பெயர்த்த பெருமைக்குரியவர்.

1976 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கி சிறப்பித்தது.[6]

1993 ஆம் ஆண்டு சூலை மாதம் 13 ஆம் தேதியன்று இவர் காலமானார்.

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Ramanujan, Attipat Krishnaswami". scholarblogs.emory.edu. பார்க்கப்பட்ட நாள் 27 August 2018.
  2. "Guide to the A.K. Ramanujan Papers 1944-1995". lib.uchicago.edu. பார்க்கப்பட்ட நாள் 27 August 2018.
  3. "A.K. Ramanujan: a lonely hero". livemint.com. 2017-09-22. பார்க்கப்பட்ட நாள் 28 August 2018.
  4. Kulshrestha, Chirantan (1981). "A. K. Ramanjan: A PROFILE". Journal of South Asian Literature 16 (2): 181–184. 
  5. "தமிழ்த் தடம்: A.K. ராமானுஜன்", SBS Language, பார்க்கப்பட்ட நாள் 2024-06-22
  6. "Padma Awards Directory (1954–2009)" (PDF). Ministry of Home Affairs. Archived from the original (PDF) on 10 May 2013.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._கி._இராமானுசன்&oldid=4017106" இலிருந்து மீள்விக்கப்பட்டது