அ. ஜெ. வில்சன்

பேராசிரியர் அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன் (Alfred Jeyaratnam Wilson, 1928 - 31 மே 2005) இலங்கைத் தமிழ் கல்விமானும், வரலாற்றாளரும், எழுத்தாளரும் ஆவார். இலங்கைப் பல்கலைக்கழகம், நியூ பிரன்சுவிக் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பணியாற்றியவர்.

பேராசிரியர்
ஏ. ஜெயரத்தினம் வில்சன்
A. Jeyaratnam Wilson
பிறப்பு1928
இறப்பு31 மே 2000 (அகவை 71–72)
ரொறன்ரோ, கனடா
இனம்இலங்கைத் தமிழர்
படித்த கல்வி நிறுவனங்கள்கொழும்பு றோயல் கல்லூரி
இலண்டன் பொருளியல் பள்ளி
பெற்றோர்கே. ஆர். வில்சன்
வாழ்க்கைத்
துணை
சுசிலி செல்வநாயகம்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

அல்பிரட் வில்சன் 1928 ஆம் ஆண்டில் கே. ஆர். வில்சன் என்பவருக்கு மகனாகப் பிறந்தார்.[1] கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்றார்..[2] இளங்கலைப் பட்டத்தை (இலங்கைப் பல்கலைக்கழகத்திலும், முனைவர் பட்டத்தை இலண்டன் பொருளியல் பள்ளியிலும் பெற்றார்.[3]

வில்சன் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் மகள் சுசிலி என்பவரைத் திருமணம் புரிந்தார்[3][4] இவர்களுக்கு மல்லிகா, மைதிலி, குமணன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.[1]

வில்சன் "சிலோன் டெய்லி நியூஸ்" பத்திரிகையில் சில காலம் பணியாற்றினார்.[5] பின்னர் 1952 முதல் 1972 வரை 20 ஆண்டுகள் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[5] 1969 ஆம் ஆண்டில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறை ஆரம்பிக்கப்பட்ட போது அதன் முதல் தலைவராக ஏ. ஜெ. வில்சன் நியமிக்கப்பட்டார்.[6] 1970 முதல் 1994 வரை கனடாவின் நியூ பிரன்சுவிக் பல்கலைக்கழகத்தின் ஃபிரெடெரிக்டன் வளாகத்தில் அரசியல் அறிவியலில் பேராசிரியராகப் பணியாற்றினார்.[7] இளைப்பாறிய பின்னர் அதே பல்கலைக்கழ்கத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றினார்.[3]

1978 முதல் 1983 வரை இலங்கை சனாதிபதி, ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுக்கு அரசமைப்புச் சட்டத்தில் ஆலோசகராக இருந்தார்.[8] அமெரிக்க அரசத் திணைக்களத்தில் தெற்காசியாவுக்கான ஆலோசகராகவும் பணியாற்றியிருந்தார்.[7] கனடியப் பன்னாட்டு அபிவிருத்தி ஆணையம், கனடிய அகதிகளுக்கான ஆலோசனைச் சபை, அமெரிக்காவின் பல்கலாசார அமைச்சு, மற்றும் குடிவரவுத் தீர்ப்பாயம் ஆகியவற்றிலும் பணியாற்றினார்.[7]

மறைவு

தொகு

வில்சன் 2000 மே 31 இல் ரொறன்ரோவில் தனது 71வது அகவையில் காலமானார்.[1][4][7]

ஆக்கங்கள்

தொகு

வில்சன் எட்டு நூல்களையும், நூற்றுக்கும் அதிகமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார்[2][7]

  • Politics in Sri Lanka, 1947–1973 (1974, மாக்மிலன்)
  • Electoral Politics in an Emergent State: the Ceylon General Election of May 1970 (1975, கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்)
  • The Gaullist System in Asia (1980, மாக்மிலன்)
  • The States of South Asia: Problems of National Integration : Essays in honour of W.H. Morris-Jones (1982, Hurst)
  • The Break-up of Sri Lanka: The Sinhalese-Tamil Conflict (1988, Hurst)
  • S. J. V. Chelvanayakam and the Crisis of Sri Lankan Tamil Nationalism, 1947–1977: a Political Biography (1994, அவாய் பல்கலைக்கழகம்)
  • Sri Lankan Tamil Nationalism: Its Origins and Development in the 19th and 20th Centuries (2000, Hurst)
  • The Post-Colonial States of South Asia: Democracy, Development and Identity (2001, Palgrave)

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Obituaries". தமிழ் டைம்சு XIX (6): 30. 15 சூன் 2000. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://noolaham.net/project/36/3590/3590.pdf. 
  2. 2.0 2.1 Deen, Thalif (10 மே 2009). "Tribute to three "Golden Age" Dons with deep respect". சிறீலங்கா கார்டியன். http://www.srilankaguardian.org/2009/05/tribute-to-three-golden-age-dons-with.html. 
  3. 3.0 3.1 3.2 Gooneratne, Brendon (4 சூன் 2000). "Alfred Jeyaratnam Wilson (1928–2000) "The Brahmin of Brunswick"". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2014-08-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140819213308/http://www.island.lk/2000/06/04/feature.html. 
  4. 4.0 4.1 "Death of Prof. A. J. Wilson". தி ஐலண்டு. 2 சூன் 2000 இம் மூலத்தில் இருந்து 2014-08-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140819214205/http://www.island.lk/2000/06/02/islnews.html. 
  5. 5.0 5.1 Philips, Rajan (15 சூன் 2000). "Professor Alfred Jeyaratnam Wilson (1928–2000): An Appreciation". தமிழ் டைம்சு XIX (6): 25–27. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://noolaham.net/project/36/3590/3590.pdf. 
  6. "General Informations". பேராதனைப் பல்கலைக்கழகம். Archived from the original on 2012-03-22. பார்க்கப்பட்ட நாள் 2015-04-26.
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 "A. Jeyaratnam Wilson". University of New Brunswick.
  8. "One Hundred Tamils of the 20th Century – Alfred Jeyaratnam Wilson". Tamil Nation.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._ஜெ._வில்சன்&oldid=4043605" இலிருந்து மீள்விக்கப்பட்டது