அ. பள்ளிப்பட்டி

தருமபுரி மாவட்ட சிற்றூர்

அ. பள்ளிப்பட்டி (A. pallipatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், அ. பள்ளிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.[2][3][4] இங்கு கோழிப்பண்ணைகள் அதிகம் உள்ளது. அரசின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. காணியம்மன் தோ்த்திருவிழா சிறப்புப்பெற்றது. இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643538.[5]

அ. பள்ளிப்பட்டி
அ. பள்ளிப்பட்டி is located in தமிழ் நாடு
அ. பள்ளிப்பட்டி
அ. பள்ளிப்பட்டி
தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 11°56′25.8″N 78°24′06.7″E / 11.940500°N 78.401861°E / 11.940500; 78.401861
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
பின்கோடு
636905[1]

அமைவிடம்

தொகு

இவ்வூர், பாப்பிரெட்டிப்பட்டியிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத் தலைநகரான தருமபுரியிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 281 கிலோ மீட்டர் தொலைவிலும், தேசிய நெடுஞ்சாலை 179ஏவை ஒட்டி அமைந்துள்ளது. பரப்பளவு 891.67 ஹெக்டேர் ஆகும்.[2][4]

மக்கள் வகைப்பாடு

தொகு

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அ. பள்ளிப்பட்டியில் 1,160 குடும்பங்களும் 4,156 மக்களும் வசிக்கின்றனர். இதில் ஆண்களின் எண்ணிக்கை 2,096 மற்றும் பெண்களின் எண்ணிக்கை 2,060. சராசரிக் கல்வியறிவு 66.87 சதவிகிதம் ஆகும்.[2]

மேற்கோள்

தொகு
  1. "அ. பள்ளிப்பட்டி பின்கோடு". www.villageatlas.com. Archived from the original on 2022-11-15. பார்க்கப்பட்ட நாள் 15 நவம்பர் 2022.
  2. 2.0 2.1 2.2 "அ. பள்ளிப்பட்டி குறிப்பு". www.villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 15 நவம்பர் 2022.
  3. "அ. பள்ளிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி". www.geolysis.com. பார்க்கப்பட்ட நாள் 15 நவம்பர் 2022.
  4. 4.0 4.1 "அ. பள்ளிப்பட்டி கிராமம்". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 15 நவம்பர் 2022.
  5. "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._பள்ளிப்பட்டி&oldid=3704106" இலிருந்து மீள்விக்கப்பட்டது