அ. வெங்கடாசலம்
அ. வெங்கடாசலம் (A.Venkatachalam) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவரின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டதிலுள்ள வடகாடு கிராமம் ஆகும். இவர் ஆலங்குடி தொகுதியில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராகவும், பிற்படுத்தப்பட்ட மக்கள் நலத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
அ. வெங்கடாசலம் | |
---|---|
சட்ட மன்ற உறுப்பினர் | |
பதவியில் 1984–1988 | |
பதவியில் 1996–2001 | |
பதவியில் 2001–2006 | |
பிரதமர் | அ.வெங்கடாசலம் |
தொகுதி | ஆலங்குடி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | புள்ளாச்சி குடியிருப்பு வடகாடு, தமிழ்நாடு, இந்தியா | செப்டம்பர் 15, 1955
இறப்பு | வடகாடு | அக்டோபர் 7, 2010
துணைவர் | இலட்சுமி |
பிள்ளைகள் | ராஜபாண்டி, தனலட்சுமி, தமிழரசி |
வேலை | அரசியல்வாதி |
அக்டோபர் 7, 2010 அன்று இவரது வீட்டில் இருந்த போது அங்கு வந்த முகம் தெரியாத கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.[1]
வளர்ச்சியும் அரசியல் பின்னணியும்
தொகுவெங்கடாசலம் தன்னுடைய கல்வி பயணத்தை இறுதியாக புதுக்கோட்டையில் உள்ள அரசு மாமன்னர் கல்லூரியில் பி.யூ.சி பயின்றார். எம். ஜி. ஆர் அனுதாபியான இவர் 1984, 2001 ஆம் ஆண்டுகளில் அதிமுக சார்பிலும் 1996இல் சுயேச்சையாகவும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்.[2] 1984-ல் அரசியல் களத்தில் இறங்கிய வெங்கடாசலம் 2010 வரை தனக்கென ஒரு பாதையை வகுத்து அதன் வழியாக அவரின் (முத்தரையர் )சமுதாய மக்களின் மேம்பாட்டுக்காக பெரிதும் பாடுபட்டார். 1996இல் அதிமுக சார்பில் போட்டியிடவாய்ப்பு வழங்காத நிலையிலும் சட்டமன்றத் தேர்தலில் பூட்டுச்சாவி சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ex-AIADMK minister Venkatachalam killed". The New Indian Express. 8 October 2010. http://newindianexpress.com/states/tamil_nadu/article288765.ece. பார்த்த நாள்: 2010-10-10.
- ↑ "Issues of basic amenities remain unresolved". தி இந்து. 6 May 2006 இம் மூலத்தில் இருந்து 2 பிப்ரவரி 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080202230153/http://www.hindu.com/2006/05/06/stories/2006050615510300.htm. பார்த்த நாள்: 2009-08-08.
- ↑ https://tamil.oneindia.com/news/2010/10/08/admk-minister-venkatachalam-murder.html?story=1