வடகாடு

இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு ஊர்

வடகாடு தானம நாடு[தெளிவுபடுத்துக] (Vadakadu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி வட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு கிராமமும், ஒரு பெரிய ஊராட்சியும் ஆகும். அரசு மேல் நிலைப் பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு கால்நடை மருத்துவமனை, விவசாய கூட்டுறவு வங்கி, நடுவண் அரசுடைமையுடைய அஞ்சல்நிலையம்[3], அரசுடைமையுடைய யுகோ வங்கி, காவல் நிலையம், உயர் மின்னழுத்த மின்பகிர்வு நிலையம், மற்ற அரசு அலுவலகங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையம் உள்ளன. இவ்வூரில் முத்தரையர் சமுதாய மக்கள் நிறைந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தானாண்மை நாட்டுக் கட்டமைப்பின்கீழ் வரும் மக்கள் குழுவினர் ஆவர்.

வடகாடு
வடகாடு
அமைவிடம்: வடகாடு, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°23′N 78°59′E / 10.39°N 78.98°E / 10.39; 78.98
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் புதுக்கோட்டை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
ஊராட்சி மன்ற தலைவர்
மக்கள் தொகை

அடர்த்தி

7,984

8/km2 (21/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

5 சதுர கிலோமீட்டர்கள் (1.9 sq mi)

74 மீட்டர்கள் (243 அடி)

குறியீடுகள்

இப்ப‌குதி தோராய‌மாக‌ 19-ஆம் நூற்றாண்டு கால‌த்தில் உருவான‌து.[சான்று தேவை]

வ‌ட‌காடு தன்னுள் 18 பட்டிகளை (தெருக்கள்) கொண்டுள்ளது

தொகு

அவைகளின் தொகுப்பு

  1. கல்லிக்கொல்லை
  2. சுந்தன் பட்டி
  3. பருத்திக் கொல்லை
  4. தோழன் பட்டி
  5. பூனைக்குட்டிப் பட்டி
  6. வடக்குப் பட்டி
  7. குறுந்தடிக் கொல்லை
  8. பரமன் பட்டி
  9. பள்ளத்து விடுதி
  10. பாப்பா மனை
  11. புள்ளாச்சிக் குடியிருப்பு
  12. மாங்குட்டிப் பட்டி
  13. வினாயகம் பட்டி
  14. தெற்குப் பட்டி
  15. பிலாக் கொல்லை
  16. சாத்தன் பட்டி
  17. சேர்வைகாரன் பட்டி
  18. செட்டியார் தெரு

தொழில்

தொகு

இப்பகுதி மக்கள் அனைவரும் விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர். அதுவே அவர்களில் வாழ்வாதாரம். இங்கு வாழை, பல வகையான மலர்கள்(மகை, அரும்பூ, ரோஜா, முல்லை) போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. தற்போது நிலத்தடிநீர் மட்டமானது 160 அடி வரைச் சென்றுள்ளது. வானம் பார்த்த பூமியாக இருந்து வந்த இப்பகுதி தற்போது பச்சை நிறமாக காட்சியளிக்கிறது. நிலத்தடி நீர் மட்ட மாறுபாடானது மழைக் காலங்களில் 9.08 மீட்டர் ஆகவும், கோடை காலங்களில் 17.49 மீட்டர் ஆகவும் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரையில் இந்த நிலத்தடி நீர் மட்ட மாறுபாடானது மிக அதிகம் இப்பகுதிக்குத்தான் என்றாலும் கூட விவசாயத்தில் அதிகப்படியான கவனங்களுடன் ஈடுபடுகிறார்கள். காய்கறிகள் உற்பத்தி 1995-96ம் ஆண்டுகளில் 2900 டன் அளவில் 60 ஹெக்டேர் நிலப்பரப்பிலிருந்துது மகசூல் காணப்பட்டது.[4]

ஆழ்குழாய் கிணறு வழியாக நீர் பெறப்பட்டு விவசாயம் செய்யப்படுகிறது. 25000 ஏக்கர் நிலப்பரப்பு ஆழ்குழாய் கிணறு வழியாக பாசன வசதிபெறுகிறது.

புவி அமைவிடம்

தொகு

புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கான மாநில நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை நகரத்திலிருந்து சரியாக 29 கி. மீ தொலைவிலும் பட்டுக்கோட்டையிலிருந்து 30 கி. மீ தொலைவிலும் அமைந்துள்ளது. முற்றிலும் சமதளமுடன் கூடிய பகுதி மற்றும் மரகாய்கறி, பழவகைகள் உற்பத்தி செய்ய சரியான மண் தன்மைகொண்ட பகுதியாகும்.[5]

மக்கள் தொகை

தொகு

2006 ஆம் ஆண்டின் மொத்த மக்கள் தொகை 7,948. இதில் பெண்கள் 3993 ஆண்கள் 3,955. மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 1,725. மேலும் ஆண்கள் பெண்களை விட சராசரி 1% குறைவாக உள்ளனர்.[6]

இப்பகுதியில் பின்பற்றப்படும் திருமண முறைகள்

தொகு

இவர்களிடையே சிலவகையான பிரிவுகள் (கரைகள்) கொண்டுள்ளார்கள். அப்பிரிவுகளை வைத்தே திருமண முறைகள் நடைபெறுகிறது. பொதுவாக இவர்களுடைய 98 சதவிகிதம் இந்த முறையினையே பின்பற்றுகிறார்கள். இவர்களுடைய திருமண வைபோக சம்பிரதாயங்கள் அனைத்தும் இந்து திருமண முறையினை ஒத்தது சற்று மாறுபட்டது. அவைகளாவன.

  • வடகாட்டான்கரை கரைகாரர்கள்
  • வந்திக்காரவகையரா கரைகாரர்கள்
  • பூனைக்குட்டிபட்டி,தோழன்பட்டி கரைகாரர்கள்
  • சேர்வைகாரவகையறாக்கள்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள குழுமத்திற்குள் தன்னுள்ளே திருமணம் செய்துகொள்வதில்லை. அதாவது ஒவ்வொரு குழுமத்திற்குள்ளும் சில தெருக்கள் அடங்கும். அந்த குழுமத்தில் உள்ளடங்கிய தெருக்களுக்குள் உள்ளவர்களுக்குள் திருமணம் செய்துக்கொள்வதில்லை. மாறாக அடுத்த குழுமத்தில் உள்ளடங்கிய தெருவில் உள்ளவர்களுடன் மட்டுமே திருமணம் செய்கிறார்கள். இக்கட்டமைப்பிற்கு சேர்வைகாரவகையறாக்கள் என்ற குழுமத்திற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. காரணம் அக்குழுமம் முற்றிலும் ஆலய விழாவில் முக்கியமானவர்கள். மேலும் இக்குழுமத்தில் மட்டும் ஒரே ஒரு தெரு கொண்ட மிகச் சிறிய (100 குடும்பம்,500 நபர்கள்) குழுமம் ஆகும்.

மத நம்பிக்கை

தொகு

இப்பகுதி மக்கள் பெரும்பாலும் இந்து சமயத்தையே பின்பற்றுகின்றனர். இருந்தும் இந்துசமய சடங்குகளை குறிப்பாக திருமண சடங்குகளில் பின்பற்றப்படும் புரோகிதர், கோமம், பற்பல பூஜைகள் போன்றவைகள் பின்பற்றுவது இல்லை.

ஆலயம் மற்றும் விழாக்காலங்கள்

தொகு

மாதந்தோறும் பௌர்ணமி் அன்று அம்மனுக்கு அபிசேக ஆராதனை சிறப்பாக நடைபெறும். ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அருள்மி்கு முத்துமாரி அம்மன் ஆலயத்தில் காப்பு கட்டி 10-14 நாட்கள் திருவிழா நடைபெறும். 7ம் நாள் பால்குடம் எடுத்தல் மற்றும் சேர்வைகாரன்பட்டி சேர்வைகார வகையறாக்களால் நடத்தபடும் அன்னதான விழாவும், 8ம் நாள் பொங்கல் விழாவும், 9ம் நாள் அருள்மிகு முத்துமாரி அம்மன் தேர்பவனி திருவிழாவும், 10ம் நாள் அம்மன் மஞ்சள் தீர்த்த உற்சவத்திருவிழாவும், வெகுவிமர்சியாக நடைபெறும். திருமணஞ்சேரி என்ற புனித தளம் இவ்வூரிலிருந்து சுமார் 10 கி. மீ வடக்கில் உள்ளது.

குறிப்பிடத்தக்க நபர்கள்

தொகு

இப்பகுதியினை பிறப்பிடமாகக் கொண்ட குறிப்பிடப்படத் தக்க வேண்டியவர்கள்

மொய்விருந்து

தொகு

வருடாந்திரம் ஆடி மாதம் முழுவதும் தினமும் இப்பகுதியில் மொய்விருந்து நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமாக கொண்டுள்ளார்கள். இதன் உயரிய நோக்கம் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒருவரை சற்று உயர்த்தும் நோக்கம் மட்டுமே. எவ்வித வட்டியும் இன்றி அவர் இந்த மொய்விருந்து விழாவில் கிடைத்த தொகையினை கொண்டு தன்னை பொருளாதாரத்தில் சற்று உயர்த்திக்கொள்ள ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சி நடைபெறும் நேரம் பகல் 12 மணி ஆகும்.

அண்டை கிராமங்கள்

தொகு

வடகாடு கிராமத்தினை தொடர்ந்து சில கிராமங்கள் உள்ளன. அவைகள் இக்கிராமத்துடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ளன. கொத்தமங்கலம், கீரமங்கலம், குளமங்கலம், பனங்குளம், மாங்காடு, அனவயல், புள்ளான்விடுதி, மேற்பனைக்காடு போன்ற கிராமங்கள் இக்கிராமத்தினை ஒட்டிய பகுதிகளாகும்.

வெற்றி பெற்ற[தெளிவுபடுத்துக] வேட்பாளர்கள் பட்டியல்

தொகு
ஆண்டு வாக்காளர்கள் (1000) வாக்களித்தோர் (%) வேட்பாளர் வாக்குகள் சதவிகிதத்தில் கட்சி
2011 90.84 38.60 கு. ப. கிருஷ்ணன் 60.67 அதிமுக
2006 100.84 38.60 ராசசேகரன் 30.67 இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
2001 139.84 68.60 அ. வெங்கடாசலம் 42.67 அதிமுக
1996 147.50 75.75 அ. வெங்கடாசலம் 25.58 சுயேட்சை
1991 132.45 74.41 எஸ். சண்முகநாதன் 68.83 அதிமுக
1989 130.01 81.86 சந்திரசேகரன்.K.BV.SC 29.18 திமுக
1984 108.05 81.49 அ. வெங்கடாசலம் 55.33 அதிமுக
1980 108.05 81.49 பி. திருமாறன் 55.33 அதிமுக
1977 97.61 78.82 த. புஷ்பராஜு 38.94 இதேகா
1971 70.61 48.82 கே. வி. சுப்பையா 70.94 திமுக
1967 84.61 58.82 கே. வி. சுப்பையா 80.94 திமுக

[7]. [8]

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-11-29. பார்க்கப்பட்ட நாள் 2010-07-07.
  4. அரசுதளத்திலிருந்து
  5. [1]
  6. [2]
  7. [3]
  8. "Election Commission of India". eci.nic.in. Archived from the original on 2012-12-07. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடகாடு&oldid=3721322" இலிருந்து மீள்விக்கப்பட்டது