அ ஆ இ ஈ (திரைப்படம்)

அ ஆ இ ஈ என்பது 2009 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ் திரைப்படமாகும். நவ்தீப், அரவிந்த் ஆகாஷ், மோனிகா, சரண்யா மோகன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களிலும், பிரபு, கொச்சின் ஹனீபா, லிவிங்ஸ்டன், மனோரமா, கஞ்சா கறுப்பு ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்த இத்திரைப்படத்தை இயக்குநர் சபாபதி இயக்கியிருந்தார்.[1] இந்தியாவின் பழம்பெரும் படத்தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் படத்தயாரிப்பு நிறுவனம் தயாரித்த இத்திரைப்படம் 2009 சனவரி 9 ஆம் தேதி அன்று வெளியானது.[2] இத்திரைப்படம் 2007 ஆவது ஆண்டில் தெலுங்கில் வெளியான சந்தமாமா திரைப்படத்தின் மறுஆக்கமாகும்.

அ ஆ இ ஈ
இயக்கம்சபாபதி
தயாரிப்புஏவிஎம் கே. சண்முகம்
கதைகிருஷ்ணா வம்சி
வி. சீனிவாசன்
இசைவிஜய் ஆண்டனி
நடிப்புபிரபு
நவ்தீப்
அரவிந்த் ஆகாஷ்
மோனிகா
சரண்யா மோகன்
லிவிங்ஸ்டன்
ஒளிப்பதிவுஅருள்தாஸ்
படத்தொகுப்புகே. சங்கர்
கே. தங்கவேல் குமரன்
விநியோகம்ஏவிஎம் படத்தயாரிப்பு நிறுவனம்
வெளியீடுசனவரி 9, 2009 (2009-01-09)
நாடுஇந்தியா இந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்தொகு

எண் பாடல் பாடியவர்(கள்)
1 அ ஆ இ ஈ ராகுல் நம்பியார், தினேஷ்
2 டிங்கி தப்பு மேகா, ஷீபா, வினயா, மாயா, விஜய் ஆண்டனி
3 கன்னி வெடி சங்கீதா ராஜேஸ்வரன், விஜய் ஆண்டனி
4 மேனா மினுக்கி விஜய் ஆண்டனி, சுசித்ரா ராமன், சங்கீதா ராஜேஸ்வரன்
5 நட்ட நடு சங்கீதா ராஜேஸ்வரன், கார்த்திக், கிறிஸ்டோபர்
6 தப்போ தப்போ பக்சி, சுலபா

மேற்கோள்கள்தொகு

  1. "Oct 6th treats ‘A AA E EE’ audio launch". Indiaglitz.com. மூல முகவரியிலிருந்து 5 October 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-10-04.
  2. "'A AA E EE' comes in January - Tamil Movie News". IndiaGlitz. பார்த்த நாள் 2012-02-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ_ஆ_இ_ஈ_(திரைப்படம்)&oldid=2703068" இருந்து மீள்விக்கப்பட்டது