ஆஃபினியம்(III) அயோடைடு
ஆஃபினியம்(III) அயோடைடு (Hafnium(III) iodide) என்பது HfI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆஃபினியமும் அயோடினும் சேர்ந்து கருப்பு நிறத்தில் ஒரு திண்மமாக இது உருவாகிறது.[2]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ஆஃபினியம் மூவயோடைடு
| |
இனங்காட்டிகள் | |
13779-73-2 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 161242838 charge error |
| |
பண்புகள் | |
HfI3 | |
வாய்ப்பாட்டு எடை | 559.20 g·mol−1 |
தோற்றம் | கருப்பு நிறப் படிகங்கள்[1] |
உருகுநிலை | சிதைவடையும் |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | ஆஃபினியம்(III) குளோரைடு ஆஃபினியம்(III) புரோமைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | தைட்டானியம்(III) அயோடைடு சிர்க்கோனியம்(III) அயோடைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுமற்ற குழு 4 மூவாலைடுகள் போலவே, ஆஃப்னியம்(III) அயோடைடைடும் ஆஃபினியம்(IV) அயோடைடை ஆஃபினியம் உலோகத்துடன் சேர்த்து உயர்-வெப்பநிலையில்க ஒடுக்கம் செய்வதன் மூலம் தயாரிக்கலாம். இருப்பினும் முழுமையற்ற வினை மற்றும் அதிகப்படியான உலோகம் போன்ற காரணங்களால் தயாரிக்கப்படும் ஆஃபினியம்(III) அயோடைடு மாசுபடுவது பெரும்பாலும் நிகழ்கிறது.[2]
- 3 Hf I4 + Hf → 4 Hf I3
உதாரணமாக அலுமினியம் போன்ற மற்ற உலோகங்களை ஒடுக்கும் முகவராகப் பயன்படுத்தப்படலாம். HfI3.2–3.3 மற்றும் Hf I3.0–3.5 ஆகிய விகிதாச்சாரமற்ற அளவுகளில் ஆஃபினியம்(III) அயோடைடு சேர்மம் உருவாகிறது.[3][4]
கட்டமைப்பு மற்றும் பிணைப்பு
தொகுஆஃபினியம்(III) அயோடைடு சேர்மம் சிர்கோனியம்(III) அயோடைடு போன்ற அதே படிக அமைப்பை ஏற்றுக்கொள்கிறது.[5] மேலும், இதன் கட்டமைப்பு β-TiCl3 அமைப்பைப் போலவே உள்ளது.[2] Hf3+ அயனிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட எண்முக இடைவெளிகளில் மூன்றில் ஒரு பகுதியை அறுகோண நெருக்கப் பொதிவு அயோடைடு அயனிகளை இவ்வமைப்பு அடிப்படையாகக் கொண்டதாகும்.[2] இது முகப்-பகிர்வு {HfI6} எண்முகத்தின் இணையான சங்கிலிகளைக் கொண்டுள்ளது.[5]
ஆஃபினியம்(III) அயோடைடு d1 உலோக அயனி Hf3+ அயனிக்கு எதிர்பார்க்கப்படுவதை விட குறைவான காந்தத் தருணத்தைக் கொண்டுள்ளது. எனவே இது புறக்கணிக்க முடியாத Hf-Hf பிணைப்பைக் குறிக்கிறது.[2] Hf-Hf பிரிப்பு முதலில் 3.295 Å அளவில் என்று தெரிவிக்கப்பட்டது.[6] ஆனால் விகிதாச்சாரம் அல்லாத ஆஃபினியம்(III) அயோடைடு பற்றிய ஒரு ஆய்வு குறைந்த சமச்சீர் அமைப்பைக் குறிக்கிறது.[3]
வினைத்திறன்
தொகுகுளோரைடு மற்றும் புரோமைடைப் போலவே, ஆஃபினியம்(III) அயோடைடும் தண்ணீரை ஒடுக்கும் சக்தி வாய்ந்த ஓர் ஒடுக்கும் முகவராகும். எனவே ஆஃபினியம்(III) அயோடைடின் நீர் தொடர்பான வேதியியல் எதுவும் குறிப்பிடும்படி இல்லை.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ William M. Haynes, ed. (2013). CRC Handbook of Chemistry and Physics (93rd ed.). CRC Press. p. 4–66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1466571143.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. p. 965. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- ↑ 3.0 3.1 Struss, Arthur W.; Corbett, John D. (1969). "Lower halides of hafnium. Nonstoichiometric hafnium triiodide phase". Inorg. Chem. 8 (2): 227–232. doi:10.1021/ic50072a009.
- ↑ Clark, R. J. H.; Bradley, D. C.; Thornton, P. (2013). The Chemistry of Titanium, Zirconium and Hafnium Pergamon Texts in Inorganic Chemistry. Elsevier. p. 432. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4831-5921-8.
- ↑ 5.0 5.1 Wells, A. F. (1984). Structural Inorganic Chemistry (5th ed.). Oxford University Press. pp. 418–419. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-965763-6.
- ↑ Dahl, Lawrence F.; Chiang, Tao-I; Seabaugh, Pyrtle W.; Larsen, Edwin M. (1964). "Structural Studies of Zirconium Trihalides and Hafnium Triiodide". Inorg. Chem. 3 (9): 1236–1242. doi:10.1021/ic50019a008.