சிர்க்கோனியம்(III) அயோடைடு

வேதிச் சேர்மம்

சிர்கோனியம்(III) அயோடைடு (Zirconium(III) iodide) என்பது ZrI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டுடன் கூடிய ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

சிர்க்கோனியம்(III) அயோடைடு
Ball-and-stick model of a polymer chain of face-sharing octahedra in the crystal structure of zirconium(III) iodide
Ball-and-stick model of the packing of polymer chains in the crystal structure of zirconium(III) iodide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சிர்க்கோனியம் மூவயோடைடு
இனங்காட்டிகள்
13779-87-8 Y
InChI
  • InChI=1S/3HI.Zr/h3*1H;/q;;;+3/p-3
    Key: BPVKTQRLRAVYEX-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
  • I[Zr](I)I
பண்புகள்
I3Zr
வாய்ப்பாட்டு எடை 471.94 g·mol−1
தோற்றம் அடர்நீல படிகங்கள்[1]
உருகுநிலை 727 °C (1,341 °F; 1,000 K)
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம்
புறவெளித் தொகுதி Pmmn, No. 59
Lattice constant a = 12.594 Å, b = 6.679 Å, c = 7.292 Å
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சிர்க்கோனியம்(III) குளோரைடு, சிர்க்கோனியம்(III) புரோமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் தைட்டானியம்(III) அயோடைடு, ஆஃபினியம்(III) ஐயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

மற்ற குழு 4 மூவயோடைடுகளைப் போலவே, சிர்கோனியம் (IV) அயோடைடுடன் சிர்கோனியம் உலோகத்தை சேர்த்து வினை கலவையை உயர் வெப்பநிலை ஒடுக்க வினைக்கு உட்படுத்தி குறைப்பதன் மூலம் சிர்கோனியம்(III) அயோடைடை தயாரிக்கலாம்.

3 ZrI 4 + Zr → 4 ZrI 3

அலுமினியம் மூவயோடைடுடன் ஏதேனுமொரு சிர்கோனியம்(III) கரைசலைச் சேர்த்து சிர்கோனியம்(III) அயோடைடை படிகமாக்குவது ஒரு மாற்று தயாரிப்பு முறையாகும். சிர்கோனியம் (IV) அயோடைடின் எளிதுருகும் கரைசலை நீர்ம அலுமினியம் மூவயோடைடு கரைசலைச் சேர்த்து 280-300 பாகை செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்துவதன் மூலம் தேவையான மேற்கூறிய கரைசல் தயாரிக்கப்படுகிறது. [2] [3]

கட்டமைப்பு மற்றும் பிணைப்பு

தொகு

சிர்கோனியம்(III) அயோடைடு d 1 உலோக அயனி Zr 3+ அயனிக்கு எதிர்பார்த்ததை விட குறைவான காந்தத் தருணத்தைக் கொண்டுள்ளது, இதனால் மிகக் குறைவான Zr-Zr பிணைப்பு கொண்டதாக உள்ளது.

சிர்கோனியம்(III) அயோடைடின் படிக அமைப்பு, Zr 3+ அயனிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட எண்முக இடைவெளிகளில், மூன்றில் ஒரு பகுதி அயோடைடு அயனிகளின் அறுகோண நெருக்கப் பொதிவை அடிப்படையாகக் கொண்டது. இந்த அமைப்பு சமமற்ற இடைவெளி கொண்ட உலோக அணுக்களுடன் முகப்-பகிர்வு {ZrI 6 } எண்முக [4] இணையான சங்கிலிகளைக் கொண்டுள்ளது. Zr-Zr பிரிப்பு 3.17 Å மற்றும் 3.51 Å அளவுகளுக்கு இடையில் மாறி மாறி வருகிறது. [5]

ZrCl 3, ZrBr 3 மற்றும் ZrI 3 ஆகியவை β-TiCl 3 கட்டமைப்பிற்கு மிகவும் ஒத்த கட்டமைப்புகளை ஏற்றுக்கொள்கின்றன. அனைத்து மூன்று ZrX 3 சேர்மங்களின் கட்டமைப்பிலும் உலோக-உலோக அச்சில் எண்முகத்தின் சிறிதளவு நீட்சி உள்ளது. உலோக-உலோக விலக்கல் பண்பு இதற்கு காரணமாக இருக்கலாம். [3] ஆனால் இந்நீட்சி குளோரைடில் மிகவும் அதிகமாகவும் , புரோமைடில் மிதமானதாகவும் அயோடைடில் மிகக் குறைவாகவும் காணப்படுகிறது. [3]

மேற்கோள்கள்

தொகு
  1. William M. Haynes, ed. (2013). CRC Handbook of Chemistry and Physics (94th ed.). CRC Press. p. 4-101. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1466571143.
  2. Larsen, E. M.; Moyer, James W.; Gil-Arnao, Francisco; Camp, Michael J. (1974). "Synthesis of crystalline zirconium trihalides by reduction of tetrahalides in molten aluminum halides. Nonreduction of hafnium". Inorg. Chem. 13 (3): 574–581. doi:10.1021/ic50133a015. 
  3. 3.0 3.1 3.2 Larsen, Edwin M.; Wrazel, Julie S.; Hoard, Laurence G. (1982). "Single-crystal structures of ZrX3 (X = Cl, Br, I) and ZrI3.40 synthesized in low-temperature aluminum halide melts". Inorg. Chem. 21 (7): 2619–2624. doi:10.1021/ic00137a018. Larsen, Edwin M.; Wrazel, Julie S.; Hoard, Laurence G. (1982).
  4. Wells, A. F. (1984). Structural Inorganic Chemistry. pp. 418–419.
  5. Lachgar, Abdessadek; Dudis, Douglas S.; Corbett, John D. (1990). "Revision of the structure of zirconium triiodide. The presence of metal dimers". Inorg. Chem. 29 (12): 2242–2246. doi:10.1021/ic00337a013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிர்க்கோனியம்(III)_அயோடைடு&oldid=4120005" இலிருந்து மீள்விக்கப்பட்டது