ஆகாசிகங்கை அருவி

அசாம் மாநிலத்திலுள்ள அருவி

ஆகாசிகங்கை அருவி (Akashiganga Waterfalls) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் ஹொஜாய் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது 900 மீட்டர் (3,000 அடி) உயரத்தில் அடர்ந்த காடுகள் நிறைந்த மலையிலிருந்து எழுகிறது. அருவி 140 அடி (43 மீ) கீழே விழுகிறது. மேலும் இங்கு சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் ஒன்று உள்ளது. இந்த அருவி பயபக்தியுடன் வழிபடப்படுகிறது. மேலும் பக்தர்கள் மாக் பிஹுவின் மத நிகழ்வில் குளிப்பதற்கு இங்கு வருகை தருகின்றனர்.

அமைவிடம் தொகு

இது டோபோகா நகரத்திலிருந்து 11.6 கிமீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 36 இல் உள்ளது.

புராணக் கதை தொகு

தாட்சாயிணி புராணத்தின் படி, சிவன் தனது மனைவி சதியின் உடலை சுமந்துகொண்டு பெரும் கோபத்தில் பிரபஞ்சம் முழுவதும் சுற்றித் திரிந்தார். சிவனை தனது இயல்பான நிலைக்கு கொண்டு வருவதற்காக விஷ்ணு சதியின் இறந்த உடலை தனது சக்கரத்தால் சிதைத்தார். அப்போது அவரது தலை ஆகாசிகங்கை அருகே விழுந்ததாக நம்பப்படுகிறது. எனவே, அசாமில் மாக் பிஹு என்று அழைக்கப்படும் மகர சங்கராந்தி தினத்தன்று, தங்கள் பாவங்களைக் கழுவுவதற்காக புனித அருவியில் நீராடுவதற்காக அதிக எண்ணிக்கையில் வருகை தரும் இந்துக்களின் புனித யாத்திரைத் தலமாக இது விளங்குகிறது. [1]

அம்சங்கள் தொகு

அருவியானது பாப்லாங் எனப்படும் நீரோடையை உருவாக்குகிறது. காளிகா புராணத்தின் 18வது அத்தியாயத்தில் ஆகாசிகங்கையின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. [2]

2010 ஆம் ஆண்டு அசாம் மாநிலத்தின் தலைநகரான திஸ்பூரில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அருவியைச் சுற்றியுள்ள குடிநீர், மின்சாரம் மற்றும் அழகியல் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 42 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய முன்மொழிந்தது. அருவியின் நீரின் தரத்தில் புளோரைடு உள்ளடக்கத்தைக் கருத்தில் கொண்டு, அசாம் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நீர் விநியோகத்திற்கான மாற்று ஆதாரத்தை பரிந்துரைத்தது.[3]

சான்றுகள் தொகு

  1. "16 January 2014". "16 January 2014". Assam Tribune. Archived from the original on 1 June 2016. Retrieved 2 May 2016.
  2. Col Ved Prakash (1 January 2007). Encyclopaedia of North-East India. Atlantic Publishers & Dist. p. 1311. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-269-0705-2.
  3. "Tourism push for cave full of bats & waterfalls". Telegraph India. 20 July 2010. http://www.telegraphindia.com/1100720/jsp/northeast/story_12703339.jsp. பார்த்த நாள்: 2 May 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆகாசிகங்கை_அருவி&oldid=3794950" இலிருந்து மீள்விக்கப்பட்டது