ஆக்சிசன் மோனோபுளோரைடு

வேதிச் சேர்மம்

ஆக்சிசன் மோனோபுளோரைடு (Oxygen monofluoride) என்பது OF என்ற என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆக்சிசன் மற்றும் புளோரின் வாயுக்கள் இணைந்து இந்த இயங்குறுப்பு உருவாகிறது.[1][2][3] ஆக்சிசன் புளோரைடுகளில் இதுவே எளிமையான புளோரைடு சேர்மமாகும்.

ஆக்சிசன் மோனோபுளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
புளோரின் ஆக்சைடு, புளோராக்சி இயங்குறுப்பு, புளோராக்சிடேனைல்
இனங்காட்டிகள்
12061-70-0 Y
ChEBI CHEBI:30242
ChemSpider 4937269
Gmelin Reference
535
InChI
  • InChI=1S/FO/c1-2
    Key: FXOFAYKVTOLJTJ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6432002
  • [O]F
பண்புகள்
OF
வாய்ப்பாட்டு எடை 35.00 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு
  • ஆக்சிசன் இருபுளோரைடு (OF2) வெப்ப ஒளிவேதியியல் சிதைவுக்கு உட்படுவதால் ஆக்சிசன் மோனோபுளோரைடு உருவாகிறது.[4]
OF2 -> OF + F
  • புளோரின் வாயுவும் ஓசோனும் வினை புரிவதாலும் ஆக்சிசன் மோனோபுளோரைடு உருவாகிறது:[5]
F + O3 -> OF + O2

வளிமண்டலம்

தொகு

வளிமண்டலத்தில் O2F மற்றும் OF போன்ற ஆக்சிசன் மற்றும் புளோரின் கொண்ட இயங்குறுப்புகள் தோன்றுகின்றன. இவையும் மற்ற ஆலசன் இயங்குறுப்புகளூம் சேர்ந்து, வளிமண்டலத்தில் ஓசோனின் அழிவில் பங்கேற்கின்றன. இருப்பினும், ஆக்சிசன் மோனோபுளோரைடு இயங்குறுப்புகள் ஓசோன் சிதைவில் பெரிய பங்கு வகிக்காது என்று கருதப்படுகிறது. ஏனெனில் வளிமண்டலத்தில் உள்ள தனி புளோரின் அணுக்கள் மீத்தேனுடன் வினைபுரிந்து ஐதரோபுளோரிக் அமிலத்தை உருவாக்குகின்றன. இச்சேர்மம் மழையில் வீழ்படிவாகிறது.[6]

O3 + F → O2 + OF
O + OF → O2 + F

மேற்கோள்கள்

தொகு
  1. Colussi, A. J.; Grela, M. A. (21 October 1994). "Rate of the reaction between oxygen monofluoride and ozone: Implications for the atmospheric role of fluorine" (in en). Chemical Physics Letters 229 (1): 134–138. doi:10.1016/0009-2614(94)01021-8. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-2614. Bibcode: 1994CPL...229..134C. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0009261494010218. பார்த்த நாள்: 27 March 2023. 
  2. Langhoff, Stephen R.; Bauschlicher, Charles W.; Partridge, Harry (November 1983). "Theoretical study of the dipole moment of oxygen monofluoride (OF)". Chemical Physics Letters 102 (4): 292–298. doi:10.1016/0009-2614(83)87044-4. Bibcode: 1983CPL...102..292L. https://ntrs.nasa.gov/citations/19840041941. பார்த்த நாள்: 27 March 2023. 
  3. "Oxygen monofluoride" (in ஆங்கிலம்). National Institute of Standards and Technology. பார்க்கப்பட்ட நாள் 27 March 2023.
  4. Haupt, Axel (22 March 2021). Organic and Inorganic Fluorine Chemistry: Methods and Applications (in ஆங்கிலம்). Walter de Gruyter GmbH & Co KG. p. 99. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-065933-7. பார்க்கப்பட்ட நாள் 27 March 2023.
  5. Nikitin, I. V. (13 March 2008). "HALOGEN MONOXIDES" (in ரஷியன்). Institute of Problems of Chemical Physics, Russian Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 27 March 2023.
  6. Francisco J. S. (1993). "An ab initio investigation of the significance of the HOOF intermediate in coupling reactions involving FOO x and HO x species". The Journal of Chemical Physics 98 (3): 2198–2207. doi:10.1063/1.464199. Bibcode: 1993JChPh..98.2198F. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்சிசன்_மோனோபுளோரைடு&oldid=3905480" இலிருந்து மீள்விக்கப்பட்டது