ஆக்டினியம்(III) பாசுபேட்டு

வேதிச் சேர்மம்

ஆக்டினியம்(III) பாசுபேட்டு (Actinium(III) phosphate) என்பது AcPO4என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆக்டினியத்தின் பாசுபேட்டு உப்பான இச்சேர்மம் கதிரியக்கப் பண்புடன் வெண்மை நிறத்தில் காணப்படுகிறது.

ஆக்டினியம்(III) பாசுபேட்டு[1]
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஆக்டினியம் மோனோபாசுபேட்டு, ஆக்டினியம் ஒற்றைபாசுபேட்டு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/Ac.H3O4P/c;1-5(2,3)4/h;(H3,1,2,3,4)/q+3;/p-3
    Key: PVLPTTWSKILMQQ-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
  • [O-]P(=O)([O-])[O-].[Ac+3]
பண்புகள்
AcPO4
வாய்ப்பாட்டு எடை 321.9714 கி/மோல்
தோற்றம் வெண் திண்மம்
அடர்த்தி 5.48 கி/செ.மீ3
கட்டமைப்பு
படிக அமைப்பு அறுகோணம்[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

ஆக்டினியம்(III) குளோரைடுடன் மோனோசோடியம் பாசுபேட்டு எனப்படும் ஒற்றைசோடியம் பாசுபேட்டை வினைபுரியச் செய்து இது தயாரிக்கப்படுகிறது. இத்தயாரிப்பின்போது முதலில் ஓர் AcPO4•1/2H2O என்ற ஓர் அரை நீரேற்று தோன்றுகிறது. எக்சு-கதிர் விளிம்பு விளைவு சோதனையிலும் இது உறுதிப்படுத்தப்படுகிறது. இக்கலவை 700 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடுபடுத்தப்பட்டால் நீரற்ற ஆக்டினியம்(III) பாசுபேட்டு உருவாகிறது. மாசுக்கள் காரணமாக இது கருப்பு நிறத்தில் திண்மமாக கிடைக்கிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 the University of Michigan (1948). The Preparation of Actinium Compounds (in English). U.S. Atomic Energy Commission, Technical Information Division. p. 4. பார்க்கப்பட்ட நாள் 16 April 2021.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. Zachariasen, W. H. (1948). "Crystal chemical studies of the 5f-series of elements. I. New structure types". ActaCrystallographica 1 (5): 265–268. doi:10.1107/S0365110X48000703. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்டினியம்(III)_பாசுபேட்டு&oldid=3350258" இலிருந்து மீள்விக்கப்பட்டது