ஆங்கிலத்துடன் இணைந்திருப்போம்

ஆங்கிலத்துடன் இணைந்திருப்போம் (Connect With English) என்பது ஆங்கில மொழிக் கல்வி-சார் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இது 1997-இல் பாஸ்டன் அன்னன்பெர்க் ஊடகம் வழியாகப் பதிவு செய்யப்பட்டு ஆங்கிலம் கற்கும் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் தயாரிக்கப்பட்டது. 48 பகுதிகளைக் கொண்ட இத்தொடர் ஆங்கிலத்தை மொழிபு புனைக்கதையின் மூலமாகக் கற்பிக்கிறது.[1] இந்த நிகழ்ச்சி 1998 ஆம் ஆண்டில் ஒளிபரப்பானது.[2]

வரலாறு தொகு

இந்த நிகழ்ச்சி 1998 -இல் திரையிடப்பட்டுப் பல பிபிஎசு நிலையங்களால் அமெரிக்க மாநிலங்களில் ஒளிப்பரப்பட்டது.[3] ஆன்னபெர்க் ஒளியலை வரிசை என்பது , கம்பிவடம், துணைக்கோள் தொலைக்காட்சிகள் மூலம் பாடசாலைகளுக்கும், ஏனைய சமூக நிறுவனங்களுக்கும் ஒளிபரப்புச் சேவைகளை வழங்கிவரும் ஒரு தொலைக்காட்சி நிறுவனம் ஆகும். குறிப்பிட்ட சிறப்பு மிக்க நடிகர்களான காரின் ஆங்கிலின், கார்லோஸ் லாகாமாரா மற்றும் மார்க் கான்சுயுலோஸ் ஆகியோர் இத்தொடரில் நடித்தனர்.[3]

முக்கியக் கதாப்பாத்திரங்கள் தொகு

  • அல்பெர்டோ மனுவேல் மென்டோசா - (மார்க் கான்சுயுலோஸ்) இவர் சான் பிரான்ஸிஸ்கோவைச் சார்ந்தவர். ஒரு கட்டிட கலைஞர், ஓய்வு நேரத்தில் படம்பிடிப்பது இவருக்கும் பிடிக்கும். ரெபேக்கா பாலைவனம் வழியாகப் பயணம் செய்யும் போது அவளது வாகனம் பழுதடைந்த நிலையில் முதன்முறையாக அவளைச் சந்திக்கிறார். இவளுக்கு உதவிசெய்து மீட்டபின் சான்பிரான்ஸிஸ்கோவிற்கு அழைத்துச் செல்கிறார். அவள் மீது காதல் பிறக்கிறது. அவளோ அவனது உறவை ஏற்றுக்கொள்ளத் தயாராகவில்லை. இவர் மெக்சிக்கோ வம்சாவழியைச் சேர்ந்தவர்.
  • ரமோன் மென்டோசா - (கார்லோசு லக்கமாரா)

சான்றுகள் தொகு

  1. தொலைக்காட்சியின் வழியாக கற்றலை வழங்கல் " தெ ஸ்டார் லெட்ஜர் (நுவார்க்), 14-06-2001, page 5.
  2. Nancy Reichardt. "Actor from Brandon finishes PBS series," The Tampa Tribune, August 25, 1996, Metropolitan section, page 45.
  3. 3.0 3.1 நான்சி ரீச்சர்ட். "பிராண்டனைச் சேர்ந்த நடிகர் பிபிஎஸ் தொடர்," தி டம்பா ட்ரிப்யூன், 25-08-1996, மெட்ரோபொலிட்டன் பிரிவு, பக்கம் 45.

வெளி இணைப்புகள் தொகு