ஆசிசு கான் தேவ்சர்மா (Aashish Khan Debsharma) (பிறப்பு 5 திசம்பர் 1939) இவர் ஓர் இந்திய பாரம்பரிய இசைக்கலைஞரும், சரோத் இசைக் கலைஞருமாவார். இவரது "கோல்டன் ஸ்ட்ரிங்ஸ் ஆஃப் தி சரோத்" என்ற இசைத் தொகுப்பிற்காக 'சிறந்த உலக இசை'ப் பிரிவில் 2006 இல் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். இவர் சங்கீத நாடக அகாதமி விருதையும் பெற்றவர். ஒரு கலைஞர், இசையமைப்பாளர் மற்றும் நடத்துனர் என்பது மட்டுமல்லாமல், கலிபோர்னியாவின் கலை நிறுவனத்தில் இந்திய பாரம்பரிய இசையின் துணை பேராசிரியராகவும், அமெரிக்காவில் உள்ள சாண்டா குரூஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் இணை பேராசிரியராகவும் உள்ளார்.

ஆசிசு கான் தேவ்சர்மா
பின்னணித் தகவல்கள்
பிறப்பு5 திசம்பர் 1939 (1939-12-05) (அகவை 84)
பிறப்பிடம்மைகார், இந்தியா
இசை வடிவங்கள்இந்திய பாரம்பரிய இசை
தொழில்(கள்)சரோத், இசையமைப்பாளர், கல்வியாளர்
இசைக்கருவி(கள்)சரோத்
இசைத்துறையில்1970–தற்போது வரை
இணைந்த செயற்பாடுகள்அலாவுதீன் கான்
அலி அக்பர் கான்
ரவி சங்கர்
சியார்சு ஆரிசன்
எரிக் கிளாப்டன்

உஸ்தாத் அலாவுதீன் கான் பாரம்பரியம்

தொகு

இவர் 1939 ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் ஒரு சிறிய சுதேச மாநிலமான மைகாரில் பிறந்தார். அங்கு இவரது நன்கு அறியப்பட்ட தாத்தா அலாவுதீன் கான், அரசவைக் கலைஞ்ராக இருந்தார். இவரது தாயார் மறைந்த சுபீதா பேகம் அலி அக்பர் கானின் முதல் மனைவியாவார். இவர் தனது ஐந்து வயதில் இந்துஸ்தானி இசையில் தனது தாத்தாவால் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டார். இவரது பயிற்சி பின்னர் இவரது தந்தை அலி அக்பர் கான் மற்றும் இவரது அத்தை அன்னபூர்ணா தேவி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் தொடர்ந்தது. இவருக்கு முந்தைய திருமணத்திலிருந்து பராசு மற்றும் நுசரத் கான் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தொழில்

தொகு

கான் மைகாரிலும், கொகொல்கத்தாவிலும் வளர்ந்தார். புகழ்பெற்ற பாரம்பரிய வட்டாரங்களில் இந்திய பாரம்பரிய இசையை நிகழ்த்தினார். இவர் தனது 13 வயதில், தனது தாத்தாவுடன், புதுதில்லி அனைத்திந்திய வானொலியின் "தேசிய நிகழ்ச்சியில்" தனது முதல் பொது நிகழ்ச்சியை வழங்கினார். அதே ஆண்டில், கொல்கத்தாவில் நடந்த "தான்சேன் இசை மாநாட்டில்" தனது தந்தை மற்றும் தாத்தாவுடன் நிகழ்த்தினார், அப்போதிருந்து இவர் இந்திய துணைக் கண்டத்திலும் வெளிநாட்டிலும் பாரம்பரிய இசை மற்றும் உலக இசையின் முக்கிய இடங்களில் நிகழ்த்தினார்.

அங்கீகாரம்

தொகு

இவருக்கு 2002 இல் அமெரிக்காவின் இல்லினாய்சு கலை சங்கத்தின் கூட்டாளர் கௌரவமும், 2005இல் சங்கீத நாடக அகாதமி விருதும் வழங்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டில், 'சிறந்த உலக இசை' பிரிவில் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். மே 24, 2007 அன்று, பிரித்தன் மற்றும் அயர்லாந்தின் ஆசிய சமூகத்தின் கூட்டாளரான முதல் இந்திய பாரம்பரிய இசைக்கலைஞர் ஆனார். இது ஆசிய கலை மற்றும் கலாச்சாரத்தில் இங்கிலாந்தின் மிக உயர்ந்த சமூகமாகும். [1]

குறிப்புகள்

தொகு
  1. [1] பரணிடப்பட்டது 8 ஆகத்து 2014 at the வந்தவழி இயந்திரம் Royal Asiatic Society News

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிசு_கான்&oldid=3232684" இலிருந்து மீள்விக்கப்பட்டது